அன்பான உறவுகளே..
இன்று காலை எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
எனது வலைப்பக்கத்தைத் திறக்கிறேன் அங்கே இன்றுவரை வேர்களைத்தேடிவந்த நிழல்களான பின்தொடர்வோர் கேட்கெட்டைக் காணவில்லை..!!!
அதற்குப் பதிலாக புதிய பின்தொடர் இணைப்பு இருந்தது..?
கூகுள் செய்யும் மாற்றங்களில் இதுவும் ஒன்றா?
இல்லை எனது கணக்கில்தான் அமைப்பில் எதுவும் மாறுதல் வந்துவிட்டதா என்று குழப்பமாக இருந்தது.
நானும் சென்று ஏதேதோ செய்துபார்த்தேன் எந்த மாற்றமுமில்லாமல்..
ஒரு பின்தொடர்வோர் கூட இல்லாமல் புதுப்பொலிவுடன்...
நீங்கள்தான் முதலாவது..
பின்தொடர விரும்புகிறீர்களா என்று சிரித்துக்கொண்டே கேட்டது என் பின்தொடர்வோர் இணைப்பு..
துன்பம் வரும் போது சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்..??
நானும் சரி...
நிலையாமை பற்றியே தொடர்ந்து எழுதுவரும் நமக்கு..
கூகுள்...
“நிலையாமையை அறிவுறுத்துகிறதோ..“ என்று எண்ணிக்கொண்டே..
பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்..
மனதிற்குள் கொஞ்சம் வலி இல்லாமல் இல்லை..
“தமிழ் மொழியின் பண்பாட்டை மட்டுமே இலக்கியங்கள் வழித்தேடும் வேர்களைத் தேடி வந்த நிழல்கள் ஒன்றல்ல இரண்டல்ல.. 513 பேர்...
அத்தனை பேரின் வலைப்பக்கங்களையும் ,முகங்களையும் தொலைத்துவிட்டோமே என்ற வருத்தம் மனதுக்குள் இருந்தது..
காலம் எத்தனை வியப்புகளை ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கிறது.
ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் என் வலைப்பக்கத்துக்கு வருகிறேன்..
513 நிழல்களும் மீண்டும் வேர்களைத் தேடி வந்தன..
அளவற்ற மகிழ்ச்சி கொண்ட இவ்வேளையில் தோன்றியது..
என்று வேண்டுமானாலும் இந்த நிலை மீண்டும் வரலாம் என்று..
அதனால் நிழல்களை நிழற்படமாக வைத்துக்கொள்ளலாம் என்று கருதி இங்கு வரிசைப்படுத்தியுள்ளேன்..
அன்பான நிழல்களே நன்றி சொல்லி உங்களை வேறுபடுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை..
நிழல்களுக்கு யாராவது நன்றி சொல்வார்களா?
உங்கள் நிழலில் நான் கொஞ்ச காலம்!
என் நிழலில் நீங்களும் கொஞ்ச காலம்!
தமிழோடு வாழ்வோம்!
“எழுத்துக்கள் வழி தமிழ் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும் என்ற நம்பிக்கையில்“
என்றும் உங்கள் நினைவுடன்..
நீங்கள்தான் முதலாவது..
பதிலளிநீக்குபின்தொடர விரும்புகிறீர்களா என்று சிரித்துக்கொண்டே கேட்டது என் பின்தொடர்வோர் இணைப்பு..//
ஹா.ஹா
இந்த நிலையில கூட ஒரு அருமையான தமிழ் வாக்கியம்..
சபாஷ்...
சில நேரங்களில் இப்படியும் நேரிடலாம் முனைவரே ..
பதிலளிநீக்குஇதுவும் ஒரு நல்ல வழி தான் ,, நானும் இதை பின் தொடர்கிறேன் ..
நன்றி
அடக் கடவுளே இது என்ன கூத்து
பதிலளிநீக்குஇப்படியும் நடக்குதா
புலவர் சா இராமாநுசம்
தேன்தமிழ் சும்மா பொங்கி வழியுது...!!!
பதிலளிநீக்குபிளாக்கை back up செய்து கொள்ளும் மெத்தடை பலே பிரபு என்பவர் தன் பதிவில் விளக்கியிருந்தார்.ஆனால் இன்று back up செய்தால் இதுவரை உள்ளது மட்டும் பத்திரப்படுத்த முடியுமா?,இனி வரும் இடுகைகளையும் பத்திரப்படுத்த முடியுமா என்ற விபரம் தெரியவில்லை.சமீபமாக பதிவுகளை பப்ளிஷ் செய்தால் டேஸ்போர்டில் டிஸ்பிளே ஆவதில்லை.அடுத்தவர் பதிவில் கமெண்ட் கொடுக்கும்போது நீங்கள் அனுமதிபெறவில்லை என்று வருகிறது.குறைந்தது ஒருமணி நேரத்திற்கு பிறகு நார்மலாகிறது.அதற்குள் பொறுமையிழந்து வேறு பதிவிற்கோ/சொந்த வேலைக்கோ சென்றுவிடுவேன்.
பதிலளிநீக்குசில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு, ஆனால் சில மணித்துளிகளில் சரியாகி விடுகிறது.. நிழல்களை மறந்து விடும் பலரில் நிழல்கள் குறித்து அக்கறை மெய் சிலிர்க்க வைத்தது..
பதிலளிநீக்குசரி தான் .
பதிலளிநீக்குஇதை அனைவருக்குமான எச்சரிக்கைப்
பதிலளிநீக்குபதிவாகக் கூடக் கொள்ளலாம்
பதிவுக்கு நன்றி த.ம 5
எப்படியெல்லாம் பயப்பட வேண்டியதாயிருக்கு..
பதிலளிநீக்குஆனாலும் 514க்கு வாழ்த்துக்கள்..
சிலநேரங்களில் எனக்கும் இப்படிப்பட்ட அதிர்ச்சி வந்தது முனைவரே...
பதிலளிநீக்குமனம் வெறுத்துப் போகத்தான் செய்தது...
திடீரென்று தனிமையில் விட்டது போல ஒரு உணர்வு ஏற்படும்...
என்ன செய்ய
எல்லாம் கூகுளின் திருவிளையாடல்கள்...
நல்லதொரு வழிமுறை சொல்லியிருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குவழி ஏற்கிறேன்
அருமை
பதிலளிநீக்குஒரு பதைபதைப்பு ஏற்பட்டதை உணர முடிகிறது!
பதிலளிநீக்குவலைப்பூ எத்தகைய ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது!
நன்றி வேர்களின் தேடல் வெற்றிபெற்றமைக்கு!
அருமை
பதிலளிநீக்குசில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு. ஆனால் முற்றிலும் நீக்கப்பட்டுவிடாது என்ற நம்பிக்கை உள்ளது. நிழற்படமாக செமிக்கும் ஐடியா வரவேற்கத்தக்கது.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நல்லதொரு பகிர்வு. திடீரென்று யாரையும் காணவில்லைஎனில் கொஞ்சம் அதிர்சியாகத்தான் இருந்திருக்கும் . திரும்ப நீங்க அதற்கு சரியான தீர்வு தேடியதுதான் இதில் ஹைலைட். வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குநன்று அய்யா!
பதிலளிநீக்குவிடாது கருப்பு...
பதிலளிநீக்கு//காலம் எத்தனை வியப்புகளை ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கிறது.//அருமை அன்பரே
பதிலளிநீக்குபுவியில் நிழல் தரையில் விழுகிறது..
பதிலளிநீக்குவலைப்பூவில் பலர் இடுப்பிலும், சிலர் தோளிலும் சுமப்பதை அன்றாடம் பார்க்கிறேன்.. ஆனால் முதல்முறையாக நெஞ்சில் சுமப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
நிலையற்றது வாழ்வு என்பதை மனிதன் மறக்கிறானல்லவா! அது தான் நினைவு படுத்துகிறது.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
இலக்கிய விருட்சத்தின் வேர்களைத் தேடிவந்த சின்னஞ்சிறு தூர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து மகிழ்வித்தத் தங்களுக்கு நன்றியும் பாராட்டும் முனைவரே.
பதிலளிநீக்குஉங்கள் வலையில் ஆனது போல் எங்கள் வலையில் ஆகாமல் பார்த்து கொள்வோம்.
பதிலளிநீக்குநீங்கள் எங்களுக்கு முண்ணோடியாக இருக்கிறீர்கள்
இன்று என் வலையில்
பதிலளிநீக்குப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்
உங்கள் நிழலில் நான் கொஞ்ச காலம்!
பதிலளிநீக்குஎன் நிழலில் நீங்களும் கொஞ்ச காலம்!
தமிழோடு வாழ்வோம்!
- வாழ்வோம்..
பதிர்வுக்கு நன்றி சகோ
காலம் எத்தனை வியப்புகளை ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கிறது.
பதிலளிநீக்குஎது வேண்டுமானாலும் நடக்கலாம். வாழ்க்கையே அதுதானே முனைவரே. கூரை இல்லாத வானத்துக்குக் கீழ் வாழ்கின்றோம். ஏதாவது வந்து விழுந்துவிடும் என்று சிந்திக்கின்றோமா? அப்படித்தான். நானே சிலவேளை நினைப்பேன். நமது கருத்துக்கள் எப்போது இத்தளத்தில் தலைமறைவாகுமோ என்று. ஆனால், உங்கள் இந்தச் சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. எல்லோருக்கும் இப்படிதஇ தோன்றாது இல்லையா?
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள்!
பதிலளிநீக்குகுணசீலா என்னப்பா இப்படி பயமுறுத்துறீங்க....
பதிலளிநீக்குஇருப்பதும் இல்லாமல் போனால் எங்கு தான் போவது இழந்ததை திரும்பப்பெற???
எப்படியோ ஒரு நம்பிக்கை எனக்கும் இருந்தது... கிடைச்சிடும் கிடைச்சிடும் காணாம போனது காக்கா ஊச் எல்லாமே திரும்ப கிடைச்சிடும்னு....
அட கிடைச்சிட்டுது பார்த்தீங்களா....
இதில் இருந்து நமக்கு கிடைத்த மெசெஜ் என்ன??
இத்தனை நாள் இருந்தது திடிர்னு இல்லாம போனால் பதறிடாம சட்டுனு திணறிடாம ஒரே ஒரு செகண்ட் நிதானிக்கனும். பொறுமையா என்னாச்சுன்னு கவனிக்கனும். இவ்ளோ சொல்றேனே. நானே உங்க நிலையில் இருந்தால் நீங்க பதறின போல தான் பதறி இருந்திருப்பேன். இது இயல்பு..
அன்புக்கு கட்டுப்பட்ட உள்ளங்களாச்சே... பதறாம இருக்குமா? அதான் எல்லாமே திரும்பி கிடைச்சிடுத்து. எனக்கும் சந்தோஷம்பா எல்லாமே திரும்ப கிடைச்சதுக்கு...
சொத்து சுகம் பணம் வீடு நகை போச்சுன்னு பதறலை நீங்க.. ஐயோ என்னை தொடரும் என் நிழல்களா இருக்கும் நீங்க யாவரும் காணலையேன்னு சொல்லி எங்க மனதை நெகிழவெச்ச்சுட்டீங்கப்பா..
பெருமையாவும் இருக்கு நானும் உங்க நிழல்களில் ஒன்றாய் இருப்பது..
இனி ஒன்னும் காணாம போகாது காக்கா ஊச் ஆகாது.. ததாஸ்து.....
உண்மைதான் திருமதி ஸ்ரீதர்.
பதிலளிநீக்குமகிழச்சி சூர்ய ஜீவா.
வருகைக்கு நன்றி நண்டு.
நன்றி இரமணி ஐயா.
நன்றி இந்திரா.
உண்மைதான் மகேந்திரன்.
உண்மைதான் தென்றல்
பதிலளிநீக்குநன்றி காந்தி
நன்றி விக்கி
நன்றி இரத்தினவேல் ஐயா
மகிழ்ச்சி கடம்பவனக் குயில்.
நன்றி சண்முகவேல்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சௌந்தர்.
நன்றி பிரேம்.
புரிதலுக்கு நன்றி இராஜா.
உண்மைதான் இலங்காதிலகம்.
நன்றி கீதா.
நன்றி சதீஷ்
நன்றி சின்னத்தூரல்.
பதிலளிநீக்குநன்றி இராஜேஷ்வரி.
நன்றி சந்திரகௌரி.
நன்றி ஜனா.
ஆழமான புரிதலுக்கும்
மிக நீண்ட கருத்துரைக்கும் நன்றி மஞ்சு.