வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

இதை நான் எதிர்பார்க்கல!!

Photobucket
1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு - இரண்டில் எது பிடிக்கும்??

உடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்!!

2.அனுபவம், ஆற்றல்?? - இரண்டில் எது சிறந்தது?
அனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது!!


3.கோபம், சிரிப்பு - இரண்டில் எது விரும்பத்தக்கது??

குழந்தையின் கோபம்! ஏழையின் சிரிப்பு!!

4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது??

துன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம்!! இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்!!

5.வெற்றி, தோல்வி – எது நல்லது??

தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி!

6.நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!!

7.செல்வம், வறுமை – இவற்றுல் எது நிலையானது??
செல்வமும், வறுமையும் மாறிமாறிவரும் என்ற மாற்றம் மட்டுமே நிலையானது!!

8.எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்??

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்!!

9.பற்று, துறவு – ஒரு சான்று தருக?

தாமரை இலையின் நீர்த்துளி போல நீருக்குள்ளே இருந்தாலும் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டும்!!

10.பரிசு, பாராட்டு – எது விலைமதிப்பு மிக்கது??
உணர்ச்சியற்ற பரிசை விட, மனம் நிறைந்த பாராட்டு விலைமதிப்பு மிக்கது!!

11.உண்மை, பொய் – இவற்றில் எதை நாம் நீக்கவேண்டும்??

உண்மைபோல பொய் பேசுவதையும்,
பொய் போல உண்மை பேசுவதையும் நீக்கவேண்டும்!!

12.கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது??

உளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது!!

13.சொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது?

பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!

14.கேள்வி, பதில் - எது அறிவை வளர்ப்பது??

மனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட, அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்!!



15.இயற்கை, அறிவியல் – இவற்றுள் எது தேவையானது??

இயற்கையைச் சிதைக்காத அறிவியலே தேவையானது!!

இப்படி என்னுள் தோன்றும் வினாக்களுக்கு, என் அறிவுக்கு எட்டியவரை விடை சொல்லியிருக்கிறேன்..

இதே கேள்விக்குத் தங்கள் அறிவுக்கு எட்டிய பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்படித்தான் என் வகுப்பில் மாணவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு அவர்கள் சிந்தித்துப் பதிலளிக்க வாய்ப்பளிப்பேன்.

அப்படியொருநாள் “வெற்றிக்கு வழி“ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு பதில் சொல்லவேண்டும். ஆனால் ஒருவர் சொன்ன பதிலை இன்னொருவர் சொல்லக்கூடாது என்று விதிமுறை விதித்திருந்தேன்.

ஒவ்வொரு மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற பயனுள்ள பல குறிப்புகளைச் சொல்லி வந்தார்கள். எல்லோரும் சொல்லி முடிததவுடன் என் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

அவர்கள் எடுத்த மதிப்பெண்களைவிட அவர்கள் சிந்தித்துச் சொன்ன ஒவ்வொரு குறிப்புகளும் மதிப்புமிக்கனவாகவே எனக்குத் தெரிந்தன.

அப்போது அவர்களிடம் கேட்டேன்...

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்புகளைச் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. இக்குறிப்புகள் எல்லாம் கொண்ட நபரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டேன்.

(மாணவர்கள் இல்லை என்று பதில் சொல்வார்கள். நான் உண்மைதான் இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது! இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் என்று சொல்ல எண்ணியிருந்தேன்)

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து இவ்வெல்லாப் பண்புகளும் கொண்ட நபரைப் பார்த்திருக்கிறோம் ஐயா என்றார்கள்!!!!!!

அப்படியா எங்கே? யாரை? என்றேன்.

மாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்!!

சில மணித்துளிகள் ஆடிப்போய்விட்டேன்!

(எனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் பொய்சொல்கிறார்கள்! நகைப்புக்காகவோ, என் மீது கொண்ட அன்பின் மிகுதியாலோ இவ்வாறு சொல்கிறார்கள் என்று)

சில மணித்துளிகளில் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னேன்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி!

நீங்கள் சொல்வது உண்மையென்றால்.........

“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.


அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே! என்றேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.

(அன்பின் உறவுகளே...
நேற்று நான் வெளியிட்ட “கல்வி உளவியல்“ என்னும் இடுகை நேற்று “இளமை விகடனில்“ வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.)

80 கருத்துகள்:

  1. வெறும் கேள்விகளை மட்டும் பார்க்கையில்
    மிகவும் கடினமான கேள்விகளாகப் பட்டது
    பின் பதில்களைப் படிக்கையில் இதுதான்
    இதற்கான மிகச் சரியான பதிலாகப் பட்டது
    இந்தக் கேள்விகள் சிந்திப்பதற்கான நல்ல
    பயிற்சியாகப் படுகிறது
    நல்ல பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் ,அதிலும் கடைசியாக சொன்னது அருமை .

    வழிகாட்டுபவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்து அருமை

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மணம் இணைய வில்லை நண்பரே பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  4. முதலில் ஒரு அற்புதமான பதிவொன்றை வழங்கியதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது வலையிலும் வெற்றியின் ரகசியங்கள்தான்.. நீங்கள் வந்து கருத்தும் சொன்னீர்கள் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. 15 கேள்விகளும் அதற்கான பதிலகளும் ஒரு ஆசிரியனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த உபதேசங்கள்,,

    உங்கள் வகுப்பில் நானொரு மாணவனாக இல்லையே என்ற கவலை வந்தது என் மனதில்

    பதிலளிநீக்கு
  7. //தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
    வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//

    இது மட்டும் கொஞ்சம் புரியவில்லை எனக்கு

    பதிலளிநீக்கு
  8. //பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!//

    எனக்கும் மெளனமே பிடிக்கும், அதுதான் உலகின் அழகிய மொழி!

    பதிலளிநீக்கு
  9. ''..நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே!''.. என்றேன்.
    இதில் நீயா நானா என்ற கேள்விக்கு பதிலோ?...மிக அருமை. வித்தியாசமாக உள்ளது. மறுபடியும் வாசிக்க நினைக்கிறேன். வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. முதலில் உங்கள் கட்டுரை இளமை விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் முனைவரே.
    தரமான நல்ல படைப்புகளை தருகிறீர்கள்.

    இன்று வெற்றிக்கு வழி அருமை.
    நீங்கள் கேட்ட கேள்விகளை
    திரும்பத் திரும்ப நானும் என்னையே கேட்டு பார்த்தேன்.
    பல விடைகள் கிடைத்தது.
    சிந்திக்க வைத்ததற்கு மிக்க நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  11. வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.

    வாழ்வியல் பயனுள்ள பயிற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான பதிவொன்றை வழங்கியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. // என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது. //
    உங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
    உங்களது ‘கல்வி உளவியல்’ இடுகை இளமை விகடனில் வெளியானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அறிவார்ந்த கேள்விகளும் அழகிய பதில்களும்.. தங்களை ஒரு படித்த, பட்டறிவாளராக அடையாளப்படுத்துகிறது குணா. நானும் படிக்கிறேன் தங்களிடம் நிறைய...
    வலைப்பு மாணவியாக...

    பதிலளிநீக்கு
  16. மன்னிக்கவும் வலைப்பூ மாணவியாக...

    பதிலளிநீக்கு
  17. //எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்??

    எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்!! //

    சரியாக சொன்னீங்க முனைவரே, நிறய பேர் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம். நன்றி

    பதிலளிநீக்கு
  18. //கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது??

    உளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது!! //

    மிக மிக அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  19. குணா,உங்கள் மாணவியாக இருந்திருக்கலாமே என்று ஏங்க வைத்து விட்டீர்கள்...!!!!

    பதிலளிநீக்கு
  20. நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
    நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
    நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!!

    அருமையான பதில் பேராசிரியரே..

    பதிலளிநீக்கு
  21. //நீங்கள் சொல்வது உண்மையென்றால்.........

    “நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.

    அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே! என்றேன்.

    என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது. //

    இத்தகைய அறிவாளியான தங்களிடம் மாணவனாக இருந்து பாடம் கற்க முடியவில்லையே என என் மனம் வருந்துகிறது.

    நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு ந்ன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    பதிலளிநீக்கு
  22. //தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
    வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//

    இது மட்டும் கொஞ்சம் புரியவில்லை எனக்கு.

    தங்கள் கருத்துரைக்கு நன்றி ரியாஷ்

    தொடர்ந்து கிடைக்கும் வெற்றிக்கும்
    தொடர்ந்து கிடைக்கும் தோல்விக்கும்

    வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்விக்கும்
    தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றிக்கும்

    நிறைய வேறுபாடு உண்டு நண்பரே..

    தொடர்ந்து கிடைக்கும் வெற்றி எதிர்பார்ப்பை அதிகரிக்கும்
    ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளாது.

    தொடர்ந்து கிடைக்கும் தோல்வி ஏமாற்றத்தை அதிகரிக்கும்
    வெற்றியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்.

    அதனால்தான்

    //தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
    வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி//

    வேண்டும் என்றேன்.
    இதனால்.

    வெற்றி வந்தால் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாட மாட்டோம்

    தோல்வி வந்தால் வருந்தி தன்னம்பிக்கை இழந்துவிடமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல பதிவு குணசீலன், தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல சிந்தனைமிக்க பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..

    வாழ்த்துகள் நண்பா..

    பதிலளிநீக்கு
  25. பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!//

    தங்களது அறிவு தேடலான கேள்வி பதில்கள் மிகவும் பயனுள்ளது பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  26. நீங்கள் சொல்வது உண்மையென்றால்.........
    “நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.

    நல்ல விடை..........

    "கல்வி உளவியலுக்கு "
    வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  27. மகிழச்சி மகேந்திரன்.
    கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. தாங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ....

    பதிலளிநீக்கு
  29. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  30. கோபால கிருஷ்ணன் ஐயா தங்களைப் போன்ற அனுபவசாலிகளிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது..

    என்மீது கொண்ட அன்பிற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சின்னத்தூரல்.

    பதிலளிநீக்கு
  32. அருமை.
    //மாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்!! //

    உங்க மாணவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு தெரிகிறது.

    “நான் ஒரு கண்ணாடி“ என்றேன். //

    இந்த வார்த்தைகளில் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. //இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது! இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் //

    உண்மைதான் அய்யா! மாணவர்கள் தங்கள் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. நாம் இந்த சமூகத்துக்கு என்ன தருகிறோமோ
    அதைத்தான் இந்த சமூகமும் திருப்பித்தரும்என்பதை முழுவதும் நம்புகிறேன் சண்முகவேல்.

    கருத்துரைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  35. ஒரு நல்லாசிரியரை,தமிழறிஞரை அறிமுகம் செய்து வைத்த தமிழ்ப் பதிவுலகத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  36. உங்கள் ஒவ்வொரு பதிவிலும் எங்களை வாழ்க்கைப்பள்ளிக்கும் கல்லூரிக்கும்
    அழைத்து செல்கிறீர்கள் முனைவரே...

    பதிலளிநீக்கு
  37. உங்களைப் போன்றவரை ஒரு ஆசிரியராகப் பெற்ற அந்த மாணவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் நண்பரே.. நல்ல விஷயங்களை அழகாய் சொல்லி இருக்கும் விதம் அழகு..

    பதிலளிநீக்கு
  38. நல்ல அருமையான கேள்வி பதில் .ரொம்ப யோசித்து பதில் சொன்னா கூட நான் இப்படி சொல்ல மாட்டேன்.உங்கள் “கல்வி உளவியல்“ படித்தேன் . நான் கூட "Technicial Instructor" தான். ஆனால் Defence ல சில கட்டுபாடுகள் உள்ளது. முழுக்க முழுக்க உங்கள் கூற்று படி நடக்க முடியாது என்றாலும் 90% முடியும். அதை நான் என்னுடைய வழியில் அமல் படுத்தி பார்க்கிறேன். என் தங்கை கூட ஆசிரியை தான் .அவருக்கு “கல்வி உளவியல்“உரலியை அனுப்பியாச்சு . ஒவ்வொரு ஆசிரியரும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டிய விஷயம் அது.

    பதிலளிநீக்கு
  39. நல்ல அருமையான கேள்வி பதில். ரொம்ப யோசித்து பதில் சொல்லுங்க என்றாலும் ,நான் இப்படி பதில் சொல்ல மாட்டேன். நெறைய கேள்விக்கு பதில்லே தெரியாது என்பது தான் உண்மை. உங்கள் “கல்வி உளவியல்“ படித்தேன். நான் கூட "Technical Instructor"க தான் உள்ளேன்.இங்கே Defence ல் சில கட்டுபாடுகள் உள்ளது. நீங்கள் கூறியபடி முழுக்க முழுக்க நடக்க முடியாது என்றாலும் ஒரு 90% பின் பற்ற முடியும். என் வழியில் நடைமுறை படுத்த முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. தங்களைப் போன்ற நல்ல நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நான் தான் சென்னைப்பித்தன் ஐயா பதிவுலகத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்

    நன்றி.

    பதிலளிநீக்கு
  41. தங்கள் வருகைக்கும்,தன் மதிப்பீட்டிற்கும், கருத்துரைக்கும், நன்றிகள் வெட்டிப்பையன்.

    பதிலளிநீக்கு
  42. very interesting, especially the last lines that i replicate your side being a mirror ..truly astounding lines...good one...

    பதிலளிநீக்கு
  43. சிக்கலான கேள்விகளுக்கும் இயல்பான பதில்களை தந்திருக்கிறீர்கள்.. ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  44. இளமை விகடனில் உங்கள் ஆக்கம் வெளியானதற்கு சிறப்பான பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  45. ஆதிரா said...
    அறிவார்ந்த கேள்விகளும் அழகிய பதில்களும்.. தங்களை ஒரு படித்த, பட்டறிவாளராக அடையாளப்படுத்துகிறது குணா. நானும் படிக்கிறேன் தங்களிடம் நிறைய...
    வலைப்பு மாணவியாக...//

    ஆசிரியரிடம் கோல்சொல்லும் மாணவனாக நான்... வலைப்பூ மாணவியாக என்பதற்கு மியாவ்...வலைப்பு மாணவியாக என்று சொல்லியிருக்கிறார்... இதை வன்மையாக கண்டித்து... ஒரு மணி நேரம் வெயிலில் முட்டி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  46. வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  47. ஆசிரியர் என்பவர் தன் மாணாக்கரை நல்வழியில் நடைப்யில வைக்க சிறந்த குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்..

    ஆனால், ஒரு கண்ணாடியாய்ச் செயல்பட்டு மாணவர்களின் நன்னடத்தைக்கு அவர்களையே காரணமாக காட்டி, அவர்களைப் பெருமையடையச் செய்து, மேன்மேலும் நல்லொழுக்கங்களை வளர்க்க வழிவகை செய்த நல்லாசிரியருக்கு என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  48. நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
    நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
    நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!! //

    நம் வாழ்வை செதுக்கும் அற்புத வரிகள்

    பதிலளிநீக்கு
  49. சொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது?

    பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!! //

    மிக அருமையானதொரு வரிகள்...

    பதிலளிநீக்கு
  50. நலம்விரும்பி வணக்கம்

    இதை நான் எதிர்பார்க்கல!!இடுகை தொகுப்பு பற்றிய
    சிறு வரிகள்..,
    உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த மிகப் பெரியது.

    விருது,பரிசு,பாராட்டு,புகழாரம் என்று எதைச் சொல்வது.

    இதில் எதுவும் இல்லை-ஆனால் ஒன்று உள்ளது அது தான்
    மாணவர்கள்.
    \
    நான் உங்களின் மாணவனாக இருப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.இன்னோரு பிறப்பு ஒன்று இருந்தால்
    உங்களின் மாணவனாகவே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு