வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பாத்திறம் அறிந்து பிச்சையிடு!



பழமொழிகள் என்பவை நம் முன்னோர்களின் அனுபவ மொழிகளாகும். இவை நம் முன்னோர் நமக்காகச் சேர்த்து வைத்துச் சென்ற அழியாத செல்வங்களாகும்! அதன் பொருள் மாற்றிப் பயன்படுத்துவதும், தவறாகப் புரிந்துகொள்வதும் நம் அறியாமையின் அடையாளம் என்றே உணர்கிறேன்.

இதோ...

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!
பாத்திறம் அறிந்து பிச்சையிடு!


இவற்றில் எது சரியானது?

பாத்திரம் – சமையக்க பயன்படுத்தும் கலம், கதை மாந்தர்.
பாத்திறம் – பாவாகிய செய்யுளின் திறம்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!

1. இன்றைய வழக்கில் பிச்சையெடுப்பவர் பாத்திரத்தை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாரா? என்பதை அறிந்து பிச்சையிடவேண்டும் என்று பொருள் வழங்கிவருகிறோம். இதை வைத்து கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகூட வந்துள்ளது.
2. நாடகத்திலோ, திரைப்படத்திலோ இடம்பெறும் கதை மாந்தர்களின் திறன் அறிந்து அவர்களுக்குத் தக பாத்திரத்தை வழங்குதல்.
என இருபொருள் வழங்கி வருகிறோம்.

பாத்திறம் அறிந்து பிச்சையிடு!

வள்ளல்களை நாடிச் சொல்லும் புலவர்கள் தம் பாடல் பாடி பரிசில் பெற்றுவந்தனர்.
சில மன்னர்கள் பாவின் (செய்யுள்) திறன் அறியாது கொடை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இச்சூழலில்தான் இந்தப் பழமொழி உருவாகியிருத்தல் வேண்டும். இதோ அதற்கான சூழல்...

ஒருநாள் கபிலர் என்னும் சங்கப்புலவர், திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களையும் ஒரே மாதிரிப் பார்க்கும் வழக்கம் கொண்ட காரியும் பிற புலவர்களைப் போலவே கபிலரையும் மதித்துப் பொருள் வழங்கினான். அப்போது கபிலர்..

மன்னா!!
யாவருக்கும் கொடுத்தல் எளிது!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகுதியுடையவராவர். அவர்தம் தகுதியை உணர்ந்து அதற்குத்தகப் பொருள் வழங்குதல் அரிது!
அதனால் புலவர்களைப் பொதுவாகக் காணும் வழக்கத்தை நிறுத்துவாயாக.! என்றார்.
பாடல் இதோ...

ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈத லெளிதே மாவண் டோன்றல்
5 அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.

புறநானூறு (121)

திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி.
மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது.

பாடல் வழியே..

1. பாத்திறம் அறிந்து பிச்சையிடு! என்ற பழமொழியே அறியாமையாலோ, காலத்துக்கு ஏற்ப மாறியோ பாத்திரம் அறிந்து பிச்சையிடு! என்று மாறியிருக்கவேண்டும் என்ற கருத்தை எடுத்தியம்புவதாக இப்புறப்பாடல் அமைந்துள்ளது.

2. இன்றைய சூழலில் இந்தப் பழமொழியை “பா (செய்யுள்) த்திறம் அறிந்து பிச்சையிடு என்று பயன்படுத்த இயலாது. அதே நேரம்...

பசியுடன் இருப்பவருக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற பழமொழியை மனதில் கொண்டு...

பிச்சையெடுப்பதை ஊக்குவிக்காது, நம்மால் முடிந்தால் அவர்கள் திறனை அறிந்து அவர்கள் உழைத்து வாழத் துணை நிற்போம்!

என்று பொருள் கொள்வதே சரியாக அமையும் என்று கருதுகிறேன்.

நம் மரபுகளை உணர்வோம். அடுத்த தலைமுறைக்கும் நம் பண்பாட்டை உணர்த்துவோம்.

55 கருத்துகள்:

  1. பாத்திரம் - பாத்திறம் ...,
    அருமையான சொல்லாடல். எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. பதிவின் திறம் அறிந்து வாக்கு - பின்னூட்டம் இடு # இது பதிவுலக மொழி.
    திறன்மிக்க உங்கள் பதிவுக்கு எனது வாழ்த்துக்களும், வாக்குகளும்..

    பதிலளிநீக்கு
  3. பிச்சையெடுப்பதை ஊக்குவிக்காது, நம்மால் முடிந்தால் அவர்கள் திறனை அறிந்து அவர்கள் உழைத்து வாழத் துணை நிற்போம்! //

    நாத்திறம்றிந்து உரைத்த் பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாக்குகளும்.

    பதிலளிநீக்கு
  4. பாத்திறம்--அருமையான விளக்கம்.தெளிவு கிடைத்தது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஒரு எழுத்தின் மாற்றத்தால் பொருளே மாறிப்போகிறது.
    பாத்திறம் அறிந்து பிச்சையிடு
    விளக்கம் அருமை முனைவரே.
    இலக்கிய இன்பம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  6. //நம் பண்பாட்டை உணர்த்துவோம்.// நல்ல வார்த்தை .

    பதிலளிநீக்கு
  7. பசியுடன் இருப்பவருக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
    மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற பழமொழியை மனதில் கொண்டு... //

    அழகான உதவி புரியும் தத்துவத்தை பழமொழி வைத்து எடுத்துரைத்தமைக்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  8. ர , ற இரு எழுத்து மாறுவதால் காலங்காலமாக நம்மிடையே தொடர்ந்து வருவதால் அதற்கான அர்த்தமும் நம்மை சேரும்போது மாறி விடுகிறது... விளக்கிய விதம அருமை நண்பா

    பதிலளிநீக்கு
  9. பழமொழி விளக்கம் மிக அருமை.
    இன்றைக்கு அநேக பழமொழிகள் இவ்வாறுதான் தவறான உபயோகப்படுத்தப்படுகின்றன.
    இதுபோல் இன்னும் பல பழமொழிகளைப்பற்றிய உண்மையான பொருளை தாங்கள் விளக்கலாமே?

    பதிலளிநீக்கு
  10. பழமொழிக்கான சரியான விளக்கமும் கொடுத்து
    அது தொடர்புடைய பாடலையும்
    கொடுத்து அசத்தியமைக்கு நன்றி
    த ம 10

    பதிலளிநீக்கு
  11. //பாத்திறம் அறிந்து பிச்சையிடு! என்ற பழமொழியே அறியாமையாலோ, காலத்துக்கு ஏற்ப மாறியோ பாத்திரம் அறிந்து பிச்சையிடு! என்று மாறியிருக்கவேண்டும்//

    இதுவே சரியானது.

    பதிலளிநீக்கு
  12. எடுத்தப் பழமொழி
    கொடுத்த விளக்கம் நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. பிச்சையெடுப்பதை ஊக்குவிக்காது, நம்மால் முடிந்தால் அவர்கள் திறனை அறிந்து அவர்கள் உழைத்து வாழத் துணை நிற்போம்!

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  14. இனிமை....
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    பதிலளிநீக்கு
  15. நல்ல விளக்க பதிவு சார் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. பழமொழியின் சரியான பொருளை புரிந்து கொள்ள தந்துள்ளீர்கள் ...அருமை !

    பதிலளிநீக்கு
  17. ப(பு)ழக்கத்தில் உள்ள பல பழமொழிகளும்,சொல்லாடல்களும் பொருள் திரிந்தே புரிந்து கொள்ளப் படுகின்றன. பானை சோற்றுக்கு இங்கு ஒரு சோறு பதம் போதாது என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. ஆகா நான் வருவது தெரிந்தே இதனைப் போட்டீர்களா
    முனைவரே!......ஹி....ஹி....ஹி...மிக அருமையான உங்கள் விளக்கத்துக்கு பரிசாக தமிழ்மணம் 15 வது ஓட்டுப் போட்டாச்சு
    வாழ்த்துக்கள்.நன்றி பகிர்வுக்கு .............

    பதிலளிநீக்கு
  19. "நம் மரபுகளை உணர்வோம். அடுத்த தலைமுறைக்கும் நம் பண்பாட்டை உணர்த்துவோம்."

    உணர்வோம்...
    உணர்த்துவோம்....

    பதிலளிநீக்கு
  20. உண்மையில் வறுமையில் வாடுபவர்களா? என்று அறிந்து பிச்சை போடு என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா? ஏனென்றால், உழைக்கமுடியுமாக இருந்தாலும் உழைக்க விரும்பாது பிச்சை வாங்கி வாழ்பவர்கள் இருக்கின்றார்கள் தானே? இங்கு ஐரோப்பாவில் இப்படியானவர்கள் அதிகம். இதைப் பலர் அறியச் சொல்லவேண்டியது கடமை. வேலைதேடாமல் வேலை இல்லை என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திலிருந்து பணம் பெற்று படாடோபமான வாழ்க்கையை வாழுகின்றார்கள். இவர்களுக்கும் பிச்சை போடுகின்ற போது பாத்திரம் அறிந்து போட வேண்டும் என்ற பழமொழியைப் பாவிக்கலாம் தானே. வள்ளுவர் கூறியது போல் ‚''உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'' என்பது போல். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பதையும் கொள்ளலாம் என்று சிந்தித்தேன். எல்லாம் நீங்கள் கூறியது போல் ஒரு எடுகோள் என்றுதான் கருதுகின்றேன்;. எனினும் இவ்வாறான ஆக்கங்கள் எனக்கு தீனி போடுவதுபோல் இருக்கும். நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாரத் பாரதி.

    பதிலளிநீக்கு
  22. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  23. இனிவரும் காலங்களில் அப்படியொரு எண்ணம் இருக்கிறது நடனசபாபதி ஐயா.

    அறிவுறுத்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மைந்தன் சிவா.

    பதிலளிநீக்கு
  26. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரியாஷ்

    பதிலளிநீக்கு
  27. உண்மைதான் பாலசுப்பரமணியன் ஐயா.
    நிறைய இதுபோல அறிந்தோர் பதிவிடவேண்டும்..

    பதிலளிநீக்கு
  28. தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும், புரிதலுக்கும், கருத்துரைக்கும் நன்றி சந்திர கௌரி.

    பதிலளிநீக்கு
  29. பாத்திரம் என்பதன் பொருளை வேறு ஒரு வகையில் பார்த்தால்...கதையின் பாத்திரம் என்றால் ரோல் என்று கொள்கிறோம் அது போலவே பாத்திரத்தை ஏந்தி வந்த ’பாத்திரம்’ அறிந்து பிச்சையிடு என்றால் குழப்பமே வராது.பிச்சை கேட்டு வந்தவனின் இயலாமையை,அல்லது சோம்பேறித்தனத்தை இல்லாமையை கண்டறிந்து அதற்குத் தக்கவாறு பிச்சையிடு ..என்பது,என் கருத்து சரியா முனைவரே?

    பதிலளிநீக்கு
  30. மிக அழகாகச் சொன்னீர்கள் கோமா.

    கருத்துரைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. பசியுடன் இருப்பவருக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
    மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற பழமொழியை மனதில் கொண்டு...

    பிச்சையெடுப்பதை ஊக்குவிக்காது, நம்மால் முடிந்தால் அவர்கள் திறனை அறிந்து அவர்கள் உழைத்து வாழத் துணை நிற்போம்!

    என்று பொருள் கொள்வதே சரியாக அமையும் என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. அன்பின் குணா - அருமையான விளக்கம் - ஒரு எழுத்து மாறினால் பொருள் எவ்வாறு மாறுகிறது. இக்காலத்தில் எழுத்துப் பிழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க - திருத்த மறுக்கிறார்கள். என்ன செய்வது ....
    குறளில் துவங்கி - இலக்கியங்களைத் தொட்டு - பாத்திரம் - பாத்திறம் - விளையாடி - இடுகை இட்டமை நன்று - நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  33. நன்றி அய்யா.... நினைத்தவுடன்.. தேடியதில் கிடைத்த விளக்கம் மிக அருமை... தெளிவு பெற்றேன்... வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  34. நன்றி அய்யா.... நினைத்தவுடன்.. தேடியதில் கிடைத்த விளக்கம் மிக அருமை... தெளிவு பெற்றேன்... வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு