வியாழன், 4 ஆகஸ்ட், 2011
கவிதை ஊர்தி. (இளம் கவிஞர்களுக்காக)
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.
பழந்தமிழன் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல வடிவங்களைக் கையாண்டான்.
• பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் பாடப்பட்டவையாகும்.
• சிலப்பதிகாரம் நிலைமண்டில ஆசிரியத்தால் ஆனது.
• நீதி நூல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை.
• சீவக சிந்தாமணி, கம்பராமாணயம் விருத்தப்பாவால் ஆனவை.
• தேவார, திவ்ய பிரபந்தங்கள் இசை விருத்தத்தால் ஆனவை.
• பிள்ளைத் தமிழ் கழிநெடிலடிச் சந்தவிருத்தத்தால் ஆனது.
• உலாவும்,தூதும் கலிவெண்பாவால் ஆனவை.
• பரணி தாழிசையால் ஆனது.
• கோவை நூல்கள் கட்டளைக் கலித்துறையால் ஆனவை.
• பிற்கால நாடகங்கள் கீர்த்தனையால் ஆனவை.
மரபுக் கவிதைகளில் பெயர் பெற்ற சான்றோர்கள்.
“வெண்பாவில் புகழேந்தி, பரணிக்கோர் செயங்கொண்டார்
ஒண்பாவிற்கு உயர்கம்பன், கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக் காளமேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காசால் ஒருவர் பகரொணாதே“
தனிப்பாடல்.
வெண்பா – புகழேந்தி (நளவெண்பா)
விருத்தம் – கம்பர் (கம்பராமாணம்)
சந்தம் – படிக்காசுப்புலவர் (சந்தப் பாடல்கள்)
கோவை, உலா, அந்தாதி – ஒட்டக்கூத்தன் (மூவருலா)
கலம்பகம் – இரட்டையர்கள்.
கருத்து – ஓட்டுநர்
கவிதை வடிவம் – ஊர்தி
ஊர்தி எந்த அளவுக்கு காலத்துக்கு ஏற்றதாய் இருக்கவேண்டுமோ அதுபோல
கருத்தும் இயைபுடையதாகவே இருத்தல் வேண்டும்.
இன்று...
பலரிடம் ஊர்தி இருக்கிறது
ஓட்டத் தெரியவில்லை!
ஓட்டத் தெரிந்தவர்களிடம்
ஊர்தியில்லை!
ஓட்டத்தெரிந்தவர்களிடம் உள்ள ஊர்தியே இன்றைய காலப் பாதையில் தொடர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
பழந்தமிழ்க் கவிஞர்கள் இதனை நன்கு உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
தன் கருத்துக்கு ஏற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ஒரு கவிதை காலம் கடந்தும் போற்றப்பட கருத்துடன் இயைபுடைய வடிவம் அடிப்படைத் தேவையாகும்.
ஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
கருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும் என்பதையும் இளங்கவிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!
இளங்கவிஞர்களின் தன்மதி்ப்பீட்டுக்காகவும்.
தமிழ் யாப்பின் வளர்ச்சிப் படிநிலைகளை, நினைவுபடுத்தவும்,அறிமுகம் செய்யவுமே இவ்விடுகையைப் பதிவு செய்தேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிக்க பெறுமதியான ஒரு இடுகை. மகிழ்ச்சி. எனது முகநூல் சுவருக்கு இதை பங்கிட்டு(பரிமாறி-share) உள்ளேன். நன்றி ஐயா!-- வேதா. இலங்காதிலகம்.
பதிலளிநீக்குhttp://www.kovaikkavi.wordpress.com
நன்றி இலங்கா திலகம்.
பதிலளிநீக்குஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
பதிலளிநீக்குகருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும் என்பதையும் இளங்கவிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!
..... நல்ல அறிவுரை. இந்த பதிவு அருமையாக வந்துள்ளது.
//ஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
பதிலளிநீக்குகருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும் என்பதையும் இளங்கவிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!//
குணா,
முற்றிலும் உண்மை.
வழிகாட்டலுக்கு மிக்க நன்றி..
பதிலளிநீக்குSuper post sir . . .
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
பதிலளிநீக்கு\\\\ஒரு கவிதை காலம் கடந்தும் போற்றப்பட கருத்துடன் இயைபுடைய வடிவம் அடிப்படைத் தேவையாகும்\\\ நூற்றுக்கு நூறு உண்மை .
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி சித்ரா.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சத்ரியன்.
பதிலளிநீக்குநன்றி மூர்த்தி.
பதிலளிநீக்குநன்றி இராஜா
பதிலளிநீக்குநன்றி குமார்.
பதிலளிநீக்குநன்றி சசி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை ஆழ்ந்து படிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் ஐயா.
மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
கட்டணம் வாங்காத தமிழ் பள்ளிக்கூடம் இது..
பதிலளிநீக்குகோவை நூல்கள் கட்டளை கலித்துறையில் என்றல்லவா இருக்க வேண்டும்?
பதிலளிநீக்குமற்றபடி அருமை..
கருத்தாழமிக்க கவிதைகளே காலத்தை வென்று நிற்பவை...ரொம்ப சரி!!
இதனைக் கணணுற்றவுடன் அடியேன் எப்போதோ எழுதியது ஞாபகம் வந்தது..தங்கள் பார்வைக்கு:
பதிலளிநீக்குhttp://keerthananjali.blogspot.com/2010/11/blog-post.html#comments
// ஒரு கவிதை காலம் கடந்தும் போற்றப்பட கருத்துடன் இயைபுடைய வடிவம் அடிப்படைத் தேவையாகும்//
பதிலளிநீக்குவளரும் கவிஞர்கள் அறியவேண்டிய அருமையான வரிகள்
தம்பீ!
இப் பதிவு எனக்கே சிலவற்றை
நினைவு படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
நன்றி!
கருத்துரைக் கண்டேன்
புலவர் சா இராமாநுசம்
புலவர்கள் தங்களுக்கென தனித் தனி படைப்புத் திறனும் அதில் ஆழுமையும் கொண்டிருந்தனர் என்பதை அழகாய் சொல்லியிருக்கின்றன உங்கள் படைப்பு. . .
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குகருத்து – ஓட்டுநர்
பதிலளிநீக்குகவிதை வடிவம் – ஊர்தி...நல்ல அறிவுரை.நன்றி குணா !
அருமையான பதிவு.
பதிலளிநீக்குகட்டணம் வாங்காத தமிழ் பள்ளிக்கூடம் இது..// :-)
பதிலளிநீக்குcorrect!!
தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
பதிலளிநீக்குஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்
நன்றி கருன்.
பதிலளிநீக்குதங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி இராமமூர்த்தி ஐயா.
பதிலளிநீக்குநன்றி கவிஞரே.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரணவன்.
பதிலளிநீக்குநன்றி சர்புதின்.
பதிலளிநீக்குநன்றி ஹேமா.
பதிலளிநீக்குநன்றி முத்தரசு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நிலாமகள்.
பதிலளிநீக்குவலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ரமனி ஐயா.
பதிலளிநீக்குகற்பித்த அனைத்தையும் கற்க முடிகிறது..அதனை ஓட்ட முடியுதில்லை..
பதிலளிநீக்குநல்ல விளக்கங்களுடன் தந்த பதிவுக்கு நன்றி சேர்...
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விடிவெள்ளி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விடிவெள்ளி.
பதிலளிநீக்குகருத்தாழமிக்க பதிவு நிச்சயம் பயன் பெரும் எம்போன்ற பதிவர்களுக்கு... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅய்யா, தங்களது மிகவும் அருமையான பதிவு ............நட்புடன் பரிதி
பதிலளிநீக்குநன்றி பரிதி
பதிலளிநீக்குநன்றி நிரோஷ்
"கவிதை ஊர்தி" என்ற பா பார்க்க வந்தேன்...
பதிலளிநீக்குஅழகான பாவரிகள்
அன்போடு என்னை ஈர்க்க
பார்த்த மாத்திரத்தில்
தங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்!
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
மகிழ்ச்சி நண்பரே.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி உமா.
நீக்கு