சனி, 2 ஜூலை, 2011
மனம் x அறிவு = போர்க்களம்.
நாம் எந்த வேளை செய்தாலும் நம்மிடம் இருவர் வந்து ஆலோசனை சொல்வார்கள்.
ஒருவர் மனம்!
இன்னொருவர் அறிவு!
பலநேரம் மனம் சொல்வதையும்
சிலநேரம் அறிவு சொல்வதையுமே சராசரி மனிதர்கள் கேட்கிறார்கள்.
இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு எது சரியானதோ அதைச்செய்பவர்களை இவ்வுலகம் புத்திசாலிகள் என்றழைக்கிறது.
மதிப்பீட்டுக்காக..
கொடிய பாலைவனம்,
அதைவிட கொடுமையான நீர்வேட்கை,
நிழல் கூட இல்லாத வெம்மை
அடுத்த அடி கூட எடுத்துவைக்க இயலாத உடல் சோர்வு
அடுத்த நொடி உயிருடன் இருப்போமா என்ற ஐயம்...
இந்நிலையில் தூரத்தில் ஒரு அடிக்கும் நீர்க்குழாய் தெரிகிறது. அதன் பக்கத்தில் சிறிய பாத்திரத்தில் நீர் இருக்கிறது. அருகே ஒரு அட்டையில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. அருகே சென்று பார்த்தால்..
இந்த பாத்திரத்தில் இருக்கும் நீரையெல்லாம் அருகிலுள்ள நீர்க்குழாயில் ஊற்றி அடித்தால் நிறைய நீர் வரும். உங்களுக்குத் தேவையானதைக் குடித்துவிட்டு இந்தப் பாத்திரத்தில் மீ்ண்டும் பிடித்துவைத்துச் செல்லுங்கள் என்று உள்ளது.
இப்போது அறிவு பேசுகிறது.
இந்த நீர்க்குழாயோ பழையதாக உள்ளது இருக்கும் நீரோ மிகவும் குறைவாகவுள்ளது. இந்த நீரையும் இக்குழாயில் ஊற்றிவிட்டால் பின் குழாயில் நீர் வராவிட்டால் என்ன செய்வாய்?
அதனால் இந்த நீரை நீயே குடித்துவிடு என்று சொல்கிறது அறிவு.
இப்போது மனம் பேசுகிறது..
ஒருவேளை இது உண்மையாக இருந்தால் நம் தாகம் தீர்ந்து அடுத்து வருபவரின் தாகவும் தீருமே. என்ன ஆனாலும் பரவாயில்லை இதில் குறிப்பிட்டதுபோல இந்த நீரைக் குழாயில் ஊற்றிவிட்டு அடித்துப்பார் என்கிறது மனம்.
இப்போது அறிவின் சொல்லைக் கேட்பதா?
மனதின் சொல்லைக் கேட்பதா?
• அறிவின் சொல்லைக் கேட்டால் நாம் பயனடையலாம். நாம் மட்டுமே பயனடையலாம்.
• மனதின் சொல்லைக் கேட்டால் நாம் பயனடைவதுடன், அடுத்தவரும் பயன்பெறமுடியும்.ஒருவேளை குழாயில் நீர் வராவிட்டால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்பது உண்மை
அறிவுக்கும், மனதுக்கும் நடக்கும் போரில் என் அறிவு மனதின் பேச்சைக் கேள் என்கிறது இறுதியில் அறிவே வெல்கிறது.
உங்களுக்கு..?
(எங்கோ எப்போதோ படித்த கதையை எனது நடையில் உளவியல் கலந்து சொல்லியிருக்கிறேன்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உண்மைதான். ஆனால் செண்டிமெண்ட் விசயத்தில் மனம் தான் ஜெயிக்கிறது
பதிலளிநீக்கு@குணசேகரன்... உண்மைதான் நண்பா.
பதிலளிநீக்குsuper story
பதிலளிநீக்குஅறிவை ஆயுதமாக்கி வெல்லலாம்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குSuper artical sir
பதிலளிநீக்குநல்ல கருத்து!!
பதிலளிநீக்குமிகவும் அழகான பதிவு குணசீலன்.அருமையான கருத்தை சொல்லியிருக்கிரீர்கள்..
பதிலளிநீக்கு