பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 5 ஜூன், 2011

காதலிக்கும் போது..

ஆண்களாக இருந்தாலும்
பெண்காளாக இருந்தாலும் காதலிக்கும் போது இருப்பது போல திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை.

நிறைய மாறிவிடுகிறார்கள்.

காதலிக்கும் போது...
நிறைகள் மட்டுமே தெரிகிறது
பாராட்ட மட்டுமே தெரிகிறது.
திட்டினாலும் சிரிக்கத் தோன்றுகிறது
பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது
நிகழ்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
கசப்பான உணவும் இனிக்கிறது

திருமணத்துக்குப் பின்னர்...
குறைகள் மட்டுமே தெரிகிறது
பாராடட்ட நேரம் ஒதுக்கமுடியவில்லை
சிரித்தாலும் திட்டத் தோன்றுகிறது.
ஆளைவிட்டா போதும் என்றிருக்கிறது
எதிர்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
இனிப்பான உணவும் கசக்கிறது.

இதோ எனக்கு மின்னஞ்சலில் வந்த சிந்திக்கத்தக்க நகைச்சுவை.
காதலிக்கும் போது..


அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?



திருமணத்திற்குப் பின் :


கீழிருந்து மேலாகப் படியுங்கள்..


எப்படியிருக்கிறது!!!!
இன்று நேற்றா இப்படியொரு மாற்றம் வந்தது.?

காதல் தோன்றிய போதே இந்த மாற்றங்களும் தோன்றிவிட்டன.

என்னைக் கேட்டால் உண்மையான காதலின் அளவு என்ன ? உயர்வு என்ன என்பதை

இளமையில் அளவிடக்கூடாது.

திருமணத்துக்குப் பின்னர்.
குழந்தை பெற்ற பின்னர்
வயதான பின்னர் தான் அளவிட வேண்டும் என்பேன்.

இதோ சங்ககாலக் காட்சி ஒன்று..

வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.

தலைவ..
முன்பு ஒரு காலத்தில் என் தோழி பசுமையான வேப்பங்காயைத் தந்தாலும் அது இனிய மனமுள்ள “கரும்புக்கட்டி“ என்று இளமைப் பருவத்தில் சுவைத்து உண்டு வந்தீர்.

இப்போது பாரி என்னும் வள்ளலுக்குரிய பறம்பு மலையின் தை மாதத்துக் குளிர்ச்சி பொருந்திய சுனை நீரையே தந்தாலும் “வெப்பமாக இருக்கியது உவர்பாக இருக்கிறது“ என்று கூறுகிறீர்.

உலகின் அன்பின் தன்மை இத்தன்மையது போலும்!!!

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம் பூங்கட்டி என்றனீர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
“வெய்ய உவர்க்கும்“ என்றனீர்
ஐய! அற்றால் அன்பின் பாலே.


குறுந்தொகை 196
மிளைப்பெருங்கந்தன்

இலக்கியச் சுவை.

ஒப்பீடு
வேம்பு – இளமைத் தன்மை கொண்ட தலைவி – இனிப்பு
இனிய குளிர்ந்த நீர் – வயதான தலைவி – வெப்பம்,உவர்ப்பு

இளமைப் பருவத்து அன்பு - தேம் பூங்கட்டி.
முதுமைப் பருவத்து அன்பு – வெப்பமாக, உவர்ப்பாக.

10 கருத்துகள்:

  1. ”கச்சிருக்கும் போது கரும்பானேன்
    கைக்குழந்தை வெச்சிருக்கும் போது வேம்பானேன்”

    என்ற சங்ககால பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    கச்சு+இருக்கும்போது = கச்சிருக்கும்போது

    கச்சு = BRA
    [மார்பை இழுத்துக்கட்டும் துணி அல்லது கச்சை]

    பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. @வை.கோபாலகிருஷ்ணன் தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.

    தாங்கள் குறிப்பிட்ட..

    கச்சிருக்கும் போது கரும்பானேன்; கைக்குழந்தை
    வச்சிருக்கும் போது மருந்தானேன் ; - நச்சிருக்கும்
    கண்ணார் கரும்பானார் ;காணவும்நான் வேம்பானேன்
    அண்ணா மலையர சுக்கு"


    இந்தப்பாடல்..


    என்னும் சுப்பிரதீபக் கவிராயரின் வெண்பாதான் ஐயா..

    இது சங்கப்பாடலல்ல.

    தங்கள் ஒப்பீடுக்கு நன்றி மலர்களைத் தூவுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ”கச்சிருக்கும் போது கரும்பானேன்
    கைக்குழந்தை வெச்சிருக்கும் போது வேம்பானேன்”
    பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.சிலர் நன்றாக வயது போனபின்னும்கூட மிக மிக அன்பாகவே இருக்கிறார்கள்.ஒருவேளை விதிவிலக்கோ !

    பதிலளிநீக்கு
  5. //என்னும் சுப்பிரதீபக் கவிராயரின் வெண்பாதான் ஐயா..

    இது சங்கப்பாடலல்ல.//


    இருக்கலாம்.
    I am not so clear, Sir.
    Thanks for your kind clarification.
    பள்ளியில் படிக்கும் போது ஒரு தமிழய்யா சொன்ன இந்த வரிகள் மட்டுமே, எனக்கு நினைவில் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. @ஹேமா ஆம் ஹேமா. அவர்கள் தான் வாழத்தெரிந்தவர்கள்!
    காதலிக்கத் தெரிந்தவர்கள்!!

    பதிலளிநீக்கு
  7. @வை.கோபாலகிருஷ்ணன் பள்ளியில் படித்த நினைவு இத்தனை காலம் இருப்பதே வியப்புக்குரியது ஐயா!!!

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையான பகிர்வு.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு