வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 ஜூன், 2011

கலீல் கிப்ரான் (கவிதைகள்)


ஊர்வலம்
வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம்.
காலுக்கு வேகம் கூடியவர்கள்
அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக்கொண்டு
ஊர்வலத்தைவிட்டு வெளியேறுவார்கள்
காலுக்கு வேகம் குறைவாக உள்ளவர்களோ
அதற்கு வேகம் கூடுதல் என்று குறைபட்டு
ஊர்வலத்தைவிட்டு வெளியேறுவார்கள்.


இரண்டு வகை


ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் வீதம்
இருக்கிறார்கள் அல்லவா?

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்
இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.


மணலும் நுரையும்


மணலுக்கும் நுரைக்கும் நடுவில்
நான் எப்போதும் இந்தக் கரையில் உலாவவேன்
என் கால் சுவடுகள்
அலைகள் பட்டு அழிந்துபோகும்
காற்று வந்து நுரையை அடித்து இல்லாமல் செய்யும்.
எனினும் எப்போதும்
கடலும் கரையும் இருக்கும்
என்றென்றைக்கும்.

13 கருத்துகள்:

  1. சிறிதாக எத்தனை அர்த்தத்தோடு
    நிமிர்ந்து நிற்கிறது கவிதை !

    பதிலளிநீக்கு
  2. மணலும் நுரையும் - இயற்கையின் விந்தை

    பதிலளிநீக்கு
  3. கலீல் கிப்ரன் கவிதைகள் படிக்கப்படிக்க மனசு லேசாகிக்கொண்டே இருக்கும்.

    கவிதைக்குள் அவர் ஒரு தனி உலகம் படைத்து வைத்திருக்கிறார்.

    பகிர்விற்கு நன்றிங்க குணா.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை. ரசிக்கிறோம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. mudinthaal paplo nerudavin kavithaiyaium padiththupaarungal.

    migavum unarvu poorvamaaga arumaiyaaga irukkum

    பதிலளிநீக்கு
  7. நான் பலமுறை படித்து இன்புற்ற புத்தகம்
    அருமை

    பதிலளிநீக்கு