வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 3 ஜூன், 2011

தங்கப் பெட்டி.


ஒரு முறை போரில் வென்ற மாவீரர் அலெக்சான்டர் எதிரிகளின் நாட்டில் தங்கப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றினார். அவரின் படைத்தளபதி வந்து அலெக்சான்டரிடம் கேட்டார்..

மன்னா விலைமதிப்பில்லாத இந்தப் பெட்டியை எங்கு வைப்பது? என்று.

அதற்கு அலெக்சான்டர் சொன்னார்..

யார் சொன்னது இந்தப் பெட்டி விலைமதிப்பில்லாதது என்று, ஒரு பொற்கொல்லனைக் கேட்டால் கூட இந்தத் தங்கப் பெட்டியின் விலையைச் சொல்லிவிடுவான்.

இந்தப் பெட்டியை எனது புத்தகங்களை வைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம், அப்போது தான் இந்தப் பெட்டிக்கு சரியான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்றார்.

10 கருத்துகள்:

  1. அலக்ஸாண்டரின் முடிவு அருமை. புத்தகங்களும், நூல்களும், தங்கப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களே!

    பதிலளிநீக்கு
  2. அடிச்சான் பார நச்சுன்னு... புத்தகங்களுக்குத்தான் மதிப்புன்னு.... பகிர்ந்து கொண்ட தோழருக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  3. அதானே....ஏன் சொல்லணும் விலைமதிப்பில்லாதது என்று.சில சொல்லாடல்கள் இப்படித்தானோ !

    பதிலளிநீக்கு
  4. அறிவு,செல்வத்தை விட மதிப்பு வாய்ந்ததுதானே!அருமை!

    பதிலளிநீக்கு
  5. தங்கத்தை விட புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதை அப்போதே அலெக்சாண்டர் சொல்லாமல் சொல்லிவிட்டார். பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே..!

    பதிலளிநீக்கு
  6. குட்டிக் கதை! பெரிய தத்துவ உண்மை! அட்டகாசம் முனைவர் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. உண்மை....விலை மதிப்பில்லாதது புத்தகம் மட்டுமே

    பதிலளிநீக்கு