புதன், 1 ஜூன், 2011
எக்காலம்..?
காலதர் வழியே காற்று வாங்கியது
அந்தக்காலம்
விண்டோசின் வழியே உலகைக் காண்பது இந்தக்காலம்!
பொறியின் வழியே எலியைப் பிடித்தது
அந்தக்காலம்
சுட்டெலியின் வழியே பேரறிவைப் பிடிப்பது இந்தக்காலம்!
கடிதம் போட்டுக் காத்துக்கிடந்தது
அந்தக்காலம்
மின்னஞ்சல் வழியே காலம் சுருங்குது இந்தக்காலம்!
படைப்புகள் அனுப்பி ஏங்கிக்கிடந்தது
அந்தக்காலம்
ப்ளாக்கின் வழியே யாவரும் படைப்பாளரானது இந்தக்காலம்!
வீட்டுமுகவரிகள் மட்டுமே அடையாளமானது
அந்தக்காலம்
பேஸ்புக்கும், டுவைட்டரும் அடையாளமானது இந்தக்காலம்!
தீப்பெட்டியும், நூலும் தொலைபேசியானது
அந்தக்காலம்
ஸ்கைப்பும்,3ஜியும் முகம்பார்த்துப் பேசச்சொல்லுது இந்தக்காலம்!
இப்படி கணினி வழியே எல்லாம் செய்யும் மனிதா..?
நீ கணினி வழியே நெல்மணி விளைவிப்பது எக்காலம்..?
இணையத்தில் எல்லாம் தேடும் மனிதா நீ தொலைத்த உன் சிரிப்பைத் தேடிக்காண்பது எக்காலம்..?
கொசுவை விரட்டக் கூட மென்பொருள் கண்ட மனிதா நீ, நடமாடும் கணினியான மனிதனை மீண்டும் மனிதனாக்கும் மென்பொருளை உருவாக்குவது எக்காலம்..?
உன்னைப் போலவே மொழிப்பாகுபாடு கொண்ட கணினிகளை ஒரே குறியீட்டு மொழிக்குள் நீ கொண்டு வருவது எக்காலம்..?
மேகக்கணினி நுட்பம் கண்ட மனிதா நீ, கணினிகளால் தோன்றும் வெப்பம் தணிப்பது எக்காலம்..?
தமிழ்ச்சொல் நயம்.
(காலதர் - (ஜன்னல் - வடமொழி)
கால் - காற்று
அதர் - வழி
காற்று வரும் வழி)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நயமான நல்ல கருத்தாக்கத்திற்கு நன்றி.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி நன்றி இராஜேஸ்வரி.
பதிலளிநீக்குhahhhahaha..பாட்டை மாற்றி எழுதி இருப்பது சுவைபட இருக்கு குணா..
பதிலளிநீக்கு@தமிழரசி நன்றி தமிழரசி.
பதிலளிநீக்குநியாயமான ஆதங்கம்.
பதிலளிநீக்குபதிவு அருமை
நவீன விஞ்ஞான வளர்ச்சிகளை அடுக்கடுக்காக அழகாகச் சொல்லியுள்ளீர்களே என வியந்து போனேன். கடைசியில் சாட்டையடி கொடுத்து கேள்விக்கணைகளை வீசிவிட்டீர்களே.
பதிலளிநீக்குஅவைகளும் சிந்திக்க வேண்டியவையாகவே உள்ளன.
உங்கள் பார்வை, எண்ணம், எழுத்து அனைத்தும் புதுமையும் அருமையும்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நியாயமான கேள்விகள் மற்றும் ஆதங்கங்கள்
பதிலளிநீக்கு@சிநேகிதன் அக்பர் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா.
பதிலளிநீக்கு@வை.கோபாலகிருஷ்ணன்தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.
பதிலளிநீக்கு@koodal bala நன்றி பாலா.
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்கு////
பதிலளிநீக்குமேகக்கணினி நுட்பம் கண்ட மனிதா நீ, கணினிகளால் தோன்றும் வெப்பம் தணிப்பது எக்காலம்..?
///
நல்ல கேள்வி
நன்றி நண்பா.
நீக்குஅழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி நண்பா.
நீக்குகாலம் எம்மை மீறிக் கடக்கிறது விஞ்ஞான வழி.பதில் கஸ்டம் குணா !
பதிலளிநீக்குஉண்மைதான் ஹேமா
நீக்கு