வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 14 மே, 2011

இரண்டு அடிமைகள்.


ஒரு நாள் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.

என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும்.
அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?
என்று கேட்டார்.

“ஐநூறு பவுண்டுகள்“ என்றார் பிளாட்டோ.
ஐநூறு பவுண்டுகளா?? இந்தப் பணத்தில் ஒரு அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே!! என்றார்.

அதற்கு பிளாட்டோ..

நீங்கள் சொல்வதும் சரிதான்.. இந்தத் தொகைக்கு ஒரு அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் மகனோடு சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்கள் என்றார்.

8 கருத்துகள்:

  1. எப்பவும் போல பதிவு நல்லா இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிப்பு. கல்வி வியாபாரமாய் மாறும் இந்த காலத்தில் நாம் மீண்டும் அடிமைகளாய் வாழ்ந்த காலத்துக்கு சென்றுவிடுவோமோ என்ற பயம் தான் மனதில்!!

    பதிலளிநீக்கு
  3. கல்வியின் அவசியத்தை கூறும் பதிவு.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கல்வியின் முக்கியத்துவத்தை இன்னும் சரியாகப்புரிந்து கொள்ளாதவர்கள் நிறைய மக்கள் உள்ளனர். வருந்தக்கூடிய விசயம் தாங்கய்யா..

    பதிலளிநீக்கு