புதன், 11 மே, 2011
உயிர்கள் பேசும் ஒரே மொழி
உயர்திணை - அஃறிணை
உயர்ந்தவன் - தாழ்ந்தவன்
பணக்காரன் - ஏழை
படித்தவன் - படிக்காதவன்
நல்லவன் - கெட்டவன்
ஆன்மீகவாதி - நாத்திகவாதி
தலைவன் - தொண்டன்
உள்நாட்டுக்காரன் - வெளிநாட்டுக்காரன்
தாய் மொழி - பன்னாட்டு மொழி
என எந்த வேறுபாடுமின்றி
எல்லா உயிர்களும் பேசும் ஒரேமொழி இதுதான்..
நகை
நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும் என்கிறார் தொல்காப்பியர்.
”எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய்ப். 4)
இவர்போன்றஎம் முன்னோடிகள் சொன்னதால் நானும் இதனை.....
நகை
சிரிப்பு
மகிழ்ச்சி
எனப் பெயரிட்டு அழைக்கிறென் . உங்கள் மொழியில் இதற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்...?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்ற வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வருகிறதா..?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்த மொழி இருப்பதால தான் மனித இனம் இன்னும் இருக்கிறது...
பதிலளிநீக்குசிறந்த பதிவு...
புன்னகை பூக்கச்செய்யும் பதிவு..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
மழலைகளின் புன்னகை மிக அழகு பார்க்கும் போது என் மகளின் சிரிப்பு தான் நினைவிற்கு வந்தது. அனைத்து கவலைகளையும் மறப்பேன் அவள் புன்னகையில்.
பதிலளிநீக்கு@இந்திராவருகைக்கு நன்றி இந்திரா
பதிலளிநீக்கு@சசிகுமார் குழலையும் யாழையும் விட இனிது மழலை மொழி என்று வள்ளுவர் அன்றே இதை அனுபவித்துச் சொல்லியிருக்கிறார் நண்பா.
பதிலளிநீக்கு@சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி நண்பா