பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 23 மே, 2011

வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)


கடந்த நான்கு ஆண்டுகளாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
வலைப்பதிவர்களை,

1. தன்னிறைவுக்காக எழுதுபவர்கள்.
2. பொழுதுபோக்காக எழுதுபவர்கள்.
3. வியாபர நோக்கில் எழுதுபவர்கள்.
4. மக்கள் நலன் கருதி எழுதுபவர்கள்.
எனப் பாகுபாடு செய்யமுடியும்.

நான் எனது தன்னிறைவுக்காவே எழுதிவருகிறேன். நான்கு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. காலம் மிக விரைவாகச் சென்றுவிட்டது.

சங்கத்தமிழ், இணையத்தமிழ் என இரு நிலைகளில் மட்டுமே எழுதிவரும் எனது பதிவையும்...

108 நாடுகளிலிருந்து 58,000 பேர் பார்வையிட்டுள்ளனர்,
383 பேர் பின்தொடர்கின்றனர்,
130 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகிறார்கள்.

என்றால் உலகம் பரவிய தமிழர்களிடம் தமிழுணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

நான் கடந்துவந்தபாதையில்.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்தமை
திரட்டி நட்சத்திரமாக இருந்தமை
தமிழ்மண விருது வென்றமை


என எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்க நிகழ்வுகள் பல உள்ளன. இவை வலையுலக நண்பர்கள் என் எழுத்துக்களுக்குத் தந்த வரம்.

ஆரம்ப காலங்களில் தமிழ்மணம், தமிழிஷ் உள்ளிட்ட திரட்டிகளுக்குச் சென்று நண்பர்களின் இடுகைகளை வாசித்து கருத்துரையளித்து, ஓட்டளித்து வருவேன்.

கடந்த சில வருடங்களில் பணிச்சுமை காரணமாக அப்பணியை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.

இடுகைகளை திரட்டிகளில் சேர்ப்பதோடு சரி.
ஆனால் வலையுலக நண்பர்கள் தொடர்ந்து ஓட்டளித்து, கருத்துரையளித்து பலருக்கும் எனது பதிவு சென்றடைய துணைநின்றுள்ளனர். பெயர்களைச் சொன்னால் பக்கம் நீளும் என்பதால் அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நான் கண்ட வலைப்பதிவர்களின் மனநிலைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.

வலைப்பதிவர்களுக்குப் பிடித்தது.

1. சொந்தமான சிந்தனை.
2. ஆர்வமூட்டும் தலைப்பு, புதிய தகவல்.
3. பிழையற்ற, தெளிவான, எளிய தொடரமைப்பு.
4. தனித்துவமான எழுத்து நடை.
5. அடுத்தவர் தகவலாக இருந்தாலும் நன்றி கூறி வெளியிடுதல்
6. கருத்துரைகளுக்குப் பதிலளித்தல்
7. கருத்துரையளித்த, பின்தொடரும் பதிவர்களின் தளங்களுக்கும் சென்று பார்வையிடுதல் நிறைகளை எடுத்துக்கூறிப் பாராட்டுதல்.
8. குறைகளைக் கூறினாலும் நாகரீகமாகக் கூறுதல்.
9. அழகான தளவமைப்பு.
10. விரைவாகத் திறக்கத்தகக்க வலைப்பக்கம்.
11. கண்களை சோர்வடையச் செய்யாத வலைப்பதிவின் பின்புல வண்ணங்கள், எழுத்தின் வண்ணங்கள்.
12. தொடர்ந்து பதிவிடுதல்.
13. நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலித்தல்,
14. பழமையான மரபுகளை அடையாளப்படுத்துதல்.
15. நகைச்சுவை, அனுபவம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, இலக்கியம், சிந்தனை, விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்வதைவிட ஏதோ ஒன்றைக் கூறினாலும் தெளிவாக, தனித்துவத்துடன் சொல்லுதல். எந்த அளவுக்கு வலையுலகை நான் புரிந்துகொண்டேன் என்பதை நண்பர்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்.

வலைப்பதிவர்களுக்குப் பிடிக்காதது.

1. சுயதம்பட்டம். (தன்னைப்பற்றியே பெருமை பேசுதல்)
2. கருத்துரைப்பெட்டியில் உறுதி செய்யும் எழுத்துக்கள் இருத்தல் (வேர்டு வெரிபிகேசன்)
3. அளவுக்கு அதிகமான அறிவுரை.
4. அடுத்தவர் சிந்தனையை தனது என சொல்லிக்கொள்ளுதல்.
5. ஓட்டுப் போடுங்கள், பின்தொடருங்கள், என மின்னஞ்சல் செய்தல்.
6. நீண்ண்ண்ட பதிவாக இடுதல்.
7. அளவுக்கு அதிகமான வார்த்தைகளின் அலங்காரங்கள்.
8. சுயவிவரமற்ற கருத்துரையாளராக வந்து கருத்துரைத்தல்.
9. பெரும்பாலான வலைப்பதிவர்கள் வைத்திருக்கும் விட்செட்டுகளை, இணைப்புகளையே வைத்திருத்தல்.
10. தொடர் இடுகை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதச் சொல்லி வற்புறுத்துதல்.
11. இடுகைகளைக் சிறிதுகூடப்படிக்காமல் தொடர்பே இல்லாமல் கருத்துரையளித்தல்.
12. பலரும் சொன்ன பழைய செய்திகளைப் பதிவிடுதல்.
13. பல இடுககைளும், இணைப்புகளும் முகப்புப் பக்கத்தில் இருத்தல்.
14. அதிமேதாவித்தனமான எழுத்துநடை.
15. அடிக்கடி வலையமைப்பையும், பக்கப்பெட்டிகளையும் மாற்றுதல்.


இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நான்கு ஆண்டுகளில் எனது ஆர்வம் சிறிதுகூடக் குறையவே இல்லை.

வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...




நண்பர்களே நீங்கள் தான்.
நீங்கள் மட்டும் தான்.

36 கருத்துகள்:

  1. நான்கு வருட நிறைவுக்கு, வாழ்த்துக்கள்! 350 வது இடுகைக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுலக அனுபவ பார்வையில், பல விஷயங்களை தெளிவாக சொல்லி குறிப்புகள் தந்து இருப்பதற்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. அத்தனையும் உண்மை பாஸ்!!

    பதிலளிநீக்கு
  4. ////வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...
    நண்பர்களே நீங்கள் தான்./////

    ......... அருமை. இந்த வரிகள் எங்களையும் உற்சாகப்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்கள் நண்பரே, உங்கள் படைப்புகளை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவுகள், பதிவர்களின் எண்ணங்களைப் பற்றிய கருத்துகளும் முடிவுகளும் சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள் உங்களின் தொடர்ந்த சேவைக்கு. உங்களைப் போல தமிழ் ஆர்வலர்கள் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். இந்த தமிழ் ஆர்வம் தான் என்னையும் எழுதத் தூண்டியது. நன்றி

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள் நண்பரே... வலைப்பதிவர்களின் மனவோட்டத்தை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் நற்பணி மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. பதிவுலக ஆராய்ச்சிக்கட்டுரையை சுருக்கமாக தொகுத்துள்ளீர்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நான்காண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். அனுபவங்கள் பலருக்குப் பாடமாக அமையும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  11. 350 வது இடுகைக்கு வாழ்த்துக்கள். பதிவுலகத்தை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் நீங்கள் கூறிய அனைத்து கருத்திற்கும் நானும் உடன் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள். எழுதுவது பெரிதல்ல. அந்த எழுத்து எவ்வளவு பயனடைகிறது என்பது முக்கியம். அந்த வகையில் போற்றத்தக்க பணியை செய்துள்ளீர். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா23 மே, 2011 அன்று 3:02 PM

    வாழ்த்துக்கள் நண்பா. கூடவே சில தகவல்களும் தந்துள்ளீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  14. நான்கு வருட நிறைவுக்கும் இன்னும் பல்லாண்டுகள் சிறப்பாக வாழவும், பதி்பிடவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அடுத்த மாதம் எனக்கு 2 வருடங்கள் முடிவடைகின்றது. வலைபதிவுகளைப் பற்றி யோசித்த பல விசயங்களை உங்கள் குறிப்புகளில் இருந்து உணர முடிகின்றது.

    பதிலளிநீக்கு
  16. நான்கு வருடங்களுக்கும் 350 க்கும் வாழ்த்துக்கள் ..,

    பதிலளிநீக்கு
  17. நான்காண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    அனுபவங்கள் பலருக்குப் பாடமாக அமையும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் குணா.உங்க இலக்கியப் படைப்புகள் எப்போதுமே எனக்குப் பிடித்தவைகள்.இன்னும் எழுதுங்கள் !

    பதிலளிநீக்கு
  19. கருத்துரை வழங்கிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


    ------//\\----- ------//\\--------

    பதிலளிநீக்கு
  20. முனைவர் அல்லவா? அதனால் தான் இன்னும் முனைப்புடனேயே இருக்கிறீர்கள்.. தங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம்..

    பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா25 மே, 2011 அன்று 4:51 PM

    வாழ்த்துக்கள் குணா.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும்..ஆசிரியருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும் மனங்களை படிக்க...

    பதிலளிநீக்கு
  22. ஐந்தாமாண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் உங்கள் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. நான்கு ஆண்டுகள்! 350 இடுகைகள்! மலைப்பாக இருக்கிறது. இன்னும் ஆர்வமுடன் இருக்கும் உங்களைப் பார்க்கையில் என் போன்று வலையுலக இளையவர்களுக்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. வாழ்த்துக்கள் முனைவரையா...

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள நண்பருக்கு வணக்கம்,
    நான் உங்கள் பதிவு படித்து பயன்படுத்த மற்றும் பின்பற்ற முயற்சிக்க...

    பதிலளிநீக்கு
  25. உண்மையான் வரிகள் .உங்கள் எண்ணங்கள் .

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள் நான்கு வருடங்களாகியும் இன்னும் உங்கள்
    எழுத்தார்வம் குறையாமல் தொடர்ந்தும் பதிவிட்டு அனைவரின்
    இதயத்திலும் நிறைந்துள்ளமைக்கு.அத்துடன் உங்கள் கருத்துக்கள்
    யாவும் என்றுமே வரவேற்கத்தக்கது .ஆதலால் உங்கள் வலைத்தளப்
    பயணம் இன்னும் சிறப்பாகத் தொடர இறையருள் கிட்டட்டும் .மிக்க
    நன்றி பகிர்வுக்கு .......

    பதிலளிநீக்கு
  27. 450 பதிவும் உங்கள் தமிழ் ஆர்வமும் ஆச்சரியமளிப்பவை. இன்னும் பல படைப்புகளை தமிழில் பதிவு செய்ய வாழ்த்துகள் முனைவரே..

    பதிலளிநீக்கு