பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

கோப்புகளுக்குப் பூட்டு.


கணினியில் உள்ள தங்கள் கோப்புகளை நீங்கள் மட்டும் பயன்படுத்தவேண்டுமா..?
உங்கள் கோப்புகள் கடவுச் சொல் கொடுத்துத் திறக்கப்பட வேண்டுமா..?
கோப்புகளைப் பாதுகாக்கும் மென்பொருள் இலவசமாகவும், குறைந்த அளவு கொள்திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டுமா..?

உங்கள் கணினி விண்டோசு - எச்பி, 2003, விசுடா, 7. என்னும் இயங்குதளங்களைக் கொணடதா..?

எனது கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்காக நான் பரிந்துரைக்கும் மென்பொருள் இதுதான். இங்கே சொடுக்கி 2.4 எம்பி அளவுடைய இந்த மென்பொருளைப் பதிவிறக்கி தங்களின் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவும்போதே கடவுச்சொல் கேட்கும்... கொடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். உங்கள் கோப்புகளை அதன் உள்ளே இட்டுவைத்து மூடவும். அடுத்து உங்கள் கோப்புகளை நீங்களே நினைத்தாலும் கடவுச்சொல் இன்றித் திறக்கமுடியாது.


பயன்படுத்துவதில் ஏதும் ஐயமிருந்தால் கேளுங்கள் நண்பர்களே.

6 கருத்துகள்:

  1. உங்கள் அயராத தடம் மாறாத எழுத்துப் பணிக்கு என் அன்பான வாழ்த்துகள் சேகர்.

    பதிலளிநீக்கு
  2. சார் பதிவுல தலைப்பு போடலன்னு நினைக்கிறேன். தலைப்ப காணோம்

    பதிலளிநீக்கு
  3. @ஜோதிஜிநீண்ட நாளுக்குப் பின்னர் வந்தமைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு
  4. @சசிகுமார் அறிவுறுததியமைக்கு மிக்க நன்றி சசி..
    இப்போது இட்டுவி்ட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1 மே, 2011 அன்று 8:42 PM

    கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

    பதிலளிநீக்கு
  6. @ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) அது எனது நோக்கமல்ல நண்பா.

    இலக்கியத் தகவல்களுக்கிடையே சிறு மாறுதலுக்காகத் தான் இதுபோன்ற தகவல்களை உள்ளீடு செய்கிறேன்.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு