பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 27 ஏப்ரல், 2011

தமிழ்நாட்டின் அடையாளம்.


எனக்குப் பலநேரங்களில் நாம் எங்கு இருக்கிறோம்..?
தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா..?
என்ற ஐயம் வந்துவிடும்.
அப்போதெல்லாம் என் கண்ணில் படும் “தமிழ் வாழ்க“ என்ற பெயர்ப்பலகைகள் தான் நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை எனக்கு அறிவுறுத்தும்..

இப்படி எழுதி வைத்தால் தான் தமிழ் வாழுமா..?
எனது அரசுக்கு ஏன் இப்படியொரு சிந்தனை வந்தது..?
என நான் பல முறை சிந்தித்துப்பார்த்திருக்கிறேன்..!

நாம் வாழ்வது தமிழ்நாடு என்ற சிந்தனை தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு குறிப்பாக வணிகத்துறையினருக்கு வரவேண்டும் என்பதால் தான் அவர்கள் கண்ணில் அடிக்கடித் தெரியுமாறு இவ்வளவு பெரிய பலகை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிந்தனை...


 பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது!
செருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது!
உருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது!
தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது!


 தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஒரு நிறுவனம் கோ-ஆப்-டெக்ஸ் எனத் தன் பெயரை வைத்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்துவது ஆகாதா..?
அதே கூட்டுறவு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு “வானவில்“ அழகாய் இருக்கிறது.

 “ஆவின் பால்“ பாலாகவும் சுவைக்கிறது – தமிழாகவும் இனிக்கிறது.

 Bakery என்பதை பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களால் “பேக்கரி என்று எழுதினால் தமிழாகிவிடாது.
பேக்கரி என்னும் ஆங்கிலச் சொல்லை எரித்து “அடுமனை“என தனித்தமிழில் பொறித்திட வேண்டும்.

ஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழ் புரியாதா..?
கடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன..?

9 கருத்துகள்:

  1. அற்புதம் பதிவு நன்றாக உள்ளது நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. //// பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது!
    செருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது!
    உருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது!
    தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது!// நச்சென்று இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. @Nagasubramanian உணர்ச்சிக் கவிஞரின் பொன்னான அடிகள் இவை நண்பா..

    பதிலளிநீக்கு
  4. அவசியமான பதிவு நண்பரே... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. //ஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.//

    உண்மை தான்..
    அவர்கள் தாம் உண்மையில் தமிழ் மேல் அக்கறை கொண்டு பெயர் வைக்கிறனர். பலரும் தங்கள் கடையின் வரவிற்கோ அல்லது சோதிடத்திற்கோ பெயர் வைக்கிறனர்!!

    சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஐயா..
    நன்றி

    எனது இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. உண்மை தான் ஐயா.தமிழ் நாட்டில் தமிழ் வாழ்கிறதா என்றால் இல்லை ஆங்காங்கே ஊசலாடுகிறது என்பதே உண்மை.சிந்திக்க வைத்தது இப்பதிவு ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு