பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
சனி, 19 மார்ச், 2011
What She Said.....(குறுந்தொகை)
0 ஆங்கிலம் தெரிந்தவர்களும் சங்க இலக்கியத்தின் சிறப்பை உணரவேண்டும்.
0 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலத்துக்கு வாயையும் வயிற்றையும் விற்றுவிட்ட அறிவாளிகளும் சங்கஇலக்கியத்தின் பெருமையை அறிந்துகொள்ளவேண்டும்..
என்ற நோக்கிலேயே கீழ்க்காணும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்பை வெளியிட்டுள்ளேன்.
Bigger than earth, certainly,
higher than sky,
more unfathomable than the waters
is this love for this man
of the mountain slopes
where bees make rich honey
from the flowers of the kurinchi
that has such black stalks
மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.
காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.
வாய்மொழிப் பாடல்கள்,மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.
காதலை வடிவப்படுத்த முடியுமா?
காதல் என்ன பொருளா? என்றெல்லாம் வினா எழலாம்.
அழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,
இப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள பாடலின் மீது சொடுக்கவும்.
அருமை குணசீலன். தமிழை அனேகம்
பதிலளிநீக்குபேர் மறந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.
காதல்...சொல்ல முடியாத உணர்வு.காதலை அனுபவிக்காத உயிர்களே இருக்காது உலகில் !
பதிலளிநீக்கு@புவனேஸ்வரி ராமநாதன்தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!
பதிலளிநீக்கு@ஹேமா உண்மைதான் ஹேமா
பதிலளிநீக்கு