பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 13 ஜனவரி, 2011

பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)



தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.

• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.



தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.




பத்துப் பருவங்களுக்கான விளக்கம்


இரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்


காப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.
செங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.
தால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.
முத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.
வருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.
அம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.

ஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்

சிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது
சிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.
சிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.

பெண்களுக்கான மூன்று பருவங்கள்.


நீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.
அம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்
ஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.

20 கருத்துகள்:

  1. பிள்ளைத்தமிழை படங்களுடன் விளக்கிய விதம் அருமை முனைவரே.

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமாக சொல்லி இருக்கிறீங்க! உங்களுக்கு திருமணம் ஆகி, முதல் பொங்கல் வருதுங்க.... சிறப்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அம்மானை காயகளை தூக்கி போடுதல்
    in the sentence sir confuse so, the ful meaninsir wish you happy pongal

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமாக சொல்லி இருக்கிறீங்க!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நீண்ட நாள்களுக்குப் பிறகு......பிள்ளை தமிழ் குறித்த விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  6. பிள்ளைத்தமிழை படங்களுடன் விளக்கிய விதம் அருமை முனைவரே.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. முனைவரே

    அருமை இலக்கியங்கள் இன்று தமிழின் ரகசியமாய் போய்விட்டது அதனை என் போன்ற தமிழில் அவ்வள்வு ஞானமில்லாதவர்க்கு புரியுமளவுக்கு விவரித்தமைக்கு நன்றி

    மிகவும் அருமை

    ஜேகே

    பதிலளிநீக்கு
  8. @சே.குமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  9. @மதன்மணி மேற்கண்ட படங்களைப் பார்த்தாலே முழுவதும் புரியுமே!!

    பதிலளிநீக்கு
  10. @கலைமகன் பைரூஸ்தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பைரூஸ்

    பதிலளிநீக்கு
  11. @இன்றைய கவிதை தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி.

      ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.

      திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் எழுதியது பகழிக்கோத்தர்.
      நன்றி.
      மதி மணி

      நீக்கு
  13. தமிழுக்கு தொண்டு செய்யும் உள்ளத்திற்கு வாழ்த்துகள்.
    - கன்னிக்கோவில் இராஜா, சென்னை

    பதிலளிநீக்கு