பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 23 டிசம்பர், 2010

மதிப்புகள்



ஒருமுறை ஒரு மனிதன் பேரழகு சிலையொன்றைத் தன் நிலத்திலிருந்து கண்டெடுத்தான். அவன் அதனை அழகான பொருட்களை விரும்பும் ஓர் ஆட்சியாளரிடம் கொண்டு சென்று விற்பதற்காகக் கொடுத்தான்.

ஆட்சியாளர் ஒரு பெருந்தொகைக்கு அதனை வாங்கியதும் அந்த மனிதன் பிரிந்துசென்றான்.

பணத்துடன் வீட்டை நோக்கிச் செல்லும்போது அவன் ஏதோ நினைத்து தனக்குத் தானே …………

“இந்தப் பணம் எப்பேர்ப்பட்ட உயிர்ப்புள்ளது!
ஆயிரக்கணக்கான வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த செதுக்கப்பட்ட, யாரும் கனவுகாணா இந்தச் சிலைக்கு இவ்வளவு பணத்தை எவ்வாறு ஒருவரால் கொடுக்கமுடியும்………..,?”

என எண்ணிக்கொண்டான்.

இப்போது அந்த ஆட்சியாளர் தன்னிடமிருந்த அந்தச் சிலையினைப் பார்த்தபடி எண்ணிக்கொண்டார்………

“என்ன அழகு!
என்ன உயிர்த்துடிப்பு!
எப்பேர்ப்பட்டதோர் ஆன்மாவின் கனவு!
ஆயிரக்கணக்கான வருடங்களின் இனிமையான தூக்கத்தின் புதுமையான வளர்ச்சி!
இறந்துபோன கனவற்ற இந்தப் பணத்துக்காக எவ்வாறு ஒருவன் இந்தச் சிலையினைக் கொடுக்கமுடியும்……….?”

12 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு... எண்ணங்கள் எப்படியானவை என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
    நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.

    பதிலளிநீக்கு
  3. எண்ணங்களை பற்றிய பகிர்வு நல்லாயிருக்கு குணா..

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,
    கலீல்ஜிப்ரான் என்பதன் பொருள் என்ன? இது ஒரு வகை இலக்கிய வடிவமா?

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.. கலில் ஜிப்ரான் கவிதைகள் அதிகமாகப் படித்தது இல்லை. படிக்கும் ஆர்வத்துடன்..

    நீண்ட நாட்களாகி விட்டது பார்த்து. எப்படி இருக்கிறீகள் குணா?

    பதிலளிநீக்கு
  6. உங்க வலைப்பூ முன்னாடி இருந்ததை விட இப்ப அழகா இருக்கு...குணா.. முக்கியமா முகப்பு..தலைப்பு...

    பதிலளிநீக்கு
  7. கருத்துரைக்கு நன்றி அன்பு நெஞ்சங்களே!!

    பதிலளிநீக்கு