வெள்ளி, 1 அக்டோபர், 2010
தமிழனா... தமிங்கிலனா?
தமிழன்…..
“சிட்டி“யில் “காலனி“யில் “அப்பார்ட்மென்“டில் “பிளாக்“கில் “ப்ளோரி“ல் “டோர்நம்பரி“ல் குடியிருக்கிறான்.
தமிழன்……
“மம்மி“யும் “டாடி“யும் “அங்கிளு“ம் “ஆன்டி“யும் “பேபி“யும் ரிளேடிவ்“சும் “ப்ரென்ட்சு“மாய் வாழ்கிறான்.
தமிழன்……
“டூத்பேஸ்ட்“டால்“பிரஷ்“ஆல் பல் தீட்டுகிறான்.“ஹேர்ஆயிலை“ “கிரீமை“ தலைக்கு வைக்கிறான்.“பவுடரை“ பேஸ்“கிரீமை முகத்தில் இடுகிறான்.
“ப்ளேடால்“ சேவிங்“ ரேசரால் முகமயிர் மழிக்கிறான். “சர்ட்டை“பேன்டை“ உடலில் அணிகிறான். “சாக்ஸை“சூசை“ காலுக்குப் போடுக்கறான்.
தமிழன்……
“ஸ்டோரீஸ்“ நாவல்ஸ்“ படித்து - “ஸோங்ஸ்“ கேட்டு “டான்ஸ்“ட்ராமா“ பார்த்து - “சினிமா“டிவி“ சுவைத்து மகிழ்கிறான்.
தமிழன்…….
கடையில் “பில்“ கட்டுகிறான். மருத்துவமனையில்“டோக்கன்“ கேட்கிறான்.பேருந்தில் “டிக்கெட்“ கேட்கிறான்.
பால் விற்பனை நிலையத்தில் “கார்டு“ கேட்கிறான்.
தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருடவருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் “Beware Of Dogs" என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருக்கிறான்.
தமிழனா தமிங்கிலனா… காசியானந்தன். பக்-44-45.
இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் நானறிந்தவரை...
சிட்டி - நகரம்
காலனி - கூட்டுக் குடியிருப்பு
அப்பார்ட்மென்ட் -அடுக்ககம்
பிளாக் - கட்டிடத்தொகுதி
ப்ளோர் - தளம்
டோர் - கதவு
நம்பர் - எண்
மம்மி - அம்மா
டாடி - அப்பா
அங்கிள் - மாமா
ஆன்டி - அத்தை
பேபி - குழந்தை
ரிளேடிவ் - உறவினர்
ப்ரெண்ட்ஸ் - நண்பர்கள்
டூத்பேஸ்ட் - பற்பசை
பிரஷ் - பல்துலக்கி
ஹேராயில் - தலைக்குத் தேய்க்கும் எண்ணை
கிரீம் - பசை,களிம்பு
பவுடர் - தூள், பொடி
பேஸ் கிரீம் - முகப் பசை
ப்ளேடு - மழிதகடு
சேவிங் - மழிப்பு
ரேசர் - மழிப்புக் கருவி
சர்ட் - சட்டை
பேன்ட் - கால்சட்டை
சாக்ஸ் - காலுறை,மூடணி
சூ - காலணி
ஸ்டோரி- கதை
நாவல் - புதினம்
ஸோங் - பாடல்
டான்ஸ் - ஆடல்
ட்ராமா - நாடகம்
சினிமா - பெரிய திரை
டிவி - தொலைக்காட்சி
பில் - விலைப்பட்டியல்
டோக்கன் - அடையாள அட்டை
டிக்கெட் - பயணச்சீட்டு
கார்டு - அட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அன்பின் குணா, நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
முனைவர் இரா. திருமுருகனாரின் என் தமிழ் இயக்கம் நூலிலிருந்து பதிவுத் துறையில் பயன்படுத்தப் படும் சொற்கள் சில.
பத்திரம் - ஆவணம்
குமாரிகள் - மகள்கள்
உயில் - விருப்ப ஆவணம்
பாத்தியதை- பொறுப்பு
ஜீவியதசை- உயிர் வாழ்க்கை
வாரிசு - பிறங்கடை
சம்மதித்து- உடன்பட்டு
கிரயத் தொகை- விலைத் தொகை
தானாதி விற்கிரயங்களுக்கும், சர்வ சுதந்திரமாகவும்---- எல்லாவகையான நன்கொடை, விற்பனைகளுக்கும் உரிமையாய்
புத்திர பொளத்திர- பாரம்பரியமாய், மக்கள் பேரர்கள் வழியாய்
அனுபவித்து - மரபாய் பயன்படுத்தி
விவரம் - விளக்கம், வயணம்
வில்லங்கம் - உரிமைப் பழுது
செக்குப் பந்தி - நாற்புற எல்லை
புத்தகம் - சுவடி
அருமையான சிந்தனை பதிவு அருமை ஆனால் இது போன்ற பதிவுகளுக்கு கிடைத்திருப்பதோ மூன்று ஓட்டு என்னையும் சேர்த்து நான்கு என்ன சொல்ல இவர்களை.
பதிலளிநீக்குnice post we want more...
பதிலளிநீக்குthanks...
நல்ல பகிர்வு குணா.. நடைமுறையை நன்றே பகிர்ந்து உள்ளீர்... உரிய தமிழ் வார்த்தைகல் பயனுள்ளவை...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு குணா.
பதிலளிநீக்கு@ஆரூரன் விசுவநாதன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..
பதிலளிநீக்கு@சசிகுமார் உணர்ச்சி்க் கவிஞர் காசியானந்தன் அவர்களின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பா
பதிலளிநீக்குஅன்று வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள என்றார்கள்
மரம் வளர்த்தார்கள்
இன்றும் வீட்டுக்கொரு மரம் வளருங்கள் என்கிறார்கள் மரங்கள் வளருகின்றன!!
என்று
இன்றைய மரம் என்று மனிதர்களைத் தான் கவிஞர் சுட்டுகிறார்..
மரங்களிடம் நான் ஓட்டுகளை எதிர்பார்ப்பதில்லை நண்பா.
@tinfotainment வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
பதிலளிநீக்கு@தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி அன்பரே.
பதிலளிநீக்கு@ஈரோடு தங்கதுரை தங்கள் வருகைக்கு நன்றி தங்கதுரை
பதிலளிநீக்குமழிதகடு வேண்டுமென எந்தக் கடையில் கேட்பது?
பதிலளிநீக்கு”வெள்ளைக் காரணா திருட வருகிறான்?”.. பிடிச்சிருக்கு.
எனக்குத் தெரிந்தவர் வீட்டில் நல்ல தமிழை ஆங்கில எழுத்தில் பார்த்தேன் "Annai Illam".