ஒரு நாள் கண் சொன்னது….
நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் நீலப்பனித்திரை மூடிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறதன்றோ!
காது கேட்டது…
சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது….
ஆனால் இங்கே எங்கே இருக்கிறது மலை?
யாதொரு மலையும் இல்லையே?
நான் எதுவும் கேட்கவில்லையே?
பிறகு கை பேசியது…
நான் அதை உணரவோ தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டதே! என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே!
இப்போது மூக்கு சொன்னது….
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?
பிறகு கண் மறு பக்கம் திரும்பிக்கொண்டது. மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.
இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது…
ஏதோ ஒன்று இருக்கிறது என்று.
கதை உணர்த்தும் நீதி….
○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.
இன்னும் திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது சிந்தனைகளின் திறவுகோலாக இக்கதை இருக்கிறது.
அருமையான கருத்து ..
பதிலளிநீக்கு//○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
பதிலளிநீக்கு○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.
//
கதை உணர்த்தும் நீதி முற்றிலும் உண்மை.
அருமையான கதை நண்பரே..!
நல்ல பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழில் இத்தகைய பதிவுகளை பார்க்கும் பொழுது உள்ளம் பூரிப்படைகின்றது.
யோசிக்க வைக்கிற,கதைதான்!
பதிலளிநீக்குஅருமை சார் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகதை உணர்த்தும் ஆன்மீக நீதி:
பதிலளிநீக்குஉண்மையை (கடவுளை) உணர்ந்த ஞானி அதை உணராதவர்களுக்கு விளக்கி சொல்லுதல் எளிதல்ல்.
கதையும் நீதியும் மனதில் படிகிறது குணா!
பதிலளிநீக்குநன்றி புதிய மனிதா
பதிலளிநீக்குநன்றி குமார்
நன்றி இரப்பேல்
நன்றி சைவ கொத்துபுரோட்டா
நன்றி சசி
நன்றி சபரி
நன்றி ஹேமா