தொழில்நுட்பம் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது…………...
² எதிர்காலத்தில் மக்கள் தம்முள் தொடர்பு கொள்ளும் ஒரே மொழியாக இணையம் இருக்கப்போகிறது. நமக்குள் ஏற்படும் மொழிச்சிக்கல்களை சில மென்பொருள்கள் தீர்த்துவிடுகின்றன.
² இந்நிலையில் இணையத்துடன் உறவாட அவரவர் தாய்மொழியே சிறந்த கருவி என்ற சிந்தனை மேலோங்கிவருகிறது.
² ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலேயே கணினியை இணையத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது.
² கணினியையும், இணையத்தையும் பயன்படுத்த இன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற தேவையில்லை.
² தமிழ் மொழியை ஆதரிக்கும் இயங்குதளங்களும் (ஓ.எஸ்), உலவிகளும் (ப்ரௌசர்), தேடு எந்திரங்களும் (கூகுள்….), மென்பொருள்களும் (என்.எச்.எம், அழகி…..) நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன…
² நாம் பயன்படுத்தும் தட்டச்சுப்பலகையும் தமிழிலேயே இருந்தால் எப்படி இருக்கும்…!!!!!!!!!
சீனம் உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி. சீனர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் தாய்மொழிப்பற்றே அடிப்படைக் காரணமாகும். சான்றாகப் பாருங்கள்….
இவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவி கூட அவர்தம் தாய்மொழியிலேயே இருக்கிறது.
² திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழி தமிழ்,செம்மொழிகளுள் ஒன்று. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட்போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
(இவ்வலைப்பதிவில் வலது ஓரத்தில் தெரியும் நியோ கவுண்டரில் 100 நாடுகளுக்கு மேல் பார்வையாளர்களின் வருகையைப் பார்க்கமுடிகிறது. உலகு பரவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இத தக்க சான்றாக விளங்குகிறது.)
² இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசைஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது
இப்படி பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தமிழில் தட்டச்சுப்பலகையை வழக்கத்திற்குக் கொண்டுவர நம்மால் ஏன் முடியாது?
மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி விக்கிப்பீடியா)
கொண்டு வரலாம்.
பதிலளிநீக்குதமிழிலிலான இணையப் பாவனை அதிகரித்தால் வலைப் பதிவர்கள் ராஜாவாகிவிடுவார்கள் என்பது எனது நம்பிக்கை
பதிலளிநீக்கு//மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும்//
பதிலளிநீக்குகண்டிப்பாக பயன்பாடு அதிகரிக்கும் முனைவரே...
விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
அட... இது நல்லா இருக்கே... நிச்சயம் முடியும் நம்மால். வரத்தான் போகிறது ஒரு நாள். நீங்கள் கூட இருக்கலாம் அந்த நெம்புகோலாய்.
பதிலளிநீக்குமுடியும் முனைவரே. வருங்காலத்தில் நிச்சயம் நடக்கும் என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஸ்ரீ....
முடியும்
பதிலளிநீக்குmrknaughty
முதலில் நம் தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவர் ஆங்கில எழுத்து ஏ விற்கு க வைத்தால் மற்றெருவர் ய வைக்கின்றார்...அனைத்து தட்டச்சு முறையும ஒன்றாக மாறட்டும். பிறகு கொண்டுவருவது சுலபம்....நல்ல கட்டுரை...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.
சீக்கிரம் வரும்
பதிலளிநீக்குவிசப்பலகை தமிழிழும் உண்டு ஆனால் பிரச்சனை என்னவென்றால் மூண்றாம் தரப்பு keyboard driver-றை பாவிக்கவேண்டியுள்ளது. Microsoft vista, XP, Windows7-ல் நேரடியா TAM99 keyboard driver இல்லை.வேற ஏதோ "tamil Standard" இருக்கிறது.
பதிலளிநீக்குதமிழ் விசைப்பலகை நல்ல சிந்தனைதான். பேச்சிலிருந்து எழுத்து வடிவு, கையால் எழுதிய உரையை அப்படியே கணினி எழுத்துக்களாக பாவித்தல் போன்ற முறை கணினியை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு செல்லும்.
பதிலளிநீக்கு// ஒருவர் ஆங்கில எழுத்து ஏ விற்கு க வைத்தால் மற்றெருவர் ய வைக்கின்றார்.
பதிலளிநீக்குஅனைத்து தட்டச்சு முறைகளையும் கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. அவரவருக்கு உகந்ததைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. தமிழ் தட்டச்சு இயந்திரத்திலும் tam99 முறைதான் வேண்டுமென்றால் என்ன செய்வது?
@சைவகொத்துப்பரோட்டா வருகைக்கு நன்றி அன்பரே.
பதிலளிநீக்கு@அஸ்பர்-இ-சீக் உண்மைதான் அஸ்பர்.
பதிலளிநீக்கு@சே.குமார் கருத்துரைக்கு நன்றி குமார்.
பதிலளிநீக்கு@நிலா மகள் நாம் ஒவ்வொருவரின் எழுத்தும் கூட காரணமாக அமையலாம் தோழி.
பதிலளிநீக்கு@ஸ்ரீ.... கருத்துரைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@mrknaughty கருத்துரைக்கு நன்றி அன்பரே.
பதிலளிநீக்கு