பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
மீடியாகோப்பும் வீடியோவெட்டும்.
மீடியாகோப்பு என்னும் மென்பொருள் விண்டோஸ் மீடியாபிளேயர்,விஎல்சி பிளேயர் போல வீடியோக்களை இயக்குவதற்குப் பயன்படும் மென்பொருள் ஆகும். இதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.
ஆடியோ, வீடியோக்களை இயக்கலாம்.
ஆடியோ, வீடியோக்களை வெட்டிக்கொள்ளலாம்.
ஆடியோ, வீடியோக்களை வேறு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.
நிழற்படங்களை வெட்டிக் கொள்ளலாம்.
நிழற்படங்களின் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
நிழற்படங்களை வரிசையாக்கிப் பார்க்கலாம்(ஸ்லைடு சோ)
இப்படி பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த மென்பொருளில் வீடியோக்களை எப்படி வெட்டிக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.
திரைப்படங்களிலோ, வேறு வீடியோக்களிலோ சிறு காட்சிகள் நமக்கு கருத்தரங்குகளிலோ, மாணவர்களுக்கு விளக்குவதற்காகவோ, சொற்பொழிவு விளக்கங்களுக்காகவோ தேவைப்படும்.
வீடியோக்களை வெட்டிக்கொள்ள பல்வேறு இலவச மென்பொருள்கள் பயன்பாட்டிலிருந்தாலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைப்பதுடன் எளிய கட்டமைப்புடன் கூடிய பயன்பாடுடையதாக இருப்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.
இந்த மென்பொருளைப் பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொண்டு, பின் மீடியா கோப் பிளேயரைத் திறக்கவும்,
அடுத்து ஓபன் என்னும் பகுதியில் நாம் வெட்ட வேண்டிய வீடியோக்கோப்பைத் திறந்து செலக்ட் ஸ்டார்ட் என்னும் பகுதியி்ல் சுட்டித் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
செலக்ட் என்ட் என்னும் பகுதியில் எதுவரை என்பதைத் தெரிவு செய்யவும்.
அடுத்து பிளே செலக்ட் என்பதைத் தெரிவு செய்து அடுத்து உள்ள பெட்டியில் எந்த ஒளி வடிவத்தில் வேண்டும் என்பதையும் எந்தத் தரத்தில் வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு சேவ் என்பதைச் சுட்டினால் நமக்குத் தேவையான வீடியோ சேமிக்கப்பட்டுவிடும்.
நாம் சேமிக்கும் கோப்பை flv என்னும் வடிவத்தில் சேமிப்பது சிறப்பாகும். ஏனென்றால் இந்த வடிவம் தடையின்றி எல்லா மீடியாப் பிளேயர்களிலும் இயங்கக்கூடியதாகும்.
நன்றாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு.flv பார்மட் கணினிக்கு சரியாய் இருக்கும் ஆனால் அதிலும் பிக்ஸல், தரம் குறைத்துவிடும் மேலும் கன்வெர்ட் செய்தாலும் சிறப்பாக இருக்காது நண்பரே
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
எப்பவும் போல் நல்ல பதிவு.
பதிலளிநீக்குஇது எப்பவும் போல் பயனுள்ள பதிவும் கூட.
நல்ல தகவல் நண்பரே... கருத்துரை பகுதியில் உள்ள REPLY எப்படி செட் செய்தீர்கள்? தகவல் தரமுடியுமா? அதன் பயன் பற்றியும்...thambaramanbu@gmail.com க்கு அனுப்பினாலும் நல்லது.
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி.
பதிலளிநீக்கு@ஜிஎஸ்ஆர்அப்படியென்றால் தாங்களறிந்த சிறந்த வடிவம் எதுவும் இருந்தால் கூறாலாமே அன்பரே..
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி குமார்.
பதிலளிநீக்கு@குடந்தை அன்புமணி தங்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன் நண்பா
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே...(இதுபற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்-http://velang.blogspot.com/2010/05/blog-post_12.html)
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.
@வேலன். மகிழ்ச்சி நண்பரே.
பதிலளிநீக்கு