பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
மனதைக் கவரும் எபிக் உலவி.
உலவிகள் (ப்ரௌசர்) இணையத்தில் உலவுவதற்குப் பயன்படுவனவாகும். உலவிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது…..
இன்டர்நெட் எக்சுபுளோர், மொசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம், ஓப்ராமினி, சபாரி போன்ற உலவிகளாகும். இவ்வுலவிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலவியாக மொசில்லா பயர்பாக்சு (நெருப்புநரி உலவி) என்னும் உலவி வழக்கில் உள்ளது.
14.07.10 அன்று இந்திய வல்லநர்களால் இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட “எபிக் உலவி“ வெளியிடப்பட்டது. வெளிநாட்டார் அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து உருவாக்கிய உலவிகளையே பயன்படுத்திவந்த நாம் இப்போது நமக்கென நாமே உருவாக்கிய எபிக் உலவியைப் பயன்படுத்துவது புதிய அனுபவமாகவே உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கிடன் ரெப்ளெக்ஸ் என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது.
இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்
எபிக் உலவியின் தனிச்சிறப்புகள்.
◊ மொசில்லா பயர்பாக்சின் கட்டமைப்பில் இவ்வுலவி வடிவமைக்கப்பட்டிருப்பதால் செயல்திறன் விரைவாகவுள்ளது.
◊ இவ்வுலவியுடன் வழங்கப்படும் ஆண்ட்டி வைரஸ் (எதிர்ப்பு நச்சுநிரலி)பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. இந்த உலவியின் வழி எந்த பைலை (கோப்பை)பதிவிறக்கினாலும் , அது வைரஸ் சோதனை செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடையதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் உலவியாக இது விளங்குகிறது.
◊ இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
◊ இவ்வுலவியின் இடது ஓரத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்தும், பேசுபுக், டிவைட்டர்,ஆர்குட்,ஜிமெயில், யாகூ, ஆகிய இணைப்புகள் உள்ளன. இவற்றை நாம் திறந்திருக்கும் பக்கத்தில் இடது பகுதியில் உட்பக்கமாகக் கூடத் திறக்க முடிகிறது.
◊ மேப், போக்குவரத்து, வேலைவாய்ப்பு,விளையாட்டு, பேக்கப், கலெக்சன்,புக்மார்க்கிங், வரலாறு,பதிவிறக்கம், ஆட்ஆன் என்னும் பல்வேறு வசதிகளும் இந்த எபிக் உலவியின் தனித்தன்மைக்குத் தக்க சான்றாக விளங்குகின்றன.
◊ எனக்குத் தெரிந்து எழுதும் (ரைட்டர்) வசதியை உலவியிலேயே வழங்கும் முதல் உலவி எபிக்தான். ரைட்டர் பகுதியிலிருந்து கொண்டு நாம் பயன்படுத்தும் கணினியிலுள்ள கோப்புகளைக் கூட எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
◊ உலவியின் பின்புலத்துக்காக வழங்கப்படும் தீம்கள் கண்ணைக் கவர்வதாகவுள்ன.இதனை ஸ்கின் என்னும் பகுதியில் பெறமுடிகிறது. மக்கள், பண்பாடு, தேசியம், விளையாட்டு, சினிமா, கலை, இசை,சமயம், அரசியல்,இயற்கை, என பல்வேறு வகைப்பாடுகளில் இந்த வசதி அளிக்கப்படுகிறது.
அருமையான தகவல். நன்றி.
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா.
பதிலளிநீக்குதமிலிஷ்ஷில் சப்மிட் செய்யவில்லையா நண்பரே...பதிவு அருமை...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.
பயனுள்ள தகவல்கள் சார்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
“எபிக் உலவி ஐத் தான் பயன் பயன்படுத்துகிறேன்.அதன் skin ஆஹா அழகு. side bar மிக பயனுள்ள ஒன்று. மிக அருமை. பயனுள்ள பதிவு.நன்றி.
பதிலளிநீக்கு@வேலன். வருகைக்கு நன்றி வேலன்.
பதிலளிநீக்கு@abul bazar/அபுல் பசர் நன்றி அபுல்.
பதிலளிநீக்கு@உமா ஆமாம் உமா..
பதிலளிநீக்குயாம் பெற்ற இன்பம்..