பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
தமிழுக்கு வந்த சோதனை.
மூன்றாமாண்டு இளங்கலை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது மடிகணினியில் இராமலிங்க வள்ளலாரின் நிழற்படத்தைக் காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று மாணவர்களிடம் கேட்டேன்..
மாணவர் -1 - அன்னைத் தெரசா…
என்றார். எனக்குத் திக்கென்றது.
மாணவர் -2- விவேகானந்தர்…….
என்றார். எனக்கு வார்த்தை எதுவுமே வரவில்லை. இவர்கள் சொன்னதைக் கேட்டு மாணவி ஒருவர் சிரித்தார். ஓ சிரிப்பதால் அவருக்காவது தெரியும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றேன்…
மாணவி - கிரன் பேடி….. என்று பதிலளித்தார்…
(இவர்கள் யாரும் விளையாட்டுக்காக இவ்வாறு பதிலளிக்கவில்லை…
இவர்களின் திறனே அவ்வளவு தான்)
இந்த மாணவர்களெல்லாம் இன்று காலையில் தான் வேறு ஏதோ கிரகத்திலிருந்து இறங்கிவந்திருப்பார்கள் என்று தோன்றியது எனக்கு. அப்போது முதலில் பதிலளித்த மாணவன் ஐயா நான் மீண்டும் சொல்கிறேன் என்றான் சரி இப்போதவது தெரிந்ததே என்று சொல்லுங்க என்றேன்….
அவன் சொன்னான்…
ஐயா இவர் வேளாங்கன்னி என்றான்..
துன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட என்னை மற்றொரு மாணவர் இடைமறித்து ஐயா இவர்தான் இராமலிங்க வள்ளாலார் என்று சொல்லி தேற்றினார்.
தமிழ் மாணவர்ளே இந்த நிலையென்றால்…………..!
இப்படியெல்லாம் கூட தமிழுக்குச் சோதனை வருமா?
திரைப்பட நடிகர்களை அடையாளம் தெரியும் இந்தத் தலைமுறைக்கு தமிழ்ச்சான்றோர்களை அடையாளம தெரியவில்லையே…..!!!!!!!!!!!!!!!!!!!
• “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்“
• “திருவருட்பாவை தந்த இராமலிங்க வள்ளலார்“
• “சமரச சன்மார்க்கம் கண்டவர்“
• “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை“ என்று ஜோதியில் இறைத்தன்மையை உணர்ந்தவர்.
• “பசிப்பிணியை அகற்ற வேண்டும் என்று எண்ணியவர்“
• “ஆன்மீகவாதியாக இருந்தாலும் இவரது சிந்தனைகள் முற்போக்குத்தனமானவை“
இவரையும் இவர் போன்ற சான்றோரையும் அடையாளம் காட்ட வேண்டும் என்று உலகத்தமிழ் மாநாட்டு மலரில் நிழற்படமாக அளித்தது அரசு. அதனை தமிழம்.நெட் (http://www.thamizham.net/) என்ற இணையம் பதிவிறக்கிக் கொள்ளும் வசதியுடன் பிடிஎப் வடிவில் தந்து உதவியது.
அடுத்த தலைமுறையினருக்கு உதவும் என்று நானும் இவ்வலைப்பதிவில் தொடர்நிழற்பட முறையில் முன்பே தந்தேன்…
ஆனால் இந்த தலைமுறையினருக்கே இந்த தமிழறிஞர்களை அடையாளப்படுத்தவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை நான் இப்போது தான் உணர்ந்தேன்…
இராமலிங்க வள்ளலாருக்கே இந்த நிலையென்றால்…
தமிழ்ச்சான்றோர் என்னென்ன சோதனைகளைக் காணவுள்ளார்கள் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது……………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வேதனையான செய்திதான் குணா.....
பதிலளிநீக்குஅப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்-----
என்று கதறத்தான் தோன்றுகிறது
வேதனைதான்.. இதற்கு காரணம் நமது ஊடகங்களே....சினிமா மட்டும்தான் உலகின் எல்லை
பதிலளிநீக்குஎனக்காண்பிக்கிறது. மாணவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் முனைவரே...
இன்றைய நிலைமையில், அதையும் நமீதா தமிழில் அறிமுகப்படுத்த வேண்டுமோ? உங்கள் வேதனை, நியாயமானதுதான்.
பதிலளிநீக்குமுனைவரே,
பதிலளிநீக்குநிச்சயமாய் வேதனையளிக்கும் செய்தி. வாடிய பயிரைக் கண்டு வாடிய நல்ல உள்ளத்துக்கே இந்த நிலை! பதிவு செய்ததற்கு நன்றி. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிய உதவும் இடுகை.
ஸ்ரீ....
மிகவும் வருத்தம்தான்.....
பதிலளிநீக்குஆனால் இங்கு மாணவர்கள் மேல் தவறில்லை.
ஆறு-எட்டு வகுப்பில் கண்டிப்பாக வள்ளலார் அவர்களின் பாடல் வந்திருக்கும்.
அந்த சமயம் அவர்களின் ஆசிரியர் அவரின் படத்தையும் காட்டி இருந்தால் மனதில் பதிந்திருக்கும்.
நான் பள்ளி கல்விக்கு பிறகுதான் வள்ளலார் அவர்களின் உருவப்படத்தை பார்க்கும் வாய்ப்பை கிடக்க பெற்றேன்.
கொடுமை
பதிலளிநீக்கு\\மாணவி - கிரன் பேடி….. என்று பதிலளித்தார்…\\
பதிலளிநீக்குமுதல் இருவரின் பதிலாவது பரவாயில்லை ஆனால் மூன்றாவது அந்த பெண் சொன்ன பதில் வேண்டுமென்றே சொன்னதுபோல் இருக்கிறது குறைந்தபட்சம் மூளையாவது அவர் உபயோகித்திருக்கலாம்
@ஆரூரன் விசுவநாதன் உண்மைதான் அன்பரே.
பதிலளிநீக்கு@நாஞ்சில் பிரதாப் உண்மைதான் பிரதாப் மகாகவி பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தாலும் சண்டைக்காட்சிகள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.
பதிலளிநீக்கு@Chitra திரைப்படங்களே வாழ்க்கை என்ற தலைமுறைக்கு திரைநட்சத்திரங்களே வழிகாட்டிகளாகிப் போனது அவலம்!!
பதிலளிநீக்கு@ஸ்ரீ.... மனவேதனையைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் குறைந்தது போல உள்ளது.
பதிலளிநீக்கு@தமிழ்மணி தாங்கள் கூறுவதும் உண்மைதான் அன்பரே.
பதிலளிநீக்கு@A.சிவசங்கர் ஆம் நண்பா.
பதிலளிநீக்கு@ஜிஎஸ்ஆர் ஆம் நண்பா..
பதிலளிநீக்குபலரும் மூளையைப் பயன்படுத்துவதில்லை..
இந்தப் பெண்ணும் அப்படித்தான்.
தப்பு நம் பேரில் தான். இராமலிங்க அடிகளாரைப் பற்றி சினிமா எடுத்தோமா என்ன?
பதிலளிநீக்குஇவர்களின் திறனே அவ்வளவு தான்)
பதிலளிநீக்குவருந்த வேண்டிய விஷயம்.
சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !
பதிலளிநீக்குகடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவு உள்ளர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .
இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!
ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .
விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .
வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .
அதிலே பாடல் சில ;--
கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !
என்றும்
வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !
அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .
கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!
என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .
இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .
ஆனமநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வணக்கம் .
பதிலளிநீக்குஉங்கள் வருத்தத்தை நினைத்து என கண்கள் குளமாயின.நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா என்ற நிலை ஏற்ப்பட்டது.இதற்கு எல்லாம் யார்க் காரணம்,நம்முடைய தமிழ் சான்றோர்களும் தமிழக அரசும்தான் காரணம்,இப்போது உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கே வள்ளலாரைப் பற்றித் தெரியவில்லை .மாணவர்களை சொல்லி வறுத்துப் பட்டு பயனில்லை ,நம்முடைய தமிழக முதல்வராக முதன் முதலில் இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி என்பவராகும்.அவர் வள்ளலார் வழியைப் பின் பற்றி ஒழுக்கமும் நேர்மையும் கடைப் பிடித்து மிகவும் தூயமையாக வாழ்ந்தவர் .
இன்று தமிழ் மொழியில் எளிய நடையில் உருவாக்கப் பட்டதற்கு காரணமே வள்ளலார் என்பவராகும் அதேபோல் திருக்குறள் உலகப்பொது மறை என்று சொல்லுவதற்கு அடிப்படைக் காரணம் வல்ள்ளலாராகும்.
தமிழ் என்ற சொல்லுக்கு உயிர் தந்தவர் வள்ளலாராகும் .இனிமேலாவது,உங்களைப் போன்ற வருங்கால இளைஞ்ர்கள் வள்ளலாரின் கருத்துக்களையும் முற்போக்கு சிந்தனைகளையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் .இனி வருங்காலம் மாணவர்கள் கையில்தான் இருக்கிறது .
வாழ்க தமிழ் வளர்க வள்ளலார் கொள்கைகள்
அன்புள்ள ஆன்மநேயன் கதிர்வேலு .