புதன், 21 ஜூலை, 2010
தீர்ப்பு
ஒரு பெரிய மாதா கோயில்..
புயல் வீசிக் கொண்டிருக்கும் காலை..
கிறித்தவ மதம் சாராத பெண்மணியொருத்தி, பேராயர் முன்பு நின்று புலம்பிக்கொண்டிருந்தாள்..
“நான் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள் அல்ல..
எனக்கு நரகத்திலிருந்து கதிமோட்சம் கிடைக்குமா? “
அதற்கு அந்தப் பேராயர்..
“பெண்ணே, மோட்சம் என்பது கிறித்தவர்களாக ஞானஸ்ஞானம் செய்தவர்களுக்கு மட்டுமே கிட்டும்“ என்றார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கையில் இடி இடித்தது. வானத்திலிருந்து மின்னல் கோயில் மீது விழுந்தது. கோயிலே எரியத் தொடங்கியது.
அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினர்…
பாவம்..
அந்தப் பேராயரைக் காப்பாற்ற முடியவில்லை..!
அவர் தீக்கு இரையானார்.
(கலீல் ஜிப்ரானின் இக்கதை உண்மையைச் சத்தமிட்டுச் சொல்கிறது...
அதனால் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
good nice post
பதிலளிநீக்கு@ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி சதீஷ்.
பதிலளிநீக்குஉண்மையை சத்தமிட்டுமல்லாமல்
பதிலளிநீக்குஊரறிய சொன்ன ஒரு நீதிக்கதை.
நல்ல பகிர்வு ஐயா.
மனமார வாழ்த்தும்.
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குகலீல் ஜிப்ரானின் கவிதைகள் பற்றி எழுதுங்களேன் நண்பரே. கல்லூரி நாட்களில் அவரின் கவிதையின் தமிழாக்கத்தைப் படித்திருக்கிறேன். மனதை உறைய வைக்கும் கவிதைகள் அவை.
avarukku sorkkam kittiyathoo..?
பதிலளிநீக்குnalla neethikkkathai...
@abul bazar/அபுல் பசர் நன்றி அபுல்.
பதிலளிநீக்கு@பாலமுருகன் ம் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா.
பதிலளிநீக்கு@சே.குமார் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைத்திருக்கும் நண்பா.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. நல்ல இருக்கு.
பதிலளிநீக்கு//கலீல் ஜிப்ரானின் கவிதைகள் பற்றி எழுதுங்களேன் நண்பரே. கல்லூரி நாட்களில் அவரின் கவிதையின் தமிழாக்கத்தைப் படித்திருக்கிறேன். மனதை உறைய வைக்கும் கவிதைகள் அவை.//
பதிலளிநீக்குநானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.நன்றி.
இலக்கியச் சோலைக்குள் இன்று ஒரு நீதிக்கதை.நல்லது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நன்றி
பதிலளிநீக்கு@Eswariநன்றி ஈஸ்வரி.
பதிலளிநீக்கு@உமா விரைவில் எழுதுகிறேன் உமா.
பதிலளிநீக்கு@ஹேமா வருகைக்கு நன்றி ஹேமா.
பதிலளிநீக்கு@Sabarinathan Arthanari நன்றி அன்பரே.
பதிலளிநீக்கு