வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 5 மே, 2010

சிரிப்பும் சிந்தனையும்




என் நண்பர்கள் எனக்கனுப்பிய குறுந்தகவல்களி்ல் நான் படித்து மகிழ்ந்த சில உங்களுக்காக,

அளவற்ற தன்னம்பிக்கை

² ஒரு பையன் இரு சக்கர வாகனத்தில் விரைவாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த கிளி அவன் மீது மோதி மயக்கமுற்று கீழே விழுந்தது. வண்டியை ஓட்டிச் சென்றவன் அந்தக் கிளிக்கு முதலுதவி செய்து கிளிக்கூண்டில் விட்டான்.

விழித்துப்பார்த்த கிளி மனதில் நினைத்துக்கொண்டது………….


பாவம் நாம் மோதிய அந்த வண்டிக்காரன் விபத்து நடந்த அதே இடத்தில் இறந்துவிட்டான் போலிருக்கிறது.

மோதி அவனைக் கொன்றதால் நம்மைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என எண்ணியது.






² பள்ளிக்கூடம்.

என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
என்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்

இவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லுவது!!


² வேறுபாடு

மயிலுக்கும் கிளிக்கும் வேறுபாடு?

மயில் தேசிய பறவை!
கிளி சோசிய பறவை!



² கடந்த காலத்தால் யாது பயன்?


உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!



² சினம் (கோபம்)

சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!



² வினாக்களின் நிலை.


1995 - எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2000 - எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் பதிலளிக்கவும்.
2008 - அ அல்லது ஆ பிரிவில் எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.
2015 - வினாக்களைப் படித்தால் மட்டும் போதும்.
2020 - தேர்வு எழுத வருகை தந்தமைக்கு நன்றி!

28 கருத்துகள்:

  1. //என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
    என்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்//

    அருமை நண்பரே அனைத்தும் அருமை ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ² கடந்த காலத்தால் யாது பயன்?

    உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
    மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!


    ² சினம் (கோபம்)

    சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
    நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!

    ......சிந்திக்க வைக்கும் குறுந்தகவல்கள். :-)

    பதிலளிநீக்கு
  3. "பள்ளிக்கூடம்" நன்றாக இருந்தது.

    மயில் தேசியப் பறவை.
    கிளி ஜோசியப்பறவை.

    கலக்கல்.

    பதிலளிநீக்கு
  4. //என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
    என்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்

    இவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லுவது!!//

    அருமை.

    //கடந்த காலத்தால் யாது பயன்?

    உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
    மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!//

    நன்று.

    //
    சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
    நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!//

    மிகச் சரி.

    //2015 - வினாக்களைப் படித்தால் மட்டும் போதும்.//

    :)!

    //2020 - தேர்வு எழுத வருகை தந்தமைக்கு நன்றி! //

    :))!

    நடந்தாலும் நடக்கும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!

    பதிலளிநீக்கு
  5. பள்ளியும் பரீட்சையும் அருமை:))

    பதிலளிநீக்கு
  6. குறுந்தகவலோடு சிந்தனைகளையும் கலந்து படங்களையும் சேர்த்துத் தந்திருக்கிறீர்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சில நெஞ்சை தொடுகின்றன..
    சில :-)))

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமை.. ரசனையான பதிவு..

    ||சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
    நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!||

    சத்தியம்..

    பதிலளிநீக்கு
  9. கோபம் வரலாம்; ஆனால் முன்கோபம் கூடாது.., கோபம் வரும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் கோபம் குறையும்.

    நல்ல சிந்தனைக்கருத்துகள்.., நன்றி நண்பா குணசீலன்.

    பதிலளிநீக்கு
  10. முதலாவது எனக்கும் மின்னஞ்சலில் வந்தது. அனைத்தும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. @கலகலப்ரியா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ப்ரியா.

    பதிலளிநீக்கு
  12. @Starjan ( ஸ்டார்ஜன் ) ஓ நல்ல ஆலோசனை நண்பரே..

    சில மணித்துளிகள் கட்டுப்படுத்திவிட்டால் கோபம் நம் குழந்தைபோல தான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகள் , அர்த்தங்கள்

    பதிலளிநீக்கு