தலைவனை நீங்கினால் ஏற்படும் பிரிவு காரணமாகத் தலைவியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் பசலை எனப்படும். பசலையைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவர் என்பது சங்ககால மரபு. இந்த பசலை பற்றிப் பல பாடல்களைப் புலவர்கள் பாடியிருந்தாலும் அதன் தன்மையை எல்லோருக்கும் புரியமாறு சொல்லும் பாடல் ஒன்றைக் காண்போம்…
நீர்நிலைகளின் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்திருப்பதைப் பலரும் பார்த்திருப்பர். அந்தப் பாசி பயன்கொள்வோர் அருகே செல்லும் போது விலகிச் செல்லும், அந்நீர்நிலையைக் கடந்து வந்தபின்பு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்.
அந்த பாசி போன்றது பசலை என்கிறாள் தலைவி. ஏனென்றால் தலைவன் அருகே இருக்கும் போது இந்த பசலை என்னைவிட்டு நீங்கிவிடுகிறது. அவன் என்னை நீங்கியவுடன் மீண்டும் வந்து சேர்ந்துகொள்கிறது என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் அகத்துறையில் அமைந்த இப்பாடலை,
(வரைவு - திருமணம்)
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.
பரணர் பாடியிருக்கிறார்.
நல்ல பதிவு நண்பரே. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
பதிலளிநீக்குஎளிமையான அழகான விளக்கம். நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே
பதிலளிநீக்குபசலை நோய்ங்கறது இதுதானா..நன்றி நண்பரே
பதிலளிநீக்குBlogger வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குஎளிமையான அழகான விளக்கம். நன்றி.
கருத்துரைக்கு நன்றி ஐயா.
Blogger சே.குமார் said...
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே.
நன்றி நண்பா.
Blogger புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குபசலை நோய்ங்கறது இதுதானா..நன்றி நண்பரே.
ஆம் நண்பா.
நல்ல பகிர்வு நண்பரே .
பதிலளிநீக்குமீண்டும் வருவான் பனித்துளி !
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
பதிலளிநீக்குநன்றி நண்பா..
நல்ல பகிர்வு குணசீலன்
பதிலளிநீக்குஇன்பத்துப் பாலின் குறட்பாவில் ஒன்றைப் படித்தது போல் இருக்கிறது இந்த புறப்பாடல்.
பதிலளிநீக்கு@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி சங்கர்.
@thenammailakshmanan
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி அம்மா.
@குமரன் (Kumaran)
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பரே.
மிக நல்ல பகிர்வு....
பதிலளிநீக்கு