பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
சனி, 13 மார்ச், 2010
தொழில்நுட்பப் பதிவர்களே உங்களால் முடியுமா?
◊ கணினியில் அழித்த பதிவை ரிசைக்கிள்பின்னில் எடுக்கிறோம். சிப்ட் அழுத்தி அழித்த பதிவை ரெக்கவரி மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்.
◊ பென்டிரைவில் அழித்த பதிவைக் கூட மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்..
◊ நெட்வொர்க்கில் அழிந்த பதிவை இப்படி மீட்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா?
◊ “நண்பர் ஒருவர் மிகவும் தேவையான கோப்புகள் அடங்கிய பெரிய கோப்பை (போல்டரை) நெட்வொர்க்கில் வைத்து அழித்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற அவரின் துன்பம் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது“ இதில் சிக்கல் என்னவென்றால் கோப்பு அழிந்த கணினி “லினெக்சு“ இயங்குதளத்தில் இயங்குவதாகும். எதிர்பாராத நிலையில் தானே அந்தக் கோப்பை அழித்திருக்கிறார்.
◊ நெட்வொர்க்கில் அழிந்த கோப்பை மீட்க வழி உண்டா?
என கணினி வல்லுநர்களிடம் கேட்டால்..
◊ சிலர் சொல்கிறார்கள்…
ம் இருக்கிறது சில மென்பொருள்கள் இருக்கின்றன…. தேடிப்பார்க்கவேண்டும் என்று.
◊ சிலர் சொல்கிறார்கள் நெட்வொர்க்கில் அழிந்த மென்பொருளை மீட்பது என்பது இயலாதவொன்று. சக்தி வாய்ந்த ரெக்கவரி மென்பொருள்கொண்டு முயற்சித்தால் ஒருவேளை கணினியில் வன்வட்டில் (ஹார்டிஸ்கில்) இருந்தால் மீட்கலாம் என்று சொல்கிறார்கள்.
◊ ஒருபொருளை கீழே போட்டால் உடைந்துபோனாலும் புவியீர்ப்பு காரணமாக கீழே தான் கிடக்கும். ( கணினியில் ஒரு கோப்பை அழித்துவிட்டால் ரிசைக்கிள் பின்னில் தான் இருக்கும். அங்கும் இல்லையென்றால் வன்வட்டில் இருக்கும்.)
◊ ஒருபொருளைக் கடலில் போட்டால் கூடத் தேடிக்கண்டுபிடித்துவிடலாம். ( பென்டிரைவில் தொலைத்த கோப்புகளை மீட்பதற்குக் கூட மென்பொருள்கள் வழக்கில் உள்ளன.)
◊ அண்டவெளியில் ஒருபொருளைத் தூக்கி எறிந்தால், அப்பொருள் எங்காவது எப்போதாவது போய் விழும். இல்லாவிட்டால் ஈர்ப்புவிசை இல்லாததால் உயரத்திலேயே மிதந்து கொண்டிருக்கும். (நெட்வொர்க்கில் அழித்த, அழிந்த கோப்பும் அப்படித்தானே. அந்தத் தரவுமட்டும் எங்கு சென்றுவிடும். அதனை ஏன் மீட்க முடியாது? )
◊ தமிழ்த்துறை சார்ந்த நான் அழிந்த வேர்டு, பவர்பாய்ண்ட், எக்சல், மற்றும் ஒலி, ஒளிக் கோப்புகளை ரெக்கவரி மென்பொருள்கள் கொண்டு மீட்டிருக்கிறேன்.
◊ திறக்கமறுத்துப் பழுதுபட்டுப்போன வேர்டு போன்ற கோப்புகளை மென்பொருள் துணைகொண்டு பழைய நிலைக்குக் கொண்ட வந்திருக்கிறேன்..
இப்படி கணிதுறையல்லாத எனக்கே இவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றன..
தொழில்நுட்பப் பதிவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..
◊ நெட்வொர்க்கில் தொலைத்த கோப்புகளை மீட்கும் வழி என்ன?
மீட்க மென்பொருள்கள் இருக்கின்றனவா? (முகவரி?)
◊ உங்கள் கணினியில்,
பென்டிரைவில்
நெட்வொர்க்கில் கோப்புகள் அழிந்தபோது என்ன மென்பொருளை, வழிமுறையைப் பின்பற்றினீர்கள்?
உங்கள் நண்பர் எப்படியான சூழ் நிலையில் பதிவை அழித்தார் என்பது சரியாக குறிப்பிடவில்லை.அதாவது குறிப்பிட்ட பயிலுக்குப் பதிலாக வேறு ஒரு பயிலை அளித்தார? அல்லது,மின்சாரம் தடைப்பட்டோ,எதிர் பாரத காரணங்களால் கணணி செயலிழந்து இருந்தால்,மீள் திரட்டிகளால், திருப்பி எடுக்கலாம், விண்டோவைத் தரவிறக்கம் செய்யும் பொது ஏற்கனவே,விண்டோவில் இருந்த பையிலை போமற் பண்ணாமல், விஸ்தாவை தரவிறக்கினார?,இப்படிச் செய்திருந்தால்,நீங்கள் பதிவை மீட்பது கஷ்டம்,இப்படி நடந்ததன் பின் வேறு ஏதாவது ஒன்றைத் தரவிறக்கி இருந்தாலும் கஷ்டம்,எல்லாவற்றையும் விட முக்கியம்,இது நடந்ததன் பின் நீங்கள் கணனியில் பையிலைத்தேடுகிறேன் என்று திரும்பவும் பையிலை அழியாமல் காப்பற்றப் பட்டிருக்க வேண்டும்
பதிலளிநீக்குநெட்வொர்க்கில் தொலைத்த கோப்புகளை மீட்கும் வழி என்ன?
பதிலளிநீக்குதொழில்நுட்பப் பதிவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..
2 Comments
பதிலளிநீக்குClose this window Jump to comment form
Blogger உருத்திரா said...
உங்கள் நண்பர் எப்படியான சூழ் நிலையில் பதிவை அழித்தார் என்பது சரியாக குறிப்பிடவில்லை.அதாவது குறிப்பிட்ட பயிலுக்குப் பதிலாக வேறு ஒரு பயிலை அளித்தார? அல்லது,மின்சாரம் தடைப்பட்டோ,எதிர் பாரத காரணங்களால் கணணி செயலிழந்து இருந்தால்,மீள் திரட்டிகளால், திருப்பி எடுக்கலாம், விண்டோவைத் தரவிறக்கம் செய்யும் பொது ஏற்கனவே,விண்டோவில் இருந்த பையிலை போமற் பண்ணாமல், விஸ்தாவை தரவிறக்கினார?,இப்படிச் செய்திருந்தால்,நீங்கள் பதிவை மீட்பது கஷ்டம்,இப்படி நடந்ததன் பின் வேறு ஏதாவது ஒன்றைத் தரவிறக்கி இருந்தாலும் கஷ்டம்,எல்லாவற்றையும் விட முக்கியம்,இது நடந்ததன் பின் நீங்கள் கணனியில் பையிலைத்தேடுகிறேன் என்று திரும்பவும் பையிலை அழியாமல் காப்பற்றப் பட்டிருக்க வேண்டும்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
எனது நண்பர் எதிர்பாராதவிதமாக தனது கோப்பை அழித்துவிட்டார். நெட்வொர்க்கில் அழித்தார் என்பதும் அக்கணினி லினெக்சு என்னும் இயங்கதளத்தில் இயங்குவது என்பதும் இதன் சிக்கல்களுள் குறிப்பி்டத்தக்கனவாகும்.
யாதவன் said...
பதிலளிநீக்குநெட்வொர்க்கில் தொலைத்த கோப்புகளை மீட்கும் வழி என்ன?
தொழில்நுட்பப் பதிவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..
வருகைக்கு நன்றி யாதவன்.
முனைவருக்கு வணக்கம்....தங்களின் பதிவை என்னுடைய கூகுள் பஸ் மூலமாக படித்தேன்.மிகவும் கவலையாகத்தான் இருக்கின்றது. உங்களது நண்பர் அந்த கொப்பை நெட்வொர்க்கில் வைத்து அழித்தார் என ஆணித்தரமாக கூறுகிறீர்கள். அதாவது நெட்வொர்க்கில் இருந்தாலும் அந்த கோப்பு ஏதாவது ஒரு கணினியின் வன்தட்டில் தான் அவர் அழித்த கோப்பு இருந்திருக்குமல்லாவா?
பதிலளிநீக்குஅவர் எந்த கணினியில் இருந்த கோப்பை நெட்நொர்க்கிலிருந்து அழித்தாரோ அந்த கணினியில் ரெக்கவரி மென்பொருளை கொண்டு அழித்ததை மீட்டெடுக்க முயற்சி செய்யவும். மேலும் தாங்கள் தங்களது நண்பர் லினக்ஸ் இயங்குதளம் உபயோகப்படுத்துபவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் லினக்ஸில் அவர் என்ன லினக்ஸ் பயன்படுத்துகிறார் (redhat,suse,ubuntu,fedora etc..) என குறிப்பிடவில்லை. மேலும் அவரது பார்டீஷன் (ext2,ext3 etc...) தகவலையும் தரவில்லை.
சரி இந்த முகவரிக்கு சென்று testdisk ஐ பதிவிறக்கம் செய்யவும். உங்களது லினக்ஸ் பதிப்பிற்க்கு ஏற்ற பதிப்பை பயன்படுத்தி முயற்சிக்கவும்.
http://www.cgsecurity.org/wiki/TestDisk_Download
கருத்துரைக்கு மகிழ்ச்சி நண்பரே!
பதிலளிநீக்குரெக்கவரி மென்பொருள்களிலெல்லாம் முயற்சித்தும் கிடைக்கவில்லை நண்பரே..
தாங்கள் சொன்ன வழிமுறையைப் பின்பற்றிப்பார்க்கச் சொல்கிறேன்..
நன்றி நண்பரே..
//நெட்வொர்க்கில் அழித்தார் என்பதும் அக்கணினி லினெக்சு என்னும் இயங்கதளத்தில் இயங்குவது என்பதும் இதன் சிக்கல்களுள் குறிப்பி்டத்தக்கனவாகும்.//
பதிலளிநீக்குலினெக்சு போன்ற யுனிக்சு சார்ந்த இயங்குதளங்களில் கோப்புகளை அழித்தால் மீள்விப்பது இயலாத காரியம். சொந்த கணினி என்றால் கூட ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். அதுவும் வலையமைப்பில் எங்கோ உள்ள கணினியில் அழித்துவிட்டால் அதற்கு சாத்தியமே இல்லை.
மன்னிக்கவும்.
அன்பின் முனைவர்.இரா.குணசீலன்,
பதிலளிநீக்கு//அவர் எந்த கணினியில் இருந்த கோப்பை நெட்நொர்க்கிலிருந்து அழித்தாரோ அந்த கணினியில் ரெக்கவரி மென்பொருளை கொண்டு அழித்ததை மீட்டெடுக்க முயற்சி செய்யவும்.//
மேலே நணபர் நித்தியானந்தம் கூறிய வழிமுறையில் தான் தகவலை திரும்ப பெற இயலும்.
மாறாக முல்லா நஸீருத்தீன் கதையில் வருவது போல நீங்கள் காணாமல் போன சாவியை முல்லா வெளிச்சமான இடத்தில் தேடியதைப்போல், அழிக்க பயன்படுத்திய கணனியில் தேடினால் கோப்பு கிடைக்காது. ஆகவே அதை அழித்த கணனியில் தேடவும். அது சேவைக்கணனியாக (Server) இருந்தால் உடனே அதன் நிர்வாகியை அணுகி உதவி கோரவும். அவருக்கு தான் அக்கணனியில் சில முக்கிய, தனிப்பட்ட அனுமதிகள் உண்டு. அவரால் கண்டிப்பாக உதவ இயலும்.
மற்றொரு தகவல். பெரும்பாலும் யாராவது இது போல தவறாக கோப்பினை அழித்துவிட்டால் உடனே அந்த கணனியில் இருந்து கொண்டே இணையத்திலிருந்து கூகிலிட்டு, ஏதாவது ரெக்கவரி மென்பொருளை தரவிறக்கி, உடனே அதிலேயே நிறுவி தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது மிக தவறான வழிமுறை. இதனால் அந்த கோப்பினை நிரந்தரமாக இழக்க நேரிடலாம்.
காரணம் தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்பின் கணனியின் வன்தட்டு முழுவதும் ஒரே பகுதியாக(Partition)ஆக இருக்கும் பட்சத்தில் அழிக்கப்பட்ட கோப்பினால் கிடைத்த காலியிடமானது இந்த ரெக்கவரி மென்பொருள் எடுத்துக்கொண்டு விட வாய்ப்பு மிக அதிகம்.
அதாவது இடிக்கப்பட்ட கட்டிடத்தின் காலி இடத்தில் உடனே இன்னொரு கட்டிடத்தை கட்டினால் எப்படி இடிக்கப்பட்ட கட்டிடத்தை அடையாளம் காண இயலாதே அது போலத்தான். இது போல ஒரே பகுதியாக உள்ள வன்தட்டிலிருந்து தகவலை மீட்டெடுக்க நாங்கள் அதை வேறோரு கணனியில் இணைத்து தான் முயற்சி செய்வோம்.
இது போன்ற பிரச்சினைகள் வன்தட்டானாது பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட கணனியில் மிக குறைவு. அதில் இயங்குதளத்திற்க்கு ஒரு பகுதி, உபயோகிப்பாளர்களின் தகவலை சேமிக்க ஒரு பகுதி என நாங்கள் பிரித்து வைத்திருப்போம். ஆகவே இந்த ரெக்கவரி மென்பொருளை இயங்குதளத்தின் பகுதியில் நிறுவுவதால் தகவல் மீட்டெடுப்பில் பங்கம் வராது.
மேலும் உதவி தேவைப்படின் 94420.93300 என்ற செல்லிட பேசிக்கு தொடர்பு கொள்ளவும். உதவ தயாராக உள்ளோம்.
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
நண்பரே!
பதிலளிநீக்குவிண்டோசில் நெட்வொர்க்கில் இருந்து டெலிட் செய்த பைல்களை திரும்ப பெற இயலாது.
உங்கள் நண்பரை போன்ற ப்ரச்னை பல முறை எங்கள் அலுவலகத்தில் நடந்தது உண்டு. அதற்கு மாற்றாக நாங்களும் எவ்வளோ நுட்பங்களை பயன்படுத்தி பார்த்து இப்போது network magic என்ற மென்பொருளின் வழியாக பரிசோதித்து பார்த்து வருகிறோம்.
ஆனால் நெட்வொர்க்கில் வைத்த பைல்களை டெலில் செய்தால் அவற்றை திரும்ப பெறுவது கடினம்தான் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை...
எப்போதும் நிழல் காப்பி ஒன்றினை எடுத்து வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்.
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
நண்பர்கள் மேலே சொன்னதைப்போல அழிக்கப்பட்ட கணினியில் தேடுவதைவிட கோப்பு சேமிக்கப்பட்ட கணினியில் தேடலாம்
பதிலளிநீக்குஇங்கே வழிகாட்டப்படுகிறது ஒரு முயற்சி செய்துபாருங்கள்
http://www.google.com/search?hl=en&q=recover+deleted+files+in+linux&btnG=Search&aq=f&aqi=&aql=&oq=
உங்கள் நண்பரிடம் என் இமெயில் முகவரியை கொடுங்கள் கண்டிப்பாக
பதிலளிநீக்குஉதவ முயற்ச்சிக்கிறேன்.
support[at]winmani[dot]com
குணா,
பதிலளிநீக்குWindowsல் shadow copy என்று ஒரு option இருக்கிறது. இதன் பயன்பாடு shared folderகளை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்து. பிணையத்தில்(network)அழித்துவிட்ட கோப்புகளை இதன் மூலம் மீட்கமுடியும்.serverல் DFS என்பது நிறுவப்பட்டிருந்து உங்களுடைய folder அதில் இணைக்கப்பட்டிருந்தாலும் அழித்துவிட்ட கோப்புகளை மீட்கமுடியும். இவை இரண்டும் windows சார்ந்த சாத்தியப்பாடுகள்.
உங்கள் நண்பரின் இயக்க முறைமை Linux. Linuxல் இந்த வசதிகள் இருக்கிறதா என தெரியவில்லை. உங்கள் நண்பரை அவரின் கணணி நிவாகியை அணுகி இவை சாத்தியமா என வினவசொலலுங்கள்.
Blogger Muhammad Ismail .H, PHD, said...
பதிலளிநீக்குஅன்பின் முனைவர்.இரா.குணசீலன்,
//அவர் எந்த கணினியில் இருந்த கோப்பை நெட்நொர்க்கிலிருந்து அழித்தாரோ அந்த கணினியில் ரெக்கவரி மென்பொருளை கொண்டு அழித்ததை மீட்டெடுக்க முயற்சி செய்யவும்.//
மேலே நணபர் நித்தியானந்தம் கூறிய வழிமுறையில் தான் தகவலை திரும்ப பெற இயலும்.
மாறாக முல்லா நஸீருத்தீன் கதையில் வருவது போல நீங்கள் காணாமல் போன சாவியை முல்லா வெளிச்சமான இடத்தில் தேடியதைப்போல், அழிக்க பயன்படுத்திய கணனியில் தேடினால் கோப்பு கிடைக்காது. ஆகவே அதை அழித்த கணனியில் தேடவும். அது சேவைக்கணனியாக (Server) இருந்தால் உடனே அதன் நிர்வாகியை அணுகி உதவி கோரவும். அவருக்கு தான் அக்கணனியில் சில முக்கிய, தனிப்பட்ட அனுமதிகள் உண்டு. அவரால் கண்டிப்பாக உதவ இயலும்.
மற்றொரு தகவல். பெரும்பாலும் யாராவது இது போல தவறாக கோப்பினை அழித்துவிட்டால் உடனே அந்த கணனியில் இருந்து கொண்டே இணையத்திலிருந்து கூகிலிட்டு, ஏதாவது ரெக்கவரி மென்பொருளை தரவிறக்கி, உடனே அதிலேயே நிறுவி தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது மிக தவறான வழிமுறை. இதனால் அந்த கோப்பினை நிரந்தரமாக இழக்க நேரிடலாம்.
காரணம் தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்பின் கணனியின் வன்தட்டு முழுவதும் ஒரே பகுதியாக(Partition)ஆக இருக்கும் பட்சத்தில் அழிக்கப்பட்ட கோப்பினால் கிடைத்த காலியிடமானது இந்த ரெக்கவரி மென்பொருள் எடுத்துக்கொண்டு விட வாய்ப்பு மிக அதிகம்.
அதாவது இடிக்கப்பட்ட கட்டிடத்தின் காலி இடத்தில் உடனே இன்னொரு கட்டிடத்தை கட்டினால் எப்படி இடிக்கப்பட்ட கட்டிடத்தை அடையாளம் காண இயலாதே அது போலத்தான். இது போல ஒரே பகுதியாக உள்ள வன்தட்டிலிருந்து தகவலை மீட்டெடுக்க நாங்கள் அதை வேறோரு கணனியில் இணைத்து தான் முயற்சி செய்வோம்.
இது போன்ற பிரச்சினைகள் வன்தட்டானாது பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட கணனியில் மிக குறைவு. அதில் இயங்குதளத்திற்க்கு ஒரு பகுதி, உபயோகிப்பாளர்களின் தகவலை சேமிக்க ஒரு பகுதி என நாங்கள் பிரித்து வைத்திருப்போம். ஆகவே இந்த ரெக்கவரி மென்பொருளை இயங்குதளத்தின் பகுதியில் நிறுவுவதால் தகவல் மீட்டெடுப்பில் பங்கம் வராது.
மேலும் உதவி தேவைப்படின் 94420.93300 என்ற செல்லிட பேசிக்கு தொடர்பு கொள்ளவும். உதவ தயாராக உள்ளோம்.
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
//
புதிய பல தகவல்களைத் தங்களால் அறிந்துகொண்டேன் மகிழ்ச்சி நண்பரே.
Blogger செல்வமுரளி said...
பதிலளிநீக்குநண்பரே!
விண்டோசில் நெட்வொர்க்கில் இருந்து டெலிட் செய்த பைல்களை திரும்ப பெற இயலாது.
உங்கள் நண்பரை போன்ற ப்ரச்னை பல முறை எங்கள் அலுவலகத்தில் நடந்தது உண்டு. அதற்கு மாற்றாக நாங்களும் எவ்வளோ நுட்பங்களை பயன்படுத்தி பார்த்து இப்போது network magic என்ற மென்பொருளின் வழியாக பரிசோதித்து பார்த்து வருகிறோம்.
ஆனால் நெட்வொர்க்கில் வைத்த பைல்களை டெலில் செய்தால் அவற்றை திரும்ப பெறுவது கடினம்தான் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை...
எப்போதும் நிழல் காப்பி ஒன்றினை எடுத்து வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்.
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.
நீச்சல்காரன் said...
பதிலளிநீக்குநண்பர்கள் மேலே சொன்னதைப்போல அழிக்கப்பட்ட கணினியில் தேடுவதைவிட கோப்பு சேமிக்கப்பட்ட கணினியில் தேடலாம்
இங்கே வழிகாட்டப்படுகிறது ஒரு முயற்சி செய்துபாருங்கள்
http://www.google.com/search?hl=en&q=recover+deleted+files+in+linux&btnG=Search&aq=f&aqi=&aql=&oq=
முயற்சித்துப்பார்க்கிறேன் நண்பரே..
நன்றி!
இதுபற்றிய விவரம் எல்லாம் சசிகுமார்., சூர்யாகண்ணன் மற்றும் வன்னி இன்ஃபோ வுக்குத்தான் தெரியும் குணசீலன்
பதிலளிநீக்கு@thenammailakshmanan
பதிலளிநீக்குஒரு வழியாக நண்பா்கள் வாயிலாகப் பல மென்பொருள்களையும் நுட்பங்களையும் அறிந்துகொண்டேன்..
வருகைக்கு நன்றி!