வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 3 மார்ச், 2010

விரைவாகத் தமிழில் தட்டச்சிட.


நேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார்.

அவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.

தொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..

கணினியில் தமிழ் தட்டச்சு செய்வோர்..


◊ அலுவலகக் கடிதம் உருவாக்குவோர்.
◊ தொழில் முறையில் தமிழ்க்கோப்புகளை தயாரிப்போர்.
◊ ஆய்வேடு, அழைப்பிதழ், சான்றிதழ் அச்சடிப்போர்.
◊ நாளிதழ், மாத, வார இதழ்களில் தமிழ் உள்ளீடு செய்வோர்.


இணையத்தில் தமிழ்த்தட்டச்சு செய்வோர்.


◊ வலைப்பதிவு எழுதுவோர்.
◊ கருத்துரை மட்டும் இடுவோர்.
◊ மின்னஞ்சல் அனுப்புவோர்.
◊ அரட்டையடிப்போர் (சேட்டிங்)
◊ இணையதளத்தில் எழுதுவோர்.
◊ பல்லூடகத்தில்(ட்வைட்டர், பேஸ்புக்,ஆர்குட்) தமி்ழ் எழுதுவோர்.


என தமிழ்த் தட்டச்சு செய்வோர் பலவகையினராக இருக்கின்றனர். கணினியிலும் இணையத்திலும் தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு ஒருங்குறி (யுனிகோடு) குறித்த அடிப்படை அறிவு இருத்தல் நலமாகும்.


◊ பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் (யுனிகோடு) தமிழ் இணையபக்கங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்பது தான். விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருப்போர் இந்தச் சிக்களை லதா எழுத்துருவை (எனது வலைப்பதிவில் வலதுபுறம் லதா எழுத்துருவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்)சேமிப்பதால் தீர்த்துக்கொள்ளலாம்.


◊ தமிழில் விரைவாகத் தட்டச்சிட.


◊ ஏதாவதொரு எழுத்துருவில் தட்டச்சிடத் தெரிந்துகொள்ளவேண்டும்.( பாமினி என்னும் எழுத்துரு இணைய இணைப்பிலும், இணைப்பில்லா நிலையிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது.)
என்.எச்.எம், அழகி ஆகிய தமிழ் யுனிகோடு எழுது மென்பொருள்கள் பரவலான வழக்கில் உள்ளன. இவற்றை நம் கணினியில் நிறுவிக்கொண்டால், தமிழ்99,தமிங்கில முறை, பாமினி, பழைய தட்டச்சு முறை என பல தட்டச்சு முறைகள் கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றினால் தமிழ்தட்டச்சு எளிதாகும்.
◊ புலம்பெயர்ந்து வாழ்வோரும் ஆங்கில வழக்கைப் பின்பற்றுவோருக்கும் தமிங்கில முறை எளிதாக இருக்கும்.

இணைய இணைப்பில்லா எழுது மென்பொருள்.

பொங்குதமிழ் வழங்கும் எழுது மென்பொருள் இணைய இணைப்பிலும் இணைய இணைப்பில்லா சூழலிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது. இதனை (சேவ் அஸ்) நம் கணினியில் சேமித்துக்கொண்டால் இணைய இணைப்பில்லா நிலையிலும் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

தட்டச்சு நுட்பங்கள்..

◊ தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் தட்டச்சு செய்ய விரும்புவோர், ஆங்கில எழுத்துக்களுக்கான விசை எங்கு இருக்கிறது என்பதையும் அதற்கான தமிழ் எழுத்து என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
◊ விசைப்பலகையில் உள்ள விசைகளில் FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் சிறு கோடு இருப்பதை அறியலாம். இவ்விரு விசைகளிலும் இருகைகளின்ஆட்காட்சி விரலை வைத்துக்கொள்ள வேண்டும்.

◊ (எனக்குத் ஆங்கிலத் தட்டச்சு தெரியாது. ஆனால் தமிழில் விரைவாகத் தட்டச்சு செய்வேன். FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் உள்ள சிறு கோடைத் தவிர விசைப்பலகையின் எழுத்துக்கள் என்ன? அவை எங்கு உள்ளன என்பது கூட எனக்குத் தெரியாது.) இந்த சிறு கோடுகளின் வலது, இடது, மேல், கீழ் உள்ள எழுத்துக்களை ஒருநாளைக்கு எட்டு விசைகள் என ஒரு மணி நேரம் தட்டச்சிட்டுப் பழகினால் ஒரே வாரத்தில் விரைவாகத் தட்டச்சிடலாம்.


◊ தட்டச்சிடப் பழகும் போதும் fJ ஆகிய விசைகளின் கீழுள்ள கோடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு கணினித்திரையை மட்டுமே பார்க்கவேண்டும். விசைப் பலகையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு கணினித் திரையை மட்டும் பார்த்து அடிப்பதால் விசைப்பலகையைப் பார்க்கும் நேரம் குறையும்.

◊ விசைப் பலகையைப் பார்க்காமல் எல்லா விசைக்களுக்குமான தமிழ் எழுத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது முதல் படிநிலை.
◊ விசைப்பலகையைப் பார்க்காமல் சிறு சிறு சொற்களை அடிப்பது இரண்டாவது நிலை.(பிழை ஏற்பட்டாலும் fJ விசையின் கோட்டைப் பற்றி மேல், கீழ்,வலது, இடது என திருத்திக்கொள்ளலாம்.)
◊ பெரிய தொடர்களைத் தட்டச்சிட்டுப் பழகுவது தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்தும்.

◊ விரைவாகத் தட்டச்சிடுவதை விட பிழையின்றித் தட்டச்சிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


◊ ( வெளியூர்க்காரர்
- இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

உள்ளூர்க்காரர்
- வேகமாப் போன நேரமாகும்
மெதுவாப் போன வேகமாப் போகலாம் என்று..

வெளியூர்க்கார்
- புரியவில்லையே. புரியுமாறு சொல்லுங்களேன்?

உள்ளூர்காரர்
- எங்க ஊருக்குச் செல்லும் வழி கரடுமுரடானது. அதில் வேகமாப் போன விழுந்துருவீங்க. மெதுவாப்போன வேகமாப் போகலாம். அதான் அப்படிச் சொன்னேன் என்றாராம்)

மெதுவாகத் தட்டச்சிட்டாலும் பிழையின்றித் தட்டச்சிடுவது தமிழ்த்தட்டச்சினை விரைவாகப் பழகும் அடிப்படை நுட்பமாகும்.


◊ அடுத்து சில அடிப்படை கணினி நுட்பங்களை அறிந்து கொள்வது.

(Ctrl+A - எல்லாம் தேர்ந்தெடு.
Ctrl+s - சேமித்திடு.
Ctrl+x - வெட்டுக.
Ctrl+z - பழைய நிலைக்குத் திரும்பு.
Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
Ctrl+l- வாக்கியத்தை இடதுபுறம் தள்ள.
Ctrl+R - வாக்கியத்தை வலதுபுறம் தள்ள
Ctrl+B எழுத்தைப் பெரிதாக்க.)


ஆகிய நுட்பங்கள் கணினியிலும், இணையத்திலும் தமிழை உள்ளீடு செய்யும் வழிமுறைகளாகும்.

“பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகத் தருவதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லித்தருவது சிறந்ததாகும்“
என்பது சீனப் பழமொழி..

ஒருவருக்குத் தமிழில் கோப்பு உருவாக்கிக் கொடுப்பதை விட அந்தக் கோப்பை அவரே உருவாக்கும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பது சிறந்தது.

நானறிந்ததைப் பகிர்ந்து கொண்டேன்..
தாங்களுக்குத் தெரிந்த நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..

49 கருத்துகள்:

  1. பலருக்கும் பயன்படும் இந்த பதிவு...

    பதிலளிநீக்கு
  2. என்னிடம்pdf file உள்ளது அதை text fileமாற்றினான் அதில் தமிழ் எழுத்து வரவில்லை கட்டகட்டமாக வருகிறது அதை எப்படி சரி செய்வது mail id;mani.arul@rocketmail.com. manielectronics. erode. web site:http://usetamil.forumotion.com

    பதிலளிநீக்கு
  3. இணையத்தில் தமிழ் எளிதாக பயன் படுத்த இயலாதவர்களுக்கான பதிவு நானும் இதை யூஸ் பண்ணதில்ல இப்போ ட்ரைப்பண்றேன் பொங்குதமிழை...

    பதிலளிநீக்கு
  4. Blogger தமிழரசி said...

    பலருக்கும் பயன்படும் இந்த பதிவு...


    நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  5. Blogger வானம்பாடிகள் said...

    நன்றி பகிர்ந்தமைக்கு:)

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. Blogger வானம்பாடிகள் said...

    நன்றி பகிர்ந்தமைக்கு:)

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

    நன்றி நண்பரே, பகிர்வுக்கு.


    கருத்துரைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. Blogger aarul said...

    என்னிடம்pdf file உள்ளது அதை text fileமாற்றினான் அதில் தமிழ் எழுத்து வரவில்லை கட்டகட்டமாக வருகிறது அதை எப்படி சரி செய்வது mail id;mani.arul@rocketmail.com. manielectronics. erode. web site:http://usetamil.forumotion.com


    தங்களுக்கு நேர்ந்த சிக்கலை எளிதாகத் தீர்ககலாம் நண்பா..

    தாங்கள் மாற்றிய (டெக்ஸ்ட் பைலின்) எழுத்துக்களை தேர்ந்தெடுத்து வேர்டிபைலில் சேமித்து, பான்ட் பகுதியில் பார்த்தால் கட்டமான எழுத்துக்கள் எந்த பான்ட் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    பின்னர் ..

    பொங்குதமிழின் எழுத்துருமாற்றியைப்
    http://www.suratha.com/reader.htm
    பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான எழுத்துருவாக மாற்றிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.

    தங்களுக்கு வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே.

    gunathamizh@gmail.com

    பதிலளிநீக்கு
  9. Blogger பிரியமுடன்...வசந்த் said...

    இணையத்தில் தமிழ் எளிதாக பயன் படுத்த இயலாதவர்களுக்கான பதிவு நானும் இதை யூஸ் பண்ணதில்ல இப்போ ட்ரைப்பண்றேன் பொங்குதமிழை...


    மகிழ்ச்சி வசந்த்.

    பதிலளிநீக்கு
  10. முனைவரே.....எப்போது technical பதிவர் ஆனீர்கள்.....நல்ல படைப்பு பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. பலருக்கு பயன்படும் பதிவு..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. உங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்.. நான் பொதுவாக நேரடியாக தமிழில் தட்டச்சுகிறேன்... ஆயினும் உங்கள் தகவல் நண்பர்களுக்கு உதவும்....நன்றிகள்....

    பதிலளிநீக்கு
  13. Blogger க.இராமசாமி said...

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. Blogger க.இராமசாமி said...

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. Blogger Chitra said...

    பகிர்வுக்கு நன்றி.

    கருத்துரைக்கு நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  16. Blogger நித்தியானந்தம் said...

    முனைவரே.....எப்போது technical பதிவர் ஆனீர்கள்.....நல்ல படைப்பு பகிர்ந்தமைக்கு நன்றி


    நானறிந்த நுட்பங்கள் நாலுபேருக்காவது பயன்படவேண்டும் என்ற எண்ணம் தான் நண்பரே.

    கருத்துரைக்கு் நன்றி!!

    பதிலளிநீக்கு
  17. Blogger புலவன் புலிகேசி said...

    பலருக்கு பயன்படும் பதிவு..வாழ்த்துக்கள்..

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  18. Blogger பிரேமா மகள் said...

    thanks for information...

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  19. பயனுள்ள பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  20. சில ஆண்டுகளுக்கு முன் சுரதா அவர்களின் மென்பொருள் உதவி கொண்டு இணைய இணைப்பில்லாத போது தமிங்கிலத்தில் டைப் செய்ய மிக எளிமையாக்கி பதிவேற்றி இருந்தேன். பல பேர் பதிவிறக்கி பயன் அடைந்ததாக கூறி இருந்தார்கள்.இணைய இணைப்பில்லாதோர் இதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
    கீழே உள்ள Link ஐ click செய்யவும்.

    TAMIL TYPING TOOL

    பதிலளிநீக்கு
  21. OpenID nanrasitha said...

    பயனுள்ள பதிவு நன்றி.


    கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  22. Blogger ஸ்ரீ said...

    பயனுள்ள இடுகை.


    நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  23. Blogger மதி said...

    சில ஆண்டுகளுக்கு முன் சுரதா அவர்களின் மென்பொருள் உதவி கொண்டு இணைய இணைப்பில்லாத போது தமிங்கிலத்தில் டைப் செய்ய மிக எளிமையாக்கி பதிவேற்றி இருந்தேன். பல பேர் பதிவிறக்கி பயன் அடைந்ததாக கூறி இருந்தார்கள்.இணைய இணைப்பில்லாதோர் இதனையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
    கீழே உள்ள Link ஐ click செய்யவும்.

    TAMIL TYPING TOOL.

    மிக்க மகிழ்ச்சி நண்பரே..
    தாங்கள் அளித்த இணைப்பு பணிபுரியவி்ல்லையே!

    பதிலளிநீக்கு
  24. பலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
    என்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. யுஆர்எல் முகவரி தந்துள்ளேன். முயற்சித்துப் பார்க்கவும்.

    http://perunthottam.blogspot.com/2006/12/blog-post.html

    http://perunthottam.blogspot.com/2006/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  26. ஆஹா...அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    பதிலளிநீக்கு
  27. Blogger குடந்தை அன்புமணி said...

    பலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
    என்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்..


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    வேர்டில் Ctrl+E - என்னும் கட்டளையை வாக்கியத்தை நடுநிலைப்படுத்தவே நான் பயன்படுத்தி வருகிறேன்.
    Ctrl+C காப்பி செய்வதற்குத்தானே நண்பரே..

    பதிலளிநீக்கு
  28. பலருக்கும் இந்த இடுகை பயனளிக்கும் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
    என்பது தவறானது. Ctrl+C என்றிருக்க வேண்டும்.

    March 5, 2010 4:02 AM
    Delete
    Blogger மதி said...

    யுஆர்எல் முகவரி தந்துள்ளேன். முயற்சித்துப் பார்க்கவும்.

    http://perunthottam.blogspot.com/2006/12/blog-post.html

    http://perunthottam.blogspot.com/2006/12/blog-post.html


    அருமை நண்பரே நல்ல பணி.

    பதிலளிநீக்கு
  29. Blogger வேலன். said...

    ஆஹா...அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.


    கருத்துரைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  30. நல்ல தகவல்கள். நன்றி குணசீலன் சார்

    பதிலளிநீக்கு
  31. உங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்..
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. ரொம்ப பயனுள்ள பதிவு...ஆனால் அழகி உபயோகிப்பது நிறைய நேரம் செலவழிவது போல ஒரு கருத்து உங்களின் பதிவில் தெரிகிறது...ஆனால் அழகியை தினமும் உபயோகிப்பவள் என்ற முறையில் சொல்கிறேன்....அதைப் போல user friendly மென்பொருள் கிடையவே கிடையாது.அவ்வளவு எளிது....இவ்வளவு ஏன்...??ஜெய்ப்பூரில் வளரும் என் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத அறவே தெரியாது....அழகியை உபயோகித்துதான் தமிழ் எழுதப் படித்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.நீங்கள் வேறு ஏதோ மென் பொருளைப்பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு அழகியைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. I am using Azhagi tamil software since the year 2000 and we can type in tamil very very fast using Azhagi software. No need to click the key board and type as you have mentioned about azhagi. It must be some other software and not Azhagi.

    Sivakumar

    பதிலளிநீக்கு
  34. Blogger Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நல்ல தகவல்கள். நன்றி குணசீலன் சார்.


    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  35. Blogger நினைவுகளுடன் -நிகே- said...

    உங்களின் பதிவால் நிறைய தெரிந்துகொண்டேன்..
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    மகிழ்ச்சி நிகே.

    பதிலளிநீக்கு
  36. Blogger அன்புடன் அருணா said...

    ரொம்ப பயனுள்ள பதிவு...ஆனால் அழகி உபயோகிப்பது நிறைய நேரம் செலவழிவது போல ஒரு கருத்து உங்களின் பதிவில் தெரிகிறது...ஆனால் அழகியை தினமும் உபயோகிப்பவள் என்ற முறையில் சொல்கிறேன்....அதைப் போல user friendly மென்பொருள் கிடையவே கிடையாது.அவ்வளவு எளிது....இவ்வளவு ஏன்...??ஜெய்ப்பூரில் வளரும் என் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத அறவே தெரியாது....அழகியை உபயோகித்துதான் தமிழ் எழுதப் படித்தார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.நீங்கள் வேறு ஏதோ மென் பொருளைப்பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு அழகியைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.


    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    அழகி
    என்எச்எம்

    ஆகியன பெரும்பாலனோரால் பயன்படத்தப்பட்டுவரும் மென்பொருள்கள்..

    நான் இருமென்பொருள்களையுமெ பயன்படுத்தியிருக்கிறேன்..

    அழகியை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டதில்லை.

    எனது இவ்விடுகையின் நோக்கம்

    தமிழ்த்தட்டச்சு தெரியாதோர் ஏதாவதொரு மென்பொருள்கள்களில் தொடர்ந்து பழகிக்கொள்ளவேண்டும் என்பதே.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. Blogger siva said...

    I am using Azhagi tamil software since the year 2000 and we can type in tamil very very fast using Azhagi software. No need to click the key board and type as you have mentioned about azhagi. It must be some other software and not Azhagi.


    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சிவக்குமார்.

    பதிலளிநீக்கு
  38. /ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார். /
    /அழகியை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டதில்லை./
    இதில் அழகியைப் பற்றி நேரம் அதிகம் எடுக்கும் என்று குறை கூறுவதாகத்தான் எனக்குப் படுகிறது.....தவறுதலாகக் கூறியிருந்தால் திருத்தி விடுவதில் தவறென்ன?

    பதிலளிநீக்கு
  39. நீங்கள் ஏன் அப்படி எண்ணுகிறீர்கள்?

    நாம் விரைவாகத் தட்டச்சு செய்கிறோம் என்பதற்காக உலகிலுள்ள யாவரும் விரைவாகத் தட்டச்சு செய்வார்கள் என்று பொருளாகிவிடுமா என்ன?

    நான் இகலப்பை, என்எச்எம், அழகி என பல மென்பொருள்களையும் பயன்படுத்தியிருக்கிறேன்..

    ஆரம்பகாலத்தில் நானும் ஒவ்வொரு எழுத்துக்களாகத் தான் அடித்தேன்.
    இப்போது திரையைமட்டுமே பார்த்து தட்டச்சிடுகிறேன்.

    ஆரம்பநிலையிலிருப்பவர்களும் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்..

    மேலும் நடந்த நிகழ்வைத் தாங்கள் சொல்வதற்காக மாற்றமுடியுமா?

    அவர் ஒவ்வொரு எழுத்தாக தமிழ்த்தட்டச்சிட்டது உண்மை,


    தாங்கள் சொல்வதற்காக அழகியைப் ஆரம்பநிலையிலிருந்தே விரைவாக தட்டச்சிடலாம் என்று சொன்னால் அது மிகைப்படுத்திச்சொன்னதாக ஆகிவிடும் எனக் கருதுகிறேன்..


    வருகைக்கும் தங்கள் கருத்தை மனம் திறந்து தெரிவித்தமைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  40. சரி, உங்கள் இடுகையின் கீழே இணைத்திருக்கும் தமிழ் 99 இணைய விசைப்பலகையை என்னுடைய வலைப்பதிவில் இணைக்க விரும்புகிறேன். உதவுவீர்களா ஐயா!?

    பதிலளிநீக்கு
  41. வலைப்பதிவில் தமிழ்99 இணைய விசைப்பலகையை இணைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
  42. @எம்.ஞானசேகரன் தங்கள் வலைப்பதிவில் இதற்கான நுட்பத்தை கருத்துரையாக வழங்கியுள்ளேன் நண்பா

    பதிலளிநீக்கு
  43. என்னுடைய வலைப்பதிவில் தங்கள் கருத்துரை இடம்பெறவில்லையே நண்பரே!

    பதிலளிநீக்கு
  44. @எம்.ஞானசேகரன் சரி நண்பா தங்களுக்காக
    http://tamilblogging.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99

    இந்த முகவரியை இங்கேயே கொடுத்துள்ளேன் இங்கு சென்று தங்களுக்குத் தேவையான நிரலை எடுத்து ஒட்டிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு