பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 21 மார்ச், 2010

நோக்கு(200 வது இடுகை)











வேர்களைத்தேடி..........

இதுவரை 85 நாடுகளிலிருந்து 29000 பார்வையாளர்கள் 2500 க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 179 பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். 300 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகின்றனர்.

தமிழ், மொழி, இலக்கியம் மட்டுமே எழுதும் எனது பதிவு நாடி இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தமிழ்ப்பற்று எனது எழுத்துக்களுக்கான கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது.

அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…

கடந்து வந்த பாதை………


திரட்டி, தமிழ்மணம் ஆகிய திரட்டிகளில் இந்தவார நட்சத்திரம்,
தமிழ்மணம் 2009 விருது, தினமணியில் வலையுலகப் படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டமை,

என நினைவில் நீங்காத அனுபவங்கள் பல இருந்தாலும் எப்போதும் எண்ணிப்பெருமிதம் கொள்ளுவது..

வலையுலகம் தந்த நட்பைத்தான்..

திரும்பிய திசையெல்லாம் நண்பர்கள்….
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்புக்குச் சென்றபோது இந்த வலையுலக நட்பின் ஆழத்தை உணர்ந்தேன். உடன்பிறந்த உறவுகளைப் போல, பலநூறாண்டுகள் பழகியது போன்ற உரிமை..

நான் நன்றாக அறிவேன்..
எனது பதிவுகளைப் படிப்போரில் 80 விழுக்காடு தமிழ்த்துறை அல்லாத பல்வேறு துறை சார்ந்தோர் என்பதை.

நான் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது இணையத்தில் தேடிக் கிடைக்காத தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணமே நான் வலையுலகிற்கு வர அடிப்படையாக அமைந்தது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தைப் பொற்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் மட்டும் சொல்லவில்லை. வாழ்வியல் நுட்பங்கள் பலவற்றையும் அழகாகச் சொல்லிச்செல்கின்றன. எனது இடுகைகளில் பாதிக்கு மேல் சங்கஇலக்கியங்களே ஆட்சிசெலுத்தும்.

பணத்தைப் பன்மடங்காக்கும் தொழில்நுட்பங்களைச் சொல்லித்தர உலகில் பல அமைப்புகள் உள்ளன. வாழ்வியல் நுட்பங்களைச் சொல்லித்தரவோ, கேட்கவோ மனிதர்களுக்கு நேரமில்லை.

சங்ககால மக்களின், இயற்கையோடு இயைந்த வாழ்வு, செம்மையான கொள்கைகள், கட்டுப்பாடுகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், அறிவியல் அறிவு, வாணிகம், என பல்வேறு கூறுகளும் இன்றைய சமூகம் அறிந்தகொள்ளவேண்டியவையாக உள்னன.


2500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களாக இருந்தாலும் அதன் இனிமை கருதிப் படிக்க வரும் தமிழ்ப்பற்றாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழின், தமிழரின் வேர்களைத்தேடி…. நான் சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் நண்பர்களை நட்பாகத் தந்த இந்த வலையுலகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் இவ்வேளையில்,

தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி, தமிழ்10 ஆகிய வலைப்பதிவுத் திரட்டிகளையும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

தினமணி நாளிதழும் வலைப்பதிவுகளைத் திரட்டுவது வலையுலகின் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைகிறது.


கருத்துச்சுதந்திரம் நிறைவாகவுள்ள இந்த வலையுலகில் வலைப்பதிவர்கள் ஒவவொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறன்களைக் கொண்டிருக்கின்றனர்.

தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கவிதை, கதை, சிந்தனை, நகைச்சுவை எனப் பல பொருளிலும் வலைப்பதிவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் சிந்தனை, தனித்திறன் பல வடிவங்களில் வெளிப்பட்டாலும். இவையெல்லாம் தமிழ் என்னும் எழுத்துவடிவத்தில் இணையத்தில் பார்ப்பதற்குப் பெரிதும் மகிழ்ச்சியாகவுள்ளது..

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குக் கணினியில் உள்நுழையக்கூட தெரியாது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு என்பதும் கூட எனக்குக் கனவாகத்தான் இருந்தது.

இன்று வலைப்பதிவு, மின்னஞ்சல் ( அரட்டை) ஆர்குட், டிவைட்டர், பேஸ்புக், என எங்கு சென்றாலும் தமிழ் தமிழ் தமிழ் தமிழிலேயே அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் முடிகிறது.


வலைப்பதிவர்களுக்கு உதவுவதற்கு என்று பல்லாயிரம் இணையதளங்களும் வலைப்பதிவர்களும் வந்துவிட்டனர். இவையல்லாமல் யுடியுப் போன்ற காணொளித் தளங்களும் வலைப்பதிவுத் தொழில்நுட்பக் காணொளிகளைக் கொண்டு விளங்குகின்றன.


ஐந்து நிமிடத்தில் இன்று….

◊ ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்.
◊ தமிழ் எழுது மென்பொருள் (அழகி, என்.எச்.எம்) பதிவிறக்கி கணினியில் பதியலாம்.
◊ ப்ளாக்கர் அடைப்பலகையை இணையப்பக்கம் போல மாற்றலாம்.
◊ இணையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் விட்செட்டுகள் வாயிலாக வலைப்பதிவில் சேர்க்கலாம்.
◊ உங்கள் எண்ணங்களை உலகில் உள்ள எல்லாத்திசைகளிலும் திரட்டிகள் வாயிலாகக் கொண்டு செல்லலாம்.

குறுகிய காலத்தில் இணையவுலகில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு விரல்நுனியில் உலகம் உள்ளது.

அதனால் வலையுலகில் பார்வையாளர்களாக மட்டுமே பலகோடிப் போ் உள்ளனர். அவர்களும் வலையுலகிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும், ப்ளாக்கர் என்னும் வலைப்பதிவு சேவை வழங்கிய கூகுளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..
____________/\______________ நன்றி! நன்றி! நன்றி! ____________/\_________

50 கருத்துகள்:

  1. அய்யா நான்தான் பர்ஸ்ட் !


    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் குணா.... தொடருங்கள் வருகிறோம் தமிழ் அழகு அருமை பெருமை வேர்களைத்தேடிப்பார்க்கிறோம் உங்களால்
    என்றும் தொடர்பிலிருங்கள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை ...

    பதிலளிநீக்கு
  5. முயற்சிகளும் உங்கள் நோக்கமும் எளிமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள், உங்களுக்கும் தமிழுக்கும்:)

    பதிலளிநீக்கு
  7. முனைவரே,

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 200 ஆவது இடுகைக்கு. இன்னும் பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  8. 200 பதிவுகளுக்கும் தமிழ் குறித்த பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).

    பதிலளிநீக்கு
  10. நல்ல முயச்சி. நல்ல பயன் படித்தவர்க்கும் படிப்பவருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. உங்களின் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமை நண்பரே....வாழ்த்துக்கள் கோடி..

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள் இருநூறாவது இடுகைக்கு நண்பரே..

    தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  15. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    நட்புடன் ஜீவன்.

    பதிலளிநீக்கு
  16. தாய்த்தமிழை வளர்க்க உதவும் தங்களின் மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    தமிழன் என்ற ஒற்றைச் சொல்லில் அனைவரையும் ஒன்றினைக்க, தமிழ் என்னும் பாலூற்றி, தரணியெங்கும் தங்களின் வேர் படர, தாழ்மையுடன் வணங்குகிறேன்.

    தமிழால் இனைவோம் தமிழா..!
    புதியதோர் சமுதாயம் படைப்போம்...!

    பதிலளிநீக்கு
  17. இன்னும் பல நூறுகள் எழுத வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. @ஆராய்வு

    தங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா.

    பதிலளிநீக்கு
  19. இரட்டை சதத்துக்கு என் நல்வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் அரும்பணி!

    பதிலளிநீக்கு
  20. 200 இடுகைகளுக்கு வாழ்த்துகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை ...

    பதிலளிநீக்கு