பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வியாழன், 11 பிப்ரவரி, 2010
தமிழ்மணம் தந்த முதல் பரிசு.
சென்ற ஆண்டுக்கான தமிழ்மணம் அளித்த விருதுகளுள் 11 வது பிரிவில் எனக்கு முதல் பரிசு கிடைத்ததை முன்பே பதிவில் பகிர்ந்திருக்கிறேன். விருது அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களிலேயே தமிழ்மணம் இணையதளத்தினர் முதல்பரிசு ரூபாய் 1000 க்கான பரிசுக் கூப்பனை மின்னஞ்சல் வழி அனுப்பிவிட்டார்கள். சென்னை நியு புக் லேன்ட் என்னும் நூல் நிலையத்தில் புத்தகங்களை வாங்கிக்கொள்ளப் பணித்திருந்தார்கள். பாண்டிச்சேரிக்குக் கருத்தரங்கத்துக்குச் சென்றபோது அப்படியே சென்னை சென்று பரிசுக்கான நூல்களை மகிழ்வோடு வாங்கிவந்தேன்.
இந்த மகிழ்வான வேளையில் தமிழ்மணம் இணையதளத்தினருக்கும்,
வாக்களித்து தேர்வுபெறச் செய்த,
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்விப்பணியிலிருக்கும் எனது சிந்தனைச் சிதறல்களுக்கு நூல்களே அடிப்படையாக அமைகின்றன. அவ்வடிப்படையில் தமிழ்மணம் வாயிலாகக் கிடைத்த இந்த நூல்களை என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிவரும் எனது எழுத்துக்களின் சுவடுகளுள் ஆழப்பதிந்த சுவடுகளாக இந்த தமிழ்மண விருதுகள் அமைந்துவிட்டன.
இவ்வேளையில் நான் வியப்போடும், பெருமையோடும் எண்ணிப்பார்க்கும் செய்தி ஒன்று உண்டு!!
தமிழ் வலைப்பதிவர்கள் பலர் இருந்தாலும் கல்விப்புலம் சார்ந்த, தமிழ்த்துறை சார்ந்த வலைப்பதிவர்கள் எத்தனைபேர் என்பதை விரல்விட்ட எண்ணிவிடலாம்.
இச்சூழலில்,
பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான செய்திகளைப் பதிவிடும் எனது பதிவைப் வாசிப்போருள் 80 சதவீதம் பிற துறை சார்ந்திருந்த நண்பர்கள் தான். அவர்களுக்குத் தமிழ்மீது இருக்கும் ஆர்வம் பாரட்டுதலுக்கும், வரவேற்பிற்கும் உரியது. அவ்வேளையில் தமிழ்த்துறை சார்ந்தவர்களும் வலையுலகிற்கு வரவேண்டும் என்பது எனது ஆவலாகவுள்ளது.
ஆலமரம் போல வேர்விட்டு, விழுதுவிட்டு, நிழல் பரப்பி நிற்கிறது
நம் மொழி! நம் மரபு!
ஆனால் அதன் வேர்கள் நம் கண்ணுக்குத் தெரியாதவாறு மண்ணுக்குள் புதைந்திருக்கிறது.
நமது மரபுகளையும், தமிழின் தனிச்சிறப்பையும் எடுத்தியம்புவதே
எனது பதிவின் நோக்கமாகும்.
என்னைப் போன்ற ஒவ்வொரு பதிவர்களின் பதிவுகளையும் உலக அரங்கின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் பணி போற்றுதலுக்குரியது.
வாழ்த்துகள் நண்பரே. தொடரட்டும் உங்கள் சாதனை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் முனைவரே, தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குவாழ்த்துகள் குணா:)
பதிலளிநீக்குடெக்ஷங்கர் @ TechShankar said...
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே. தொடரட்டும் உங்கள் சாதனை.
நன்றி சங்கர்.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி நண்பரே..
சைவகொத்துப்பரோட்டா said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் முனைவரே, தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி நண்பரே..
வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குவாழ்த்துகள் குணா:)
நன்றி ஐயா.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே..
பதிலளிநீக்குஉங்களுக்கு பரிசு வந்ததில் என்ன ஆச்சிரியம் குணா வராதிருந்தால் தான் ஆச்சிரியம் வாழ்த்துக்கள் என்றும் வெற்றி தொடர....
பதிலளிநீக்குவிருது த்குதியான உங்களுக்குக் கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. தொடரட்டும் உமது தமிழ்ப்பணி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் முனைவரே, தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே.. Keep it up
பதிலளிநீக்குயாதவன் said...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி கவிஞரே.
திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே..
நன்றி சம்பத்.
Blogger தமிழரசி said...
பதிலளிநீக்குஉங்களுக்கு பரிசு வந்ததில் என்ன ஆச்சிரியம் குணா வராதிருந்தால் தான் ஆச்சிரியம் வாழ்த்துக்கள் என்றும் வெற்றி தொடர....
தங்கள் நம்பிக்கைக்கு நன்றி தமிழ்.
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குவிருது த்குதியான உங்களுக்குக் கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. தொடரட்டும் உமது தமிழ்ப்பணி
நன்றி நண்பரே.
சே.குமார் said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் முனைவரே, தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி நண்பரே.
Blogger கவிதை காதலன் said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே.. Keep it up
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.
வாழ்த்துத் தெரிவிக்கும் பின்னூட்ட வழக்கம் வழக்கொழிந்து வருகிறதோ? அதிக பின்னூட்டங்களைக் காணோமே.
பதிலளிநீக்குஏன் குணா சார் இது?