காலங்கள் மாறினாலும் சில மரபுகள் மாறுவதில்லை.
எதிர்த்தவீட்டுப் பையன் பக்கத்துவீட்டுப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பது போன்ற செய்திகளை இன்றும் கண்ணால் பார்க்கிறோம், நாளிதழ்களில் படிக்கிறோம்.
இதோ சங்ககாலக் காட்சி ஒன்று..
பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி. அப்போது வீட்டில் வளர்ந்த வயலைக் கொடியைக் கன்றினை ஈன்ற பசு தின்றது. அதைக் கண்ட தலைவி தான் ஆடிக் கொண்டிருந்த பந்தினை எறிந்துவிட்டு, ஓரையாடும் பாவையையும் நீங்கியவளாகத் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு வருந்தினாள்.
மான் போன்ற பார்வை கொண்டவளான என் மகள், நானும் செவிலித்தாயும் “தேனோடு கலந்த பாலைப் பருகுவாய் பருகுவாய்” என்று ஊட்டியபோதும் உண்ணாமல் அழும் தன்மையுடையவளாவாள்.
நேற்றும் அத்தன்மையளாகத் தான் இருந்தாள்.
இன்றோ காளை போன்ற வலிமை வாய்ந்த தலைவனின் பொய்மொழிகளே உண்மையென்றெண்ணி வெண்மையான பற்களில் சிரிப்புத் தோன்ற எம்மை நீங்கிச் சென்றுவிட்டாள்.
இத்தகைய மென்மைத்தன்மையுடையவள் எவ்வாறு மனையறம் நடத்துவாளோ!
என்று வருந்துகிறாள் நற்றாய்.
பாடல் இதோ,
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
5 யானும் தாயும் மடுப்ப, தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன்
10 முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.
நற்றிணை-179.
வயலைக் கொடியை பசு மேய்ந்தமைக்குத் தலைவி வருந்தி வயிற்றில் அடித்து அழுததுபோல,
தலைவன் தலைவியை அழைத்துச் சென்றமைக்குத் தாய் வயிற்றில் அடித்துக்கொண்டு கலங்கினாள்.
தீம்பாலை உண்ணச் சலித்தவள் இன்று எப்படி கொடிய சுரவழியே செல்லத் இசைந்தாள்?
என வியப்பெய்தினாள் நற்றாய்!
இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.
(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)
1.மனை மருட்சி என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2.சங்ககால பெண்கள் விளையாட்டுகளுள் “பந்து விளையாட்டும், பாவை விளையாட்டும்“ குறிப்பிடப்படுகிறது.
சுவையான விளக்கம்.
பதிலளிநீக்குபந்து விளையாட்டு அப்பவே இருந்திருக்கா, நன்றி தகவலுக்கு.
பதிலளிநீக்குஅருமையான சங்ககால குறிப்புகள். நன்றி குணசீலன் சார்.
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் அண்ணா...
பதிலளிநீக்குவிளக்கத்துக்கு பிறகுதான் பாட்டு புரிகிறது..... தெளிவான விளக்கம்.... பகிர்வுக்கு நன்றிங்க முனைவரே.
பதிலளிநீக்குஅழகான விளக்கம் குணா. நிறையத் தேக்கம். படித்துவிடுகிறேன்:)
பதிலளிநீக்குநல்ல விளக்கம் நண்பரே..
பதிலளிநீக்குமுதல் இரண்டு பத்திகளும் தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது..
(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)
பதிலளிநீக்கு.......... சங்க கால இலக்கியம் மூலமாக தகவல்கள் பகிர்வதற்கு நன்றி.
சுவையான விளக்கம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி முனைவரே.
சங்க மனையில் நான் மருட்சியானேன் நன்றி குணா தொடருங்கள்
பதிலளிநீக்குசுவார்ஸ்யம் நிறைந்த விளக்கங்களுடன்..நன்றி நண்பரே
பதிலளிநீக்குBlogger ஸ்ரீ said...
பதிலளிநீக்குசுவையான விளக்கம்.
நன்றி நண்பரே.
Blogger சைவகொத்துப்பரோட்டா said...
பதிலளிநீக்குபந்து விளையாட்டு அப்பவே இருந்திருக்கா, நன்றி தகவலுக்கு.
ஆம் நண்பரே.
Blogger Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பதிலளிநீக்குஅருமையான சங்ககால குறிப்புகள். நன்றி குணசீலன் சார்.
நன்றி ஸ்டார்ஜன்.
Blogger அகல்விளக்கு said...
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் அண்ணா...
நன்றி நண்பா..
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்குவிளக்கத்துக்கு பிறகுதான் பாட்டு புரிகிறது..... தெளிவான விளக்கம்.... பகிர்வுக்கு நன்றிங்க முனைவரே.
மகிழ்ச்சி நண்பரே.
Blogger வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குஅழகான விளக்கம் குணா. நிறையத் தேக்கம். படித்துவிடுகிறேன்:)
மகிழச்சி ஐயா.
திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
பதிலளிநீக்குநல்ல விளக்கம் நண்பரே..
முதல் இரண்டு பத்திகளும் தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது..
இதோ..
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
இல் - வீடு
எழு வயலை- வீட்டில் வளர்ந்து வயலைக் கொடி..
ஈற்று ஆ- கன்றை ஈன்ற பசு
தின்றென- தின்றது என
பந்து நிலத்து எறிந்து- விளையாடிக்கொண்டிருந்த பந்தை எறிந்துவிட்டு..
பாவை நீக்கி- பாவை என்னும் விளையாட்டையும் நீங்கியவளாக..
என்னும் செய்திகள் தான்சுட்டப்படுகின்றன நண்பா..
தொடர்புடைய செய்திகள் தான்.
வருகைக்கு நன்றிகள்..
Blogger Chitra said...
பதிலளிநீக்கு(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)
.......... சங்க கால இலக்கியம் மூலமாக தகவல்கள் பகிர்வதற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.
Delete
பதிலளிநீக்குBlogger நினைவுகளுடன் -நிகே- said...
சுவையான விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி முனைவரே.
நன்றி நிகே.
ஆஹா புதுமை . நானும் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !
பதிலளிநீக்குBlogger றமேஸ்-Ramesh said...
பதிலளிநீக்குசங்க மனையில் நான் மருட்சியானேன் நன்றி குணா தொடருங்கள்
மகிழ்ச்சி றமேஸ்.
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குசுவார்ஸ்யம் நிறைந்த விளக்கங்களுடன்..நன்றி நண்பரே.
கருத்துரைக்கு நன்றி நண்பா.
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
பதிலளிநீக்குஆஹா புதுமை . நானும் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !
நன்றி நண்பா.
இவையெல்லாம் படிக்கும் வாய்ப்பு இல்லை..இப்படி அறிந்தால் உண்டு...மகளின் மனம் குறித்து தாய் வருந்துவதை சிறப்பா சொல்லியிருக்கு பாடல் அதை நீங்கள் சொன்னவிதமும் அழகு...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.
பதிலளிநீக்குமனை மருட்சி மருள வைத்தது குணசீலன்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி அம்மா.
பதிலளிநீக்குதங்கள் பதிவுக்கு நன்றிகள்..
பதிலளிநீக்குEast Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
அருமையான கட்டுரைகள் அதிகம் உள்ளன .பயனுள்ளவை .
பதிலளிநீக்கு"அருமையான விளக்கம் சார் !"
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்நன்றி
பதிலளிநீக்குநன்றி மாலதி
பதிலளிநீக்கு