வியாழன், 21 ஜனவரி, 2010
சகுனம் பார்த்த பன்றி!
“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“
என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.
சகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..
ஊருக்கே குறி சொல்கிறது பல்லி,
என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
தன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.
பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..
'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.
ஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.
ஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை!
சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,
ஏன் சிரிக்கிறாய்?
என்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.
“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.
நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”
கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.
நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.
மனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையும் படைத்துக்கொண்டான்.
நற்றிணைப் பாடல் ஒன்று,
தினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.
பாடல் இதோ,
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
புலவர் - உக்கிரப் பெருவழுதி
நற்றிணை - 98. (குறிஞ்சி)
பாடல் குறிப்பு.
இரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)
களவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,
நீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.
பாடலின் பொருள்.
முள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.
எம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.
இப்பாடலின் உட்பொருள்.
� காட்டுப் பன்றி கூட வழித்துன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.
� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்
1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.
2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.
3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது
4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.
5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையான பதிவு குணசீலன் சார்
பதிலளிநீக்குசகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..
நாந்தான் முதல்லயா
பதிலளிநீக்கு//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //
பதிலளிநீக்குஉண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
அருமையான பதிவு சார் .....
பதிலளிநீக்கு//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
பதிலளிநீக்குஉண்மைதான், நல்ல பதிவு முனைவரே.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பதிலளிநீக்குஅருமையான பதிவு குணசீலன் சார்
சகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டார்ஜன்.
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //
உண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராமலட்சுமி.
Sangkavi said...
பதிலளிநீக்குஅருமையான பதிவு சார் .....
கருத்துரைக்கு நன்றி சங்கவி..
சைவகொத்துப்பரோட்டா said...
பதிலளிநீக்கு//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
உண்மைதான், நல்ல பதிவு முனைவரே.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
பதிலளிநீக்குஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
பதிலளிநீக்குஇன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...
பாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.
நல்லபதிவு.
பதிலளிநீக்குபலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம்.
நல்ல பதிவு .
பதிலளிநீக்கும்ம்ம்
பதிலளிநீக்குஎன்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா??
////
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
///
இது சூப்பரப்பு
இங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.
பதிலளிநீக்கு- நவாப்
நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.
பதிலளிநீக்குஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...
பதிலளிநீக்குசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா? பலே!!
பதிலளிநீக்கு///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////
பதிலளிநீக்குஇதுவே எனது கருத்தும்
இதையே நான் விரும்புகிறேன்.
///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..
நான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி
நல்ல மற்றுமொரு பதிவு
தொடருங்கள்
நல்ல பகிர்வு நன்றி
பதிலளிநீக்குஅருமை முனைவரே
பதிலளிநீக்குபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.
பதிலளிநீக்குஅருமையான பதிவு குணசீலன் சார்
Blogger புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்கு//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
ஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.//
ஆம் நண்பரே..
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
பதிலளிநீக்குஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.
January 21, 2010 2:03 AM
Delete
Blogger க.பாலாசி said...
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
இன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...
பாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.
நன்றி பாலாசி.
மாதேவி said...
பதிலளிநீக்குநல்லபதிவு.
பலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதவி.
ஸ்ரீ said...
பதிலளிநீக்குநல்ல பதிவு .
நன்றி ஸ்ரீ.
பிரியமுடன் பிரபு said...
பதிலளிநீக்கும்ம்ம்
என்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா??
////
//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//
///
இது சூப்பரப்பு.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரபு.
Anonymous Anonymous said...
பதிலளிநீக்குஇங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.
- நவாப்.
கருத்துரைக்கு நன்றி நவாப்.
ஆரூரன் விசுவநாதன் said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே..
வெ.இராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.
நன்றி நண்பரே..
செ.சரவணக்குமார் said...
பதிலளிநீக்குபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
கண்ணகி said...
பதிலளிநீக்குஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...
நன்றி கண்ணகி.
aaranyanivasrramamurthy said...
பதிலளிநீக்குசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா? பலே!!
வருகைக்கு நன்றி.
றமேஸ்-Ramesh said...
பதிலளிநீக்கு///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////
இதுவே எனது கருத்தும்
இதையே நான் விரும்புகிறேன்.
///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..
நான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி
நல்ல மற்றுமொரு பதிவு
தொடருங்கள்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
Sabarinathan Arthanari said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நன்றி
நன்றி நண்பரே.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்குஅருமை முனைவரே
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
சே.குமார் said...
பதிலளிநீக்குபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.
அருமையான பதிவு குணசீலன் சார்
கருத்துரைக்கு நன்றி குமார்.
அருமையான விளக்கங்கள்..
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே....
பதிலளிநீக்குஉங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....
வாழ்க வளமுடன்,
வேலன்
நம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ளி, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)
பதிலளிநீக்குஎன்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..
அருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..
பதிலளிநீக்குBlogger வேலன். said...
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே....
உங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
பார்க்கிறேன் நண்பரே.
நன்றி!
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பதிலளிநீக்குநம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ளி, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)
என்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
Blogger திவ்யாஹரி said...
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..
நன்றி திவ்யாஹரி.
நண்பரே சகுணன் பார்க்கும் எல்லா விதத்தையும் ஒரே வீசில் மறுதலித்து விட இயலாது......நம் முதாதையர்கள் ஐரோபியா அறிவியலில் நுழைய முன் அறிவியலை பயன் படுத்தியவர்கள் ஆனால் அவர்களின் தவறு அவற்றை வழிமுறை வழிமுறையாக காரண காரியத்தோடு கடதாதமையே ,......விலங்குகளின் நடத்தை அனர்த்தங்களின் அறிகுறி என மேலதேயவன் சொல்கையில் வாய்பிளந்து கை தட்டும் நாம் ஏன் நாம் சந்ததி பின்பற்றும் நடத்தைகளின் காரண காரியங்களை அறிந்துகொள்ள முயல கூடாது .அறிய தூண்ட கூடாது ...இந்திய வில் பயன் படுத்த பட்ட மன்னர்கால ராக்கெட் நுட்பமே நாசா வின் அடித்தளம்...அடுத்தவன் நம்மைஈநியாக பயன்படுத்த அனுமதிக்கலாமா. உண்மையோ பொய்யோ ஏன் நாம் அதை ஒரு முன்னேறமான பாதைக்கு திருப்ப கூடாது
பதிலளிநீக்குநல்லதொரு சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள் அன்பரே
பதிலளிநீக்குநன்றி.