எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மொழிகள் உலகில் பல இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் கூறிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியாகும்.
சங்கப்பாடல்கள் அகம், புறம் என்னும் பாகுபாடுடையன. அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் சொல்லப்பட்டுள்ளது.
அகம் என்பது… (களவு, கற்பு)
சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாத மக்களின் அகவாழ்வியலைப்பற்றியது.
கைக்கிளை, குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழும் அகத்திணைகளாகும்..
இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர்கூட்டம், பாங்கியர்கூட்டம், அறத்தொடுநிற்றல், வரைவுகடாவுதல், நொதுமல்வரைவு போன்ற பலவும அகத்துறைகளாகும்..
அகத்திணைகள் ஏழுக்குமான புறத்திணைகள் ஏழை வகுத்தனர் நம்முன்னோர்.பின் புறத்திணைகள் ஏழு என்பது பன்னிரண்டாக வளர்ந்தது.
புறம் என்பது வீரம் கொடை சார்ந்தது.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி. தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை,பெருந்திணை ஆகியன புறத்திணைகளாகும்.
இயன்மொழி,பாணாற்றுப்படை,செவியறிவுறுஉ போன்றன புறத்துறைகளாகும்.
புறத்துறைகள்.
1.வெட்சி. (குறிஞ்சி என்னும் அகத்துறைக்கு புறனானது)
இரு மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்தனர்.
நாங்கள் இவ்விடத்தில் போர் தொடங்கவுள்ளோம் அதனால் ஆவும், ஆவைப்போன்ற பார்ப்பனர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும்,குழந்தைகளும், இவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுங்கள் என்று அவ்வறிவிப்பு இருக்கும்.இந்த அறிவிப்பை ஆநிரைகள் அறியாது ஆதலாலும், ஆநிரைகள் செல்வமாகக் கருதப்பட்டதாலும் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்துவருவர். அப்போது அவர்கள் வெட்சி பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை வெட்சியானது.
2.கரந்தை.
நிரை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்களிடமிருந்து தம் நிரைகளை மீட்பது கரந்தையாகும். ஆநிரை மீட்கப் போர்புரியும் வீரர்கள் கரந்தைப் பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை கரந்தையானது.
3.வஞ்சி.(முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகை நாட்டை விரும்பிப் போர் தொடுத்தல் வஞ்சியாகும். இப்போரின் முதன்மை நோக்கம் பகைநாட்டு மன்னனின் மண்ணைக் கவர்தலாகும்.
4.உழிஞை. (மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகைவருடைய மதிலை வளைத்தல் உழிஞையாகும். இவ்வீரர்கள் உழிஞைப் பூச்சூடுவர்.
5.நொச்சி.
உழிஞை வீரர்கள் மதிலைக் கைப்பற்றாதவகையில் மதிலைக் காத்தல் நொச்சியாகும். இவ்வீரர்கள் நொச்சிப்பூச்சூடியிருப்பர்.
6.தும்பை (நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
இரு மன்னர்களும் போர்க்களத்தில் எதிர் எதிரே நின்று போர்செய்தல் தும்பையாகும். இருநாட்டு வீரர்களும் தும்பைப் பூச்சூடியிருப்பர்.
7.வாகை (பாலை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
வெற்றிபெற்ற மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடுதல் வாகையாகும். இங்கு வாகைப்பூச் சூடப்படும்.
"வாழ்வியல் இலக்கணம்" நல்ல விளக்கங்களுடன்.
பதிலளிநீக்குமிக நல்ல இடுகை ,உங்களின் மற்ற இடுகைகளையும் படித்து வருகிறேன்.நன்று.
பதிலளிநீக்குபுறத்தினை பற்றி நல்விளக்கங்கள். நன்றி நண்பா...
பதிலளிநீக்குபுதிய டெம்ப்ளேட் அருமைநண்பரே...ஆனால் இடப்பக்கம் உள்ள படங்களின் அளவினை குறைத்தால் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குஇலக்கணப்பாடம்அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அருமையான விளக்கங்களுடன் அருமையான செய்தி, உங்கள் தமிழ் தொண்டு நீடிக்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி
மாதேவி said...
பதிலளிநீக்கு"வாழ்வியல் இலக்கணம்" நல்ல விளக்கங்களுடன்.//
நன்றி மாதேவி..
Delete
பதிலளிநீக்குBlogger ஸ்ரீ said...
மிக நல்ல இடுகை ,உங்களின் மற்ற இடுகைகளையும் படித்து வருகிறேன்.நன்று.//
மிக்க மகிழ்ச்சி நண்பரே..
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குபுறத்தினை பற்றி நல்விளக்கங்கள். நன்றி நண்பா...//
கருத்துரைக்கு நன்றி நண்பா..
வேலன். said...
பதிலளிநீக்குபுதிய டெம்ப்ளேட் அருமைநண்பரே...ஆனால் இடப்பக்கம் உள்ள படங்களின் அளவினை குறைத்தால் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.
இலக்கணப்பாடம்அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.//
குறைத்துவிட்டேன் நண்பரே..
கருத்துரையளித்தமைக்கு நன்றி!!