பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
செவ்வாய், 29 டிசம்பர், 2009
மூங்கில் இலைமேலே........
கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை,
ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..
மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....
என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தினாராம்...
அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..
மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே!
என்று வியந்து போனாராம் கம்பர்..
இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழிப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும்..
ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் இதுபோன்ற ஏட்டிலில்லா இலக்கியங்களின் வழிவந்தவையே..
ரசித்தேன்....
பதிலளிநீக்குபி.சுசீலா குரலில் அந்த ஆரம்ப வரிகளைக் கொண்டு ஒரு பாடல் ஞாபகம் வந்தது...!
அழகுங்க. நன்றி பகிர்ந்தமைக்கு
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குசிறு வயதில் என் தாத்தா கூற கேட்டிருக்கிறேன், அருமையான வரிகளோடு. இன்னும் சில வரிகளும் உடன் இருந்ததாய் நினைவு.
நன்றி.
பிரபாகர்.
பாடல் வரி கண்டு நானும் வியந்து விட்டேன். இப்படித்தான் பலரது திறமை வெளிவராமலிருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல்...
பதிலளிநீக்குகம்பனே வியந்த வரிகள் அழகோ அழகு..இங்கு எங்களை அறியவைத்தமைக்கு நன்றி குணா...
பதிலளிநீக்குBlogger ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குரசித்தேன்....
பி.சுசீலா குரலில் அந்த ஆரம்ப வரிகளைக் கொண்டு ஒரு பாடல் ஞாபகம் வந்தது...!
கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குஅழகுங்க. நன்றி பகிர்ந்தமைக்கு..
கருத்துரைக்கு நன்றி ஐயா..
பிரபாகர் said...
பதிலளிநீக்குஅய்யா,
சிறு வயதில் என் தாத்தா கூற கேட்டிருக்கிறேன், அருமையான வரிகளோடு. இன்னும் சில வரிகளும் உடன் இருந்ததாய் நினைவு.
நன்றி.
பிரபாகர்.//
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குபாடல் வரி கண்டு நானும் வியந்து விட்டேன். இப்படித்தான் பலரது திறமை வெளிவராமலிருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல்...
ஆம் நண்பரே..
தமிழரசி said...
பதிலளிநீக்குகம்பனே வியந்த வரிகள் அழகோ அழகு..இங்கு எங்களை அறியவைத்தமைக்கு நன்றி குணா...
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..