பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
திங்கள், 21 டிசம்பர், 2009
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு நினைவுத்துளிகள்.
ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 20.12.09 அன்று மாலை 3 மணி அளவில் தொடங்கி 7 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வலைபப்பதிவர்கள் கூடினர்.இந்த சந்திப்பில் நானும் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
○ தமிழ்மணம் காசி ஐயா, பழமைபேசி, வானம்பாடிகள்,புலவர்.காசி, பரிசல்காரன், கேபிள் சங்கர், சுமஜ்லா, ரம்யா,வசந்தகுமார், செந்தில், நாகா, வெயிலான், சிவா(நிகழ்காலத்தில்) கார்த்திகைப்பாண்டியன் (பொன்னியின் செல்வன்), ஸ்ரீ உள்ளிட்ட வலைப்பதிவர்களும் கலந்துகொண்டனர்.
○ ஈரோடு வலைப்பதிவர்களான,
கதிர், ஆருரன், பாலாசி, நந்தா, வால்பையன்,அகல்விளக்கு, எஸ்ரா, உள்ளிட்டவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெற துணைபுரிந்தனர்.
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட செய்திகளின் சாரம்….
○ தமிழ்த்தாய் வாழ்த்தோடு 3.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கதிர் அனைவரையும் வரவேற்றமர்ந்தார்.
○ ஆரூரன் அவர்கள் பதிவின் அவசியத்தை எடுத்தியம்பினார். “கலிங்கராயன் என்ற சொல் காலிங்கராயன், காளிங்கராயன், காளிங்கரையான் என மாறி வழக்கத்தை எடுத்தியம்பி பதிவிடுவது அவசியம் என்று கூறினார்.
○ வலைச்சரம் சீனா அவர்கள் வலைப்பதிவர்களின் நிலையையும், வலைப்பதிவின் நிலையையும் அழகாக எடுத்தியம்பினார்.
○ தமிழ்மணம் காசி அவர்கள் பேசியபோது வலைப்பதிவின் தற்கால நிலையைக் கூறி அரசு நிறுவனங்கள் கூட தற்போது வலைப்பதிவிடுதலைத் தொடங்கியுள்ளன என்றார். மேலும் கணினிப் பயிற்சிப்பட்டறைகளின் தேவையையும் சொன்னார்.
○ பழமைபேசி அவர்கள் தமிழர்களை இணைக்கும் கட்டமைப்பு வலைப்பதிவால் உருவாகியுள்ளது. வலைப்பதிவர்களுக்கு சமூக அவலங்களை எடுத்துச்சொல்லவேண்டிய கடமை இருக்கிறது என்றார். கடமையோடு சிந்தித்துசெயல்பட வேண்டிய சூழலில் அச்சப்படத் தேவையில்லை என்றியம்பினார்.
○ அமீரகத்திலிருந்து வருகை தந்திருந்த செந்தில் வேலவன் கணினிப் பயிற்சிப்பட்டறைகள் பற்றிப் பேசினார். “ பின்லாந்து என்னும் நாட்டில் ஐம்பது லட்சம்பேர் தான் உள்ளார்கள் இந்த எண்ணிக்கை நம் சென்னை வாழ்மக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு அவர்கள் பேசும் பின்னிசு மொழிக்கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் ஏழு லட்சம் கட்டுரைகள் உள்ளன. ஆனால் ஏழுகோடிபேர்களைக் கொண்ட நம் தமிழ்மொழியில் இருபதாயிரம் கட்டுரைகளையே இப்போது தான் தொட்டுள்ளோம் என்று நிகழ்கால நிலையை இயம்பினார்.
○ பட்டர்பிளை சூர்யா அவர்கள் உலக சினிமாவைப் பற்றிப்பேசினார், வசந்த் அவர்கள் சிறுகதை உருவாக்கம் குறித்துப் பேசினார், சுமஜ்லா அவர்கள் கணினித் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார்.ரம்யா அவர்களும் கலந்து கொண்டு தம் அனுபவங்களை உரைத்தார்.முனைவர்.புலவர். இராசு ஐயா அவர்கள் ஈரோட்டின் மரபுகளையும், தமிழ்மரபுகளையும், கணினியின் முக்கியத்துவத்தையும் கூறியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
○ வானம்பாடிகள், பரிசல்காரன் உள்ளிட்ட வலைப்பதிவர்களும் இணைந்து ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தை அறிமுகம் செய்துவைத்தனர்.
○ பின் விவாதம் தொடங்கியது…..
சுயவிவரமில்லா கருத்துரையாளர்கள்
சுயவிவரமின்றி கருத்துரையிடுவது சரியா? தவறா?
எந்த சூழலில் இவர்கள் இவ்வாறு கருத்துரையிடுகிறார்கள்.
இவர்களின் கருத்துரையை வெளியிடுவது சரியா? தவறா?
என பலவாறு சென்ற விவாதத்தில்.
“படைப்பைப் பொதுவில் வைத்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்கலாமா? அனானி என்று பார்க்காமல் விமர்சனம் என்று பார்ப்பதே சரி என்றார் இளையகவி, லதானந்த் உள்ளிட்டோர் தன்பெயரைக் கூடச் சொல்ல முடியாத அந்த கருத்துரையாளரைப் புறக்கணிப்பதே முறை என்றும் உரையாடினார்கள்.“
நீண்ட நேரம் சென்ற இந்த விவாதத்தில் வலைப்பதிவில் இடம்பெறும் கருத்துக்களுக்கு அந்த வலைப்பதிவரே பொறுப்பு அதனால் கட்டுப்பாடோடு கருத்துரையிடுவதும், இடப்பட்ட கருத்துரைகளை தெரிவு செய்து வெளியிடுவதும் வலைப்பதிவர்களின் கடமை என்று முடிவுக்கு வந்தனர்.மேலும் வலைப்பதிவர்கள் சட்ட விதிகளை அறிந்து கொள்வதன் அவசியத்தையும் பற்றிப் பேசினார்கள்.
○ தமிழ்மணத்தில் இடப்படும் ஓட்டுக்களைப் பற்றியும், சிறிது நேரம் விவாதம் நடந்தது.
○ உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வலைப்பதிவர்களின் இருத்தல் உணர்த்தப்பட வேண்டும் என்றும் உரையாடினார்கள்.
○ வலைப்பதிவு வாயிலாக வருவாய்பெறுவது பற்றி பேசும் போது தமிழ்மணம் காசி ஐயா அகர்வால் அவர்களைக் குறிப்பிட்டு அவர் வலைப்பதில் வரும் வருவாயிலேயே தம் வாழ்நாளை நகர்த்துகிறார் என்றார். கேபிள் சங்கர் தமிழ்வலைப்பதிவுகளில் வருவாய் ஈட்டுபவர்களில் முன்னோடி ஆதலால் அவரும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
○ புலவர் இராசு ஐயா விவாதங்கள் நடைபெற்றபோது இணையத்தில் உள்ள வரலாற்றுப்பிழைகளை எவ்வாறு நீக்குவது என்ற வினவினார். விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களில் இடம்பெறும் இதுபோன்ற தவறுகளைத் தெரிந்த யாவரும் ஆதாரங்களுடன் திருத்திக்கொள்ள முடியும் என்று பதிலளித்தனர்.
○ எதிர்காலத்தில் இந்த வலைப்பதிவர் குழுமம் கணினிப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தலாம் என்ற எண்ணத்தை வெளியிட்டனர்.
○ நன்றி சொல்லிப்பேசிய கதிர் அவரகள் இந்த கூட்டத்துக்கு இருபது பேர் வருவார்கள் என எண்ணியிருந்தோர் நூற்றுக்கு மேலானவர்கள் வந்து இந்த விழாவைச் சிறப்பித்துள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். நா.கணேசன் (தமிழ்கொங்கு) ஐயா அவர்களின் ஊக்குவித்தலையும் தமிழ்மணம் திரட்டியின் ஒத்துழைப்பையும் எண்ணிப் பெருமிதம் கொண்டவராக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
○ ஈரோடு வலைப்பதிவர் குழுமம், தமிழ்மணம், சங்கமம் இணைந்து நடத்திய இந்த வலைப்பதிவர் சந்திப்பு முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.
○ வலைப்பதிவுகளில் நிழற்படத்தைமட்டுமே பார்த்து பழகிய சூழலில் ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் நேரில் கண்டு உரையாடியது புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
○ இந்த கூட்டத்துக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட வலைப்பதிவர்களிடையே நட்பு அதிகரிக்கும் என்பதும் வலைப்பதிவர்கள் தம் வலைப்பதிவை மேலும் செம்மைப்படுத்த இந்த சந்திப்பு துணைபுரியும் என எண்ணகிறேன்.
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
பதிலளிநீக்குமிக்க நன்றி குணசீலன்
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பயனுள்ளவையாக உள்ளன. பதிவர் சந்திப்பு பற்றிய பதிவும் அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஈரோடு கதிர் said...
பதிலளிநீக்குதங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
மிக்க நன்றி குணசீலன்..
மகிழ்ச்சி நண்பரே..
ஈரோடு பதிவர் சந்திப்பு எனக்கு வலைப்பதிவு குறித்த புதிய தோற்றத்தையும் புதிய நண்பர்களையும் தந்துள்ளது..
இதற்கு தாங்கள் தான் காரணம் மிக்க நன்றி நண்பரே..
மன்னார் அமுதன் said...
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பயனுள்ளவையாக உள்ளன. பதிவர் சந்திப்பு பற்றிய பதிவும் அருமை. வாழ்த்துக்கள்..//
அறிவேன் நண்பரே..
மகிழ்ச்சி!
நன்றிகள்!
ஆனா பாருங்க கடசீவரைக்கும் உங்கள எங்க பாத்தன்னே தெரியாம போச்சுங்க
பதிலளிநீக்குரத்தன சுருக்கமா சொல்லிருக்கீங்க
அருமை :-))
ஆம் நண்பரே எனக்கும் இன்னும் நினைவுக்கு வரவில்லை..
பதிலளிநீக்குவிரிவான தொகுப்பு - நன்றி
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா..
பதிலளிநீக்குநிகழ்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுடன் உரையாட விரும்பினேன். ஆனால் நிகழ்வுகளில் சுழலில் சிக்கியதால் வெளிவர இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
ஆரூரன்
விழாவின் துவக்கத்தில் தமிழ் வணக்கமாக பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் பாடப்பட்டது குறித்து நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குஆரூரன் விசுவநாதன் said...
பதிலளிநீக்குநிகழ்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி.
உங்களுடன் உரையாட விரும்பினேன். ஆனால் நிகழ்வுகளில் சுழலில் சிக்கியதால் வெளிவர இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
ஆரூரன்..//
தங்கள் பணிச்சூழலை அறிந்தேன் நண்பரே..
கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.மிக்க மகிழ்ச்சி..
நிகழ்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுடன் உரையாட விரும்பினேன். ஆனால் நிகழ்வுகளில் சுழலில் சிக்கியதால் வெளிவர இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
ஆரூரன்
20 December 2009 21:58
Delete
Blogger ஆரூரன் விசுவநாதன் said...
விழாவின் துவக்கத்தில் தமிழ் வணக்கமாக பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் பாடப்பட்டது குறித்து நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.//
ஆம் நண்பரே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்திதான் அது..
வழக்கமான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்களிலிருந்து வேறுபட்ட இப்பாடல் பிறகூட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது..
மிக்க நன்றி அன்பரே...
பதிலளிநீக்குதங்களை சந்தித்தமையிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சங்கமத்தினைப்பற்றின விரிவான இடுகைக்கும் நன்றிகள்...
இது போன்ற சந்திப்புகள் பதிவர்களுக்கு ஊக்கமளிப்பதோடு ஒரு ஆரோக்யமான சிந்தனை சூழலும் வலையில் உருவாக ஏதுவாகும்.
பதிலளிநீக்குநிகழ்வுகளை அழகாக சொல்லி இருக்கறீர்கள்.........
பதிலளிநீக்குநானும் கலந்து கொண்டேன் இச்சங்கமத்தில் உங்களை பார்க்காமல் விட்டுவிட்டேன்
மீண்டும் சந்திப்போம்....
க.பாலாசி said...
பதிலளிநீக்குமிக்க நன்றி அன்பரே...
தங்களை சந்தித்தமையிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சங்கமத்தினைப்பற்றின விரிவான இடுகைக்கும் நன்றிகள்...//
தங்களைச் சந்தித்தமை மிக்க மகிழ்வளிப்பதாகவுள்ளத நண்பரே..
தங்களைப் போன்ற ஈரோட்டுப் பதிவர்களின் ஒத்துழைப்பால் தான் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது
வாழ்த்துக்கள்!!!
தங்கள் வலைதிவர் குழுவின் பணி சிறக்கட்டும்..
கண்மணி said...
பதிலளிநீக்குஇது போன்ற சந்திப்புகள் பதிவர்களுக்கு ஊக்கமளிப்பதோடு ஒரு ஆரோக்யமான சிந்தனை சூழலும் வலையில் உருவாக ஏதுவாகும்.//
உண்மைதான் கண்மணி.
Sangkavi said...
பதிலளிநீக்குநிகழ்வுகளை அழகாக சொல்லி இருக்கறீர்கள்.........
நானும் கலந்து கொண்டேன் இச்சங்கமத்தில் உங்களை பார்க்காமல் விட்டுவிட்டேன்
மீண்டும் சந்திப்போம்....
நான் தங்களைப் பார்த்தேன் நண்பரே..
கூட்டம் ஆதலால் உரையாட முடியவில்லை..
அதனாலென்ன மீண்டும் சந்திப்போம்..
சந்திப்பில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.. ஆனால் சந்திப்பின் கலந்துரையாடலை பய்திவிட்டமைக்கு நன்றி..
பதிலளிநீக்குசந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைந்தது நண்பரே..
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பினை நாங்களும் வந்து நேரில் பார்த்தது போன்று இருந்தது.பகிர்வுக்கு நன்றி.இது போன்ற சந்திப்புகள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும்..
பதிலளிநீக்குநன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பரே.... மிக்க நன்றி!
பதிலளிநீக்குசிறப்பாகப் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவர் ஐயா.
பதிலளிநீக்குபாமரன் பக்கங்களிலும் விவரம் படித்தேன்...நீங்கள் இன்னும் விளக்கமாகப் பதிவிட்டுள்ளீர்கள்..
பதிலளிநீக்குநண்பரே, தங்களை சந்தித்தது மிகுந்த சந்தோஷம் தந்தது!
பதிலளிநீக்குமுனைவர் கல்பனாசேக்கிழார் said...
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பினை நாங்களும் வந்து நேரில் பார்த்தது போன்று இருந்தது.பகிர்வுக்கு நன்றி.இது போன்ற சந்திப்புகள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும்..//
உண்மைதான் முனைவரே..
SanjaiGandhi™ said...
பதிலளிநீக்குநன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள்.//
நன்றி நண்பரே..
சென்ஷி said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பரே.... மிக்க நன்றி!//
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
செ.சரவணக்குமார் said...
பதிலளிநீக்குசிறப்பாகப் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவர் ஐயா//
நன்றி நண்பரே..
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குபாமரன் பக்கங்களிலும் விவரம் படித்தேன்...நீங்கள் இன்னும் விளக்கமாகப் பதிவிட்டுள்ளீர்கள்..//
மிக்க நன்றி நண்பரே..
SUMAZLA/சுமஜ்லா said...
பதிலளிநீக்குநண்பரே, தங்களை சந்தித்தது மிகுந்த சந்தோஷம் தந்தது!//
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழி..
தங்களைப் போலவே தங்கள் பையனும் தொழில்நுட்பம் சார் செய்திகளில் ஆர்வமாக உள்ளான்..
நல்ல தொகுப்பு அன்பரே. எனக்கு ஒரு முனைவர் நண்பராகியுள்ளார் என்று பெருமையாக என் வீட்டிலுள்ளவர்களிடம் கூறினேன் :))
பதிலளிநீக்குநல்ல பகிர்வு பட்டறை நண்பரே!
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. தங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
பதிலளிநீக்குSUMAZLA/சுமஜ்லா said...
பதிலளிநீக்குநண்பரே, தங்களை சந்தித்தது மிகுந்த சந்தோஷம் தந்தது!//
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழி..
தங்களைப் போலவே தங்கள் பையனும் தொழில்நுட்பம் சார் செய்திகளில் ஆர்வமாக உள்ளான்..
21 December 2009 06:09
Delete
Blogger ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
நல்ல தொகுப்பு அன்பரே. எனக்கு ஒரு முனைவர் நண்பராகியுள்ளார் என்று பெருமையாக என் வீட்டிலுள்ளவர்களிடம் கூறினேன் :))
மிக்க மகிழ்ச்சி நண்பரே..
வால்பையன் said...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு பட்டறை நண்பரே!..
ஆம் நண்பரே தங்களையெல்லாம் நேரில் சந்திக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு..
வானம்பாடிகள் said...
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. தங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி...//
எனக்கும் தங்களைச் சந்தி்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...
உங்களை சந்திக்க இயலாமல் போனதற்கு நிஜமாவே வருத்தம் குணா....
பதிலளிநீக்குஅதனாலென்ன தமிழ்..
பதிலளிநீக்குஅடுத்த சந்திப்பில் சந்திப்போம்..
இதில் கலந்துகொண்டு மகிழ முடியாத துர்பாக்கிய சாலிகள் நாங்கள். :-)
பதிலளிநீக்குகாலம் வரும் மீண்டும் சிந்திப்போம்.
சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அடுத்த சந்திப்பில் கண்டு மகிழலாம் நண்பரே..
பதிலளிநீக்குஎன்னால் இந்த பதிவர்களின் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் .இந்த படைப்பை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்
சங்கரின் பனித்துளி நினைவுகள்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
பதிலளிநீக்குஉங்களிடம் நான் பேசவே இல்லையே என்ற வருத்தம் சகோ :(
பதிலளிநீக்குமன்னிக்க தேடி தேடி அனைவரிடமும் பேசினேன். உங்களை சந்திக்க தவறி விட்டேன் மன்னிக்க.
மற்றுமொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி!
ஆம் இந்தமுறை தாங்கள் மேடையிலேயே இருந்தீர்கள் மேடையில் பேசும் வரை தாங்கள் யார் என்பதை அறியேன்..
பதிலளிநீக்குஅடுத்த சந்திப்பில் தவறாது உரையாடுவோம்...
அன்பின் குணசீலன்
பதிலளிநீக்குஅருமையான வர்ணனை - நிகழ்வினைப் பற்றிய வர்ணனை. சந்தித்துப் பேச இயலவில்லையே - கூட்டம் அதிகம் இருந்ததனாலோ ?
சந்திப்போம் குணசீலன்
நல்வாழ்த்துகள் குணசீலன்
ஆமாம் ஐயா தங்களுடன் பேசஇயலவில்லை..
பதிலளிநீக்குமுதலில் தங்களை மேடையில் அறிமுகப்படுத்தியபோது தான் அறிவேன் தாங்கள் சீனா ஐயா என்று...
அடுத்த சந்திப்பில் நிச்சயமாக கலந்துரையாடக் காத்திருக்கிறேன் ஐயா..