வெள்ளி, 11 டிசம்பர், 2009
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.
○ தமிழாய்வு, கல்விப்புலம் சார்ந்த நிலையிலும், கல்விப்புலம் சாராத நிலையிலும் செய்யப்பட்டுவருகிறது.
○ பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற புலங்களைச் சார்ந்தும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
○ எந்த தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது என்பது அந்த கல்விநிலையத்துக்கும் ஆய்வாளருக்கும் மட்டுமே தெரியும் நிலை உள்ளது.
○ இதுவரை செய்யப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களையும், செய்யப்பட்டுவரும் ஆய்வுத்தலைப்புகளையும் இணையத்தில் பதிவுசெய்வதால் ஒரே தலைப்புகளில் மீண்டு்ம் மீண்டும் ஆய்வு செய்யும் நிலை மாறும். தமிழாய்வு செம்மைப்படும்.
○ நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்தொடர்பான செய்திகளை இணையத்தில் காண்பதே அரிதாக இருந்தது.
○ இன்று வலைப்பதிவுகள் வந்தபின்னர் கருத்துச்சுதந்திரம் அதிகமாகியுள்ளது. தமிழ் சார்ந்த வலைப்பதிவுகள் பலவும் தமிழ் இணையத்துக்கு இணையாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.
○ இந்நிலையில் கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்வது தமிழாய்வின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணியாக அமையும்.
○ இணையம் என்பது தமிழுக்குத் தொடர்பில்லாதது என்ற நிலையிலேயே தமிழ்த்துறை சார்ந்தோர் தள்ளிநிற்கின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். “இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துபோகவில்லை, அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
○ இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
○ நிதி நல்கை பெற்று தொகுக்கப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டியது அந்த ஆய்வாளரின் அடிப்படைக்கடமையாகக் கொள்ளவேண்டும்.
ஆய்ந்தெடுத்த முத்துக்கள் ஆயிரம்….
முனைவர்.சே.செந்தமிழ்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு இந்தியா.
அவர்கள் எனது நெறியாளர் ஆவார். இவர் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புக்களைத் தொகுத்து ஒரு வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தலைப்புக்கள் …..
சங்க இலக்கியம்
நீதி இலக்கியம்
பக்தி இலக்கியம்
இக்கால இலக்கியம்
எனப் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும்,
ஆய்வுத்தலைப்பு
ஆய்வாளர்
ஆய்வின் உள்ளடக்கம் என்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த நிதிநல்கை உதவியும் இன்றி தொகுக்கப்பட்ட இந்த ஆய்வுத்தலைப்புகள் தமிழாய்வுக்கும், ஆய்வுத்தலைப்பு தேர்வு செய்வோருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழ்த்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை வந்தால் தமிழாய்வு எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலையை அடையும்.
ஆய்வுத்தலைப்பு அடங்கிய வலைப்பதிவின் முகவரி இதோ - “தமிழாய்வு“
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//இன்று வலைப்பதிவுகள்........இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை !
//இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//
நல்ல சிந்தனை !
தமிழ் கல்வி பயில்வோருக்கு இந்த பதிவு மிகுந்த பயன் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை நண்பா.
தமிழாய்வு ஒரு நல்ல அறிமுகம்...நல்ல முயற்சியும்...
பதிலளிநீக்குநன்றி உங்களின் படைப்பு மிகவும் பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குஉங்களைப்போன்ற பலரால் தமிழ் நீண்டு வாழும்
//இன்று வலைப்பதிவுகள்........இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.//
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை !
//இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//
நல்ல சிந்தனை !
தமிழ் கல்வி பயில்வோருக்கு இந்த பதிவு மிகுந்த பயன் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை நண்பா..//
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்குதமிழாய்வு ஒரு நல்ல அறிமுகம்...நல்ல முயற்சியும்..//
நன்றி புலவரே..
தியாவின் பேனா said...
பதிலளிநீக்குநன்றி உங்களின் படைப்பு மிகவும் பயனுள்ள பதிவு
உங்களைப்போன்ற பலரால் தமிழ் நீண்டு வாழும்//
மகிழ்ச்சி தியா.
"அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது." நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி மாதேவி..
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குஇது பலருக்கு பயனுள்ளதாக அமையும்
வாழ்த்துக்கள்
நினைவுகளுடன் -நிகே- said...
பதிலளிநீக்குநல்ல பதிவு
இது பலருக்கு பயனுள்ளதாக அமையும்
வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..