வெள்ளி, 9 அக்டோபர், 2009
பல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..
இன்றைய சூழலில் பல தொழில்நுட்பத் தகவல்களையும் வீடியோ வாயிலாக விளக்குவது பெருவழக்காக உள்ளது. அவ்வடிப்படையில் யூடியூப் (http://www.youtube.com/) என்னும் தளம் சிறந்து விளங்குகிறது. பல தொழில்நுட்ப விளக்கங்களும் இத்தளத்தில் விளக்கப் படங்களாகவே காண முடிகிறது.
தொழில்நுட்பச் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடிய காலம் சென்று இப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வடிவில் தேடுவதே பரவலாக உள்ளது.
பிடிஎப் கோப்பை வேர்டாக மாற்ற வேண்டுமா..?
வேர்டை பிடிஎப்பாக மாற்ற வேண்டுமா..?
gif கோப்பினை உருவாக்கவேண்டுமா..?
இத்தளத்தில் கிடைக்கும் வீடியோ பாடல்களின் ஒலியை மட்டும் எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதை முன்பு கண்டோம்.
என நமக்குத் தேவையான தொழில்நுட்பத்தகவல்கள் வீடியோ வடிவிலேயே கிடைப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது.
வீடியோக்களைத் பதிவிறக்கிக் கொள்ள பல இணையதளங்களும் உதவுகின்றன.சான்றாக(கீப்வைட்) யூடியூப் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை விளக்குவதாக இந்த விளக்கப் படம் அமைகிறது.
இவ்வாறு ஒவ்வொன்றாக பதிவிறக்கிய வீடியோ கோப்புகள் பலவற்றையும் ஒரே கோப்பாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பல இணையதளங்கள் வழங்குகின்றன.
அவற்றுள் இத்தளம் இலவச மென்பொருள் வழங்குவதாகவும்,பயன்படுத்த எளியதாகவும் விளங்குகிறது.
இச்சுட்டியை அழுத்தி அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
அடுத்து அந்த மென்பொருளுக்கான் ஐகானை அழுத்தினால் ஒரு பட்டியல் பெட்டி தோன்றும்..
அதில் நாம் ஒன்றிணைக்க வேண்டிய வி.எல்.சி ஒளிக்கோப்புகளை தெரிவுசெய்து கொள்ள வேண்டும். பிறகு என்ன வகை ஒளிக்கோப்பாக ஒன்றிணைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டால் போதும் நீங்கள் சேமித்து வைத்த சிறுசிறு ஒளிக்கோப்புகள்(vlc) எல்லாம் ஒன்றிணைந்து ஒரே கோப்பாகக் காட்சியளிக்கும். இடைவெளி இன்றி தொடர்ச்சியாக உங்கள் வீடியோக்களைக் கண்டு மகிழலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல தகவல் நன்றி நண்பரே
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்குப் நல்ல தகவல், செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி மருத்துவரே..
பதிலளிநீக்குமிக மிக நல்ல தகவல் முனைவரே
பதிலளிநீக்குகருத்தரைக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு