இது என்ன கேள்வி?
நாம் உயிரோடு தானே இருக்கிறோம் என்கிறீர்களா..?
சங்க இலக்கியத்தி்ல் குறுந்தொகைப் பாடலைப் படித்துப் பார்த்த பின்னர் சொல்லுங்கள்....
(தலைமகன் பொருள்வயிற் பிரிந்த வழி ஆற்றால் எனக கவன்ற தோழிக்கு, அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன் என்று கிழத்தி சொன்னது.)
தோழி : தலைவர் பொருள்தேடச் சென்றுவிட்டார்....
உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவரின் பிரிவை நீ எவ்வாறு ஆற்றுவாயோ..?
தலைவி : அவரது பிரிவைக் கூட ஒருவாறு எண்ணி ஆற்றிக்கொள்வேன்.அவர் சென்ற கானத்தை எண்ணித் தான் என் மனம் மேலும் வருந்துகிறது.
தோழி : அட! வியப்பாக இருக்கிறதே. தலைவரின் பிரிவைக் கூட ஆற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு வந்துவிட்டதா..?
தலைவி : ஆம். தலைவர் பிரிவை எண்ணி முதலில் மிகவும் வருந்தினேன். அவரோ “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று என்னைத் தேற்றிவிட்டார்.
தோழி : அது என்ன உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்..?
தலைவி : அதாவது நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை
சிதைத்து செலவு செய்வோர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லையே! அதுதான்..
தோழி : நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை செலவு செய்வதற்கு நமக்குத் தானே உரிமையிருக்கிறது. நாம் செலவு செய்யாவிட்டால் வேறு யார் அந்தச் செல்வத்தைச் செலவு செய்வது....?
தலைவி : நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, நமக்கு உழைக்கும் வாய்ப்பு இல்லாது போகிறது. மேலும் அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல்ப் போகிறோம். அதனால் தான் நம் முன்னோர்கள் நாம் செல்வத்தின் மதிப்பை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று சொல்லிச்சென்றனர்.
தோழி : அட!
தலைவி : பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும்,
பொருள் இல்வாழ்க்கைக்கு அடிப்படைத்தேவை என்பதையும்,
பொருளின்றி வாழ்வது இரந்து உயிர்வாழ்வதை விட இழிவானது என்பதையும் தலைவர் சொன்னவுடன் நான் ஒருவாறு அவரின் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்..
தோழி : நம் முன்னோரின் உயர்ந்த கொள்கையையும், அதை மதித்த நம் தலைவரையும், தலைவனின் எண்ணத்துக்கு மதிப்பளித்த உன்னையும் எண்ணும் போது மிகவும் பெருமையாகவுள்ளது.!
தலைவி : எனது கவலையெல்லாம் அவர் சென்ற வழியை எண்ணித்தான்..?
தோழி : ஆம்.! கொடுமையான நிலம் தான் பாலை.
குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதே..
தலைவி : ஆம்! எமனைப் போன்ற கொடிய வேற்படையை உடைய மறவர், வழிச் செல்வோரைக் கொல்வர். அவ்வாறு இறந்த வழிச்செல்வோர் உடல்கள் மிக்க நாற்றம் உண்டாகும் வரை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இத்தகையை, நெடிய, பழமையான இடையீடுகள் பலவற்றையும் கொண்ட நீரில்லாத நிலம் பாலை..!
அங்கு சென்ற நம் தலைவர் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும்.
தோழி : அஞ்சாதே தலைவர் நல்லபடியாகத் திரும்பி வருவார்.
பாடலின் பொருள் இதுதான். பாடல் இதோ,
283. பாலை - தலைவி கூற்று
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தௌியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
இப்பாடல் வழியாகப் பல அரிய கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது.
o பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்.
o நம் முன்னோர் சேர்த்துத் தந்த பொருள்களை போற்றிக்காப்பது ஒன்றே நம் கடன். அதனைச் செலவு செய்ய நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு செலவு செய்தால் நாம் உயிருள்ளவராக மதிக்கப்பட மாட்டோம்.
o பொருளின்றி வாழ்தல் இரந்து வாழ்தலை விடவும் இழிவானது.
o நாம் உழைத்து,அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்.
o பாலை நிலம் மிகவும் கொடுமையானது அங்கு வழிப்பறி செய்யும் கள்வர் வழிச்செல்வோரைக் கொன்று அவர்களின் பொருளை வவ்வி வாழ்வதை இயல்பாகக் கொண்டிருந்தனர்.
போன்ற பல கருத்துக்களை இப்பாடல் வழி அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலைப் படிக்கும் போது நான் உயிருடன் இருக்கிறேனா?
என்று எண்ணிப் பார்க்கத்தோன்றியது.
உங்களுக்கு..?
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நல்ல விளக்கம் குணா.......
பதிலளிநீக்குதமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குஅருமையான இடுகை, நல்ல விளக்கங்களுடன் சொல்லியிருப்பது அழகு
பதிலளிநீக்குஸ்டார் வாழ்த்துக்கள் குணா...மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... !
பதிலளிநீக்கு//நீங்கள் உயிருடன்...//
பதிலளிநீக்குஉள்ளோம் ஐயா..!
அருமையான பாடல்.சிறப்பான விளக்கம்.
பதிலளிநீக்குநன்றாகச் சொன்னீர்கள் ஐயா.
பதிலளிநீக்குதமிழரின் பொருளியல் சிந்தனைக்கு இப்பாடல் நல்லதோர் சான்று.
உழைப்பின் முகான்மையை நன்கு விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் பாட்டு நம் பழந்தமிழ் இலக்கியத்திலும் உண்டு.
தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக தேர்வு பெற்றிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
தங்கள் பதிவுகள் என் மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. என் கற்றல் கற்பித்தலுக்கு உதவுகின்றன.
நன்றி ஐயா.
நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.

//o பாலை நிலம் மிகவும் கொடுமையானது அங்கு வழிப்பறி செய்யும் கள்வர் வழிச்செல்வோரைக் கொன்று அவர்களின் பொருளை வவ்வி வாழ்வதை இயல்பாகக் கொண்டிருந்தனர்.//
பதிலளிநீக்குஇன்று நல்ல நிலங்கள் பாலைநிலமாக மாறிவருகிறது. ஆக வழிப்பறி செய்வோர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும். எனவே இருக்கும் நிலப்பகுதிகளையாவது பாலை ஆகாமல் காப்பதும் நம் பொறுப்பு. எனக்கு இதுதான் தோன்றியது.
நல்ல விளக்கங்கள் தோழரே... வாழ்த்துகள்.
நல்ல விளக்கம் குணா.......(முனைவர் கல்பனா)
பதிலளிநீக்குநன்றி முனைவரே..
நல்ல விளக்கம் குணா.......(முனைவர் கல்பனா)
பதிலளிநீக்குநன்றி முனைவரே..
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே(ஞானசேகரன்)
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
ஸ்டார் வாழ்த்துக்கள் குணா...மேலும் சிறக்க வாழ்த்துக்கள்(வசந்த்)
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
வாழ்த்துக்கள்... !(கலகலப்பிரியா)
பதிலளிநீக்குநன்றி ...
//நீங்கள் உயிருடன்...//
பதிலளிநீக்குஉள்ளோம் ஐயா..!
(கலகலப்பிரியா)
மகிழ்ச்சி
நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.
பதிலளிநீக்குதமிழரின் பொருளியல் சிந்தனைக்கு இப்பாடல் நல்லதோர் சான்று.
உழைப்பின் முகான்மையை நன்கு விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் பாட்டு நம் பழந்தமிழ் இலக்கியத்திலும் உண்டு.
தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக தேர்வு பெற்றிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
தங்கள் பதிவுகள் என் மாணவர்களுக்கும் பயன்படுகின்றன. என் கற்றல் கற்பித்தலுக்கு உதவுகின்றன.
நன்றி ஐயா
(சுப நற்குணன்)
மிக்க மகிழ்ச்சி ஐயா....
o பாலை நிலம் மிகவும் கொடுமையானது அங்கு வழிப்பறி செய்யும் கள்வர் வழிச்செல்வோரைக் கொன்று அவர்களின் பொருளை வவ்வி வாழ்வதை இயல்பாகக் கொண்டிருந்தனர்.//
பதிலளிநீக்குஇன்று நல்ல நிலங்கள் பாலைநிலமாக மாறிவருகிறது. ஆக வழிப்பறி செய்வோர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும். எனவே இருக்கும் நிலப்பகுதிகளையாவது பாலை ஆகாமல் காப்பதும் நம் பொறுப்பு. எனக்கு இதுதான் தோன்றியது.
நல்ல விளக்கங்கள் தோழரே... வாழ்த்துகள்(குடந்தை அன்புமணி)
நன்றி நண்பரே..
மிக நன்று.
பதிலளிநீக்குநல்ல பாடலைத் தான் தமிழ்மண நாட்காட்டி வாரத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குநான் இருக்கிறேன். உயிருடன். :-)
நல்ல பாடலைத் தான் தமிழ்மண நாட்காட்டி வாரத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குநான் இருக்கிறேன். உயிருடன். :-)
மகிழ்ச்சி நண்பரே...