வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 செப்டம்பர், 2009

நட்சத்திர இடுகை.




தமிழ் மணம் திரட்டியில் இந்த வார நட்சத்திரமாகத் தேர்வு செய்யப்பட்டமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.
பெருமிதம் கொள்கிறேன்
உவகையடைகிறேன்.
• வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது பதிவை எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை. “தமிழ்மணம்“ என்னும் திரட்டி குறித்த அறிமுகமும், பயன்பாடுகளும் குறித்து தமிழ்க்கொங்கு ஐயா கணேசன் அவர்களின் வாயிலாகவே அறிந்தேன். அவர்களை இவ்வேளையில் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
• எனது பதிவை தமிழ்மணத்தில் இணைத்தபிறகு பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை 77 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்மணம் வாயிலாக இதுவரை 609 பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஒரே நாளில் 30 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் எனது பதிவைப் பார்வையிட்டனர். அப்போது தான் நான் தமிழ்மணம் திரட்டியின் மதிப்பை அறிந்தேன். அன்றுமுதல் தமிழ்மணம் திரட்டியைப் பெருமதிப்புடன் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் எனது பதிவு இடம்பெறுவதையும், மறுமொழிப்பெட்டியில் எனது பதிவு வெளிவருவதையும் பார்த்து மகிழ்ந்தேன். இவ்வேளையில் என் பதிவை மதித்து என்னை இந்தவார நட்சத்திரமாக்கியுள்ளமை எனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாகவும், என்னை மேலும் எழுதத் தூண்டுவதாகவும் அமைகிறது.
• நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திரும்பிப் பார்க்கிறேன். 120 இடுகைகள் 660 கருத்துரைகள் பல்வேறு இணையதளங்களில் 20 கட்டுரைகள் ஆகியன மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சங்க இலக்கியம் , இணையதளத் தொழில்நுட்பம் ஆகிய பொருள்களில் நான் எழுதிய கட்டுரைகளை உலகத்தமிழர்களுக்குக் கொண்டு சென்றதில் தமிழ்மணம் திரட்டிக்குப் பெரும்பங்கு உண்டு. இத்திரட்டி வாயிலாக வந்த பார்வையாளர்கள் எனக்களித்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள அடிப்படையாக அமைந்தன.
• திரட்டியில் இணைத்தல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தமிழ்மணம் குழுவினர் உடனுக்குடன் மின்னஞ்சல் வழியே தீர்த்துவைத்தனர். அதனால் இவ்விணையதளத்தின் மீது நான் கொண்ட மதிப் அதிகரித்தது.
• பிற திரட்டிகளுக்கு முன்னோடியாகவும், பல புதுமைகளைப் புகுத்திவரும் திரட்டியாகவும், குறிப்பாகத் தமிழுக்கு முதன்மை தரும் திரட்டியாகவும் திகழும் தமிழ்மணத்தில் என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்தமைக்குக் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

44 கருத்துகள்:

  1. கருத்துரைக்கு நன்றி! ஆயில்யன்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் குணா.

    மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்ற உங்கள் வலைப்பதிவு வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் குணா..
    மேலும் பல வெற்றிப்படிகளை ஏறிட வாழ்த்துக்கள் நண்பா..

    பதிலளிநீக்கு
  4. ‘தமிழ்மணம்’ நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் குணா..மேலும் வளர்க உங்கள் தமிழ் தொண்டு...

    பதிலளிநீக்கு
  6. ஐயா, பணிவான வணக்கம். இந்த வார நட்சத்திரமாக தேர்வு பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள். வலைப்பதிவுக்குள் புதிதாக நுழைந்துள்ள எமக்கு தங்கள் வலைப்பூப் பதிவுப் பயணம் மிகவும் நெடும்பயணமாகவே தோன்றுகிறது. பயனுள்ள பல செய்திகள் அடங்கிய உமது வலைப்பூ பதிவுகளை பார்த்து பயன் பெற விழைகிறோம். வாழ்த்துக்கள். புதுக் கவிதைகளைப் பற்றிய செய்திக்களை தொகுத்துத் தந்தால் என் ஆய்வுக்கு உதவியாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இனிய பாராட்டுகள் நண்பரே

    நீங்கள் ஏற்கனவே நட்சத்திரமாக மின்னினாலும் தமிழ்மண நட்சத்திரமாக மேலும் ஒளியுடன் மின்ன வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் முனைவர் குணா.....உங்கள் தமிழ்ப்பணி வளர்பிறைபோல் நாளும் வளரட்டும்....

    பதிலளிநீக்கு
  9. நட்சத்திர வாழ்த்துக்கள்!
    தொடருட்டும் பயணம்!!

    பதிலளிநீக்கு
  10. தமிழ்த் தொண்டாற்றும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ‘தமிழ்மணம்’ நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்! தொடர்ந்து நட்சத்திரமாக மின்னிட!!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் குணா.

    மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்ற உங்கள் வலைப்பதிவு வாசகம் அருமை./
    நன்றி ரவி...

    பதிலளிநீக்கு
  14. /வாழ்த்துக்கள் குணா..
    மேலும் பல வெற்றிப்படிகளை ஏறிட வாழ்த்துக்கள் நண்பா../

    நன்றி சுரேஷ்..

    பதிலளிநீக்கு
  15. /வாழ்த்துக்கள் குணா..
    மேலும் பல வெற்றிப்படிகளை ஏறிட வாழ்த்துக்கள் நண்பா../

    நன்றி சுரேஷ்..

    பதிலளிநீக்கு
  16. ஃநட்சத்திர வாழ்த்துக்கள் :)

    நன்றி சந்தன முல்லை.

    பதிலளிநீக்கு
  17. ஃதமிழ்மணம்’ நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்ஃ

    நன்றி அன்பு..

    பதிலளிநீக்கு
  18. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    நன்றி வால்பையன்..

    பதிலளிநீக்கு
  19. ஃவாழ்த்துக்கள் குணா..மேலும் வளர்க உங்கள் தமிழ் தொண்டு...

    நன்றி தமிழ்...

    பதிலளிநீக்கு
  20. ஐயா, பணிவான வணக்கம். இந்த வார நட்சத்திரமாக தேர்வு பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள். வலைப்பதிவுக்குள் புதிதாக நுழைந்துள்ள எமக்கு தங்கள் வலைப்பூப் பதிவுப் பயணம் மிகவும் நெடும்பயணமாகவே தோன்றுகிறது. பயனுள்ள பல செய்திகள் அடங்கிய உமது வலைப்பூ பதிவுகளை பார்த்து பயன் பெற விழைகிறோம். வாழ்த்துக்கள். புதுக் கவிதைகளைப் பற்றிய செய்திக்களை தொகுத்துத் தந்தால் என் ஆய்வுக்கு உதவியாக இருக்கும். நன்றி.


    புதுக்கவிதை தொடர்பாகத் தங்களுக்காக ஒரு இடுகை இடுகிறேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துகள் நண்பரே.(குமரன்)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  22. அன்பு நண்பரே!

    வாழ்த்துகள்(நட்புடன் ஜமால்)

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  23. இனிய பாராட்டுகள் நண்பரே

    நீங்கள் ஏற்கனவே நட்சத்திரமாக மின்னினாலும் தமிழ்மண நட்சத்திரமாக மேலும் ஒளியுடன் மின்ன வாழ்த்துகள்.(மஞ்சூர் ராஜா)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் முனைவர் குணா.....உங்கள் தமிழ்ப்பணி வளர்பிறைபோல் நாளும் வளரட்டும்....

    ( முனைவர்.கல்பனா)

    நன்றி முனைவரே..

    பதிலளிநீக்கு
  25. நட்சத்திர வாழ்த்துக்கள்!
    தொடருட்டும் பயணம் (மாதவராஜ்)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  26. தமிழ்த் தொண்டாற்றும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!(தேவன்மாயன்)

    நன்றி மருத்துவரே..

    பதிலளிநீக்கு
  27. ‘தமிழ்மணம்’ நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.( செல்வமுரளி)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள்! தொடர்ந்து நட்சத்திரமாக மின்னிட!!(செல்வராஜ்)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  29. பாலசுந்தரவிநாயகத்திடமிருந்து....

    வாத்தியாருக்கிட்ட எனக்கு கொஞ்சம் பயம்தான்.

    நீங்க எப்படி?

    வள்ளுவரைப்பற்றி எங்காவது பதிவு போட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் போடவும். உண்டென்றால், எனக்கு இணைப்புத்தரவும்.

    அந்தாளைப்பத்தி எனக்கு ஒரு ‘இது’.

    என அரசு நாற்காலிக்கு எதிராக நான் மேனோக்கிப்பார்க்கும்போது, அவரது இவ்வரிகளை நன்கு தெரியும்படி பொறித்திருக்கிறேன்:

    ’அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்’

    இப்படி இன்றுவரை அரசுப்பணியில் ஒழுக்கமா வச்சுக்கிறார்.

    வாழ்த்துகள் குணசேகரன் சார். நான் அடிக்கடி எட்டிப்பார்க்கும் வலைபதிவாளருள் தாங்களும் ஒருவர். எனக்கு தமிழ் மேலே ஒரு ‘இது’ எப்போதும்.

    வாழ்க..வளர்க.

    தாங்கள் வளர்ந்தால் தமிழ் வளரும், இருவரும் வளர்ந்தால்தான் நாங்கள் வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  30. திரும்பவும் வாழ்த்துக்கள் ஆசிரியரே. :)

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள்.

    உங்களது கட்டுரைகளை விக்கிபீடியாவிலும் இணைக்க ஆரம்பிக்கலாமே ...

    பதிலளிநீக்கு
  32. வாழ்த்துக்கள் முனைவர் அவர்களே, நீங்கள் மென்மேலும் சிறப்படைய என் நல் வாழ்த்துக்கள் உதிர்த்தாகுக!

    பதிலளிநீக்கு
  33. யாழினிக்கும்
    நாஞ்சில பிரதாப்..

    இருவருக்கும் கருத்துரையளித்தமைக்கு நன்றிகளைத் தெரிவி்த்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  34. guna seela thamilannaikku sella pillaya neenga...rompa nanrippa...thami mothama kotti kitakku enga..

    பதிலளிநீக்கு