பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வியாழன், 25 ஜூன், 2009
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்....
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்.
நெடு 87-88.
இவ்வடிகள் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் நெடுநல்வாடையில் இடம்பெற்றுள்ளன. இவ்வடிகள் வாயிலாக சங்கத்தமிழர்தம் கட்டிடக்கலை மாட்சி விளங்குகிறது.
கோபுர வாயிலானது வெற்றிபெற்ற வீரன் யானையோடு நுழையும் போதும் உயரம், அகலம் போதுமானதாக இருந்தது. அதாவது,
வெற்றிபெற்ற வீரர்கள் மகிழ்வுடன் யானை மீது வருவர். யானையின் உயரம், அமர்ந்திருக்கும் வீரர்களின் உயரம்,கையில் தாங்கிய கொடியின் உயரம் என யாவும் வாயிலில் இடிக்காதவாறு வாயிலானது நல்ல உயரமாகவும் அகலமாகவும் கட்டப்பட்டிருந்தது. அந்த வாயிலைக் காணும் போது மலையைக் குடைந்து கட்டப்பட்டிருந்தது போல இருந்தது.
வாயிலின் சிறப்பே இங்ஙனம் இருந்திருந்தால் மாட மாளிகை, கூட கோபுரங்கள் என எவ்வளவு சிறப்பாக சங்கத்தமிழர் வாழ்ந்திருப்பர் என்று எண்ணத்தோன்றுகிறது.
அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
பதிலளிநீக்குதொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!
ஓட்டும் போட்டாச்சு..
நன்றி நண்பரே............
பதிலளிநீக்குஅற்புதமான வரிகளைத்தேடி தருகிறீர்கள்
பதிலளிநீக்குநன்றி
நன்றி நண்பரே............
பதிலளிநீக்குதமிழை தேடி தேடி தரும் தங்களுக்கு என் நன்றிகள்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி வசந்த்.
பதிலளிநீக்கு