வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 16 ஜூன், 2009

தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டுக்கு மாற்ற.......

தமிழ் நூல்கள் பலவும் இன்று பிடிஎப் வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் பக்கங்களை ஒரே புள்ளியில் அடக்கிவிடுவதாலும், எழுத்துருச் சிக்கலின்றி இருப்பதாலும் இம்முறை மிகுதியான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டு முறைக்கு மாற்றுவதைப்பற்றி சென்ற இடுகையில் தமிழில் பிடிஎப் செய்யலாம் ( இவ்வலைப்பதிவில் இணையதள தொழில் நுட்பம் என்னும் பிரிவில் உள்ளது)
என்ற தலைப்பில் கண்டோம்.

இந்தக்கட்டுரையில் தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை வேர்டு வடிவில் மாற்றுவது பற்றி காண்போம்.

வழிமுறை - 1

கூகுளில் சென்று பிடிஎப் 2 வேர்டு என்று தேடினால் பல இணையதளங்களின் முகவரிகள் கிடைக்கும். அவற்றுள் இலவசமான சேவை வழங்கும் இணையதளங்களைத் தேடிப் பெற வேண்டும். அப்படி ஒரு இலவச சேவை வழங்கும் இணையமாக,
http://hellopdf.com/download.php/


இவ்விணையத்தைக் குறிப்பிடலாம்.

இவ்விணையதளத்திற்குச் சென்று பதிவிறக்க முற்பட்டால் மூன்று பதிவிறக்க முகவரிகள் கிடைக்கும். மூன்றில் எதில் வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். பதிவிறக்கிய பின்பு, அதனை நம் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அப்போது கீழே உள்ளது போல ஒரு பக்கம் தோற்றமளிக்கும்.




இதில் இடது புறமுள்ள பட்டியலில் பிரௌசிங் செய்து நாம் மாற்றம் செய்ய வேண்டிய பிடிஎப் கோப்பினைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு கீழுள்ள பகுதியில் கன்வர்ட் டு வேர்டு என்பதை சொடுக்கினால் நம் கோப்பு மாற்றம் செய்யப்பட்டு திறக்கும். அதனை சேமித்துக் கொள்ளலாம். இம்முறையில் மாற்றம் செய்யும் போது, இன்னொரு சிக்கலும் ஏற்படும். மாற்றம் செய்த வேர்டு கோப்பின் எழுத்துருவில் தான் அக் கோப்பினைப் பயன்படுத்த முடியும். அந்த எழுத்துரு நம்மிடம் இருந்தால் அவ்வெழுத்துரு வாயிலாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் மாறாக அவ்வெழுத்துரு இல்லாத நிலையில் பொங்குதமிழ் எழுத்துரு
(http://www.suratha.com/reader.htm) வாயிலாக நமக்குத் தேவையான எழுத்துருவாக மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.







வழிமுறை - 2

நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பிடிஎப் கோப்பினைத் திறந்து கொள்ளவேண்டும். அதில் I போன்ற வடிவத்தில் உள்ள செலக்ட் டூலின் வாயிலாக நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பக்கங்களைக் காப்பி செய்து கொண்டு அதனை பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி வாயிலாக மாற்றி, பின் அதனைப் புதிய வேர்டு கோப்பாகச் சேமித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

24 கருத்துகள்:

  1. வாவ்.. உண்மையில் பயனுள்ள தகவல் குணசீலன்..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஸ்

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
  4. எனக்கு இந்த பதிவு பற்றி அந்த அளவுக்கு தெரியாது.....இர்ருப்பினும் முயல்கிறேன்.....பயனுள்ள தகவல்..... நன்றி குணா....

    பதிலளிநீக்கு
  5. உபயோகமான தவல் நண்பரே , படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

    பதிலளிநீக்கு
  6. குணா உங்களுக்கு தலத்துக்கு பட்டாம்பூச்சியை பரிசாக அளித்துள்ளது எழுத்தோசை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அப்பாவித்தமிழன்.

    பதிலளிநீக்கு
  8. பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் குணா..

    பதிலளிநீக்கு
  9. பட்டாம்பூச்சி வழங்கிய தமிழரசி அவர்களுக்கு மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்களுக்கு நன்றி சுரேஸ்.......

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள பதிவு!

    என் தளத்தில் தங்களின் படம் திரட்டியில் மின்னிக் கொண்டு இருக்கிறது!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இம்ரான்.........
    நன்றி கபிலன்........

    பதிலளிநீக்கு
  13. அய்யா!"தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டுக்கு மாற்ற..படித்தேன்.மிக்க பயனுள்ள தகவல்.ஆனால் இணைய இணைப்பு இல்லாத நேரங்களிலும் மாற்றுவதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள்.அதாவது மென்பொருள் இருந்தால் பகிருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. http://hellopdf.com/download.php/
    இந்த இணைப்பு இணைய இணைப்பின்றி செயல்படக்கூடியது தான் நண்பரே...
    வழிமுறை -1 ன்படி

    இம்மென்பொருளை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவி மேற்சொன்ன வழிமுறை வழியே பயன்படுத்தலாம்.. .

    பதிலளிநீக்கு
  15. அய்யா!நான் அந்த மென்பொருளைச் சொல்லவில்லை.pdf ல் உள்ளவற்றை copy செய்து பொங்கு தமிழில் paste ெய்யவேண்டும் எனச் சொன்னீர்களே,அந்த பொங்குதமிழை இணைய இணைப்பு இல்லாமல் பெறுவது எப்படி எனக் கேட்டேன்

    பதிலளிநீக்கு
  16. பொங்கு தமிழை இணைய இணைப்பில் தான் பயன்படுத்தியுள்ளேன்...
    அதனை இணைய இணைப்பின்றிப் பயன்படுத்த முடியாது.

    ஆனால் இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்றம் செய்ய இணையத்தில் பல எழுத்துரு மாற்றிகள் உள்ளன..

    தங்களுக்காக அப்படியொரு இடுகையை விரைவில் எழுதுகிறேன்..

    பதிலளிநீக்கு