பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 8 ஜூன், 2009

பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.

விளையாட்டு என்றவுடன் கிரிக்கெட், கால்ப்பந்து, டென்னிஸ் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது.
ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது.

பணத்துக்காக விளையாடுகிறார்கள் – பணம் விளையாடுகிறது.

உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?
சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.


விளையாட்டு என்றால் என்ன?
இவை மட்டும் தான் விளையாட்டுகளா?


o விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது.
o பழந்தமிழர் ( ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். அவ்விளையாட்டுக்களை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.



1.அசதியாடல்(இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல்

2.அம்புலி அழைத்தல்(இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல்

3.அலவன் ஆட்டல்(இருபாலர்) நண்டைப் பிடித்து விளைளயாடுதல்

4.உலாவல்(இருபாலர்) இயற்கையான சூழலில் நடந்து செல்லுதல்

5.ஊசல்(இருபாலர்) மரத்தில் கயிறு கட்டி முன்னும் பின்னும் ஆடி விளையாடுதல்

6.எண்ணி விளையாடல்(இருபாலர்) ஒன்று,இரண்டு என்று மரத்தையோ,நாவாயையே,விலங்குகளையோ எண்ணி பொழுது போக்காக ஆடுதல்.

7.எதிரொலி கேட்டல்(பெண்) மலைப்பகுதிகளில் ஒலி எழுப்பித் திரும்பிக் கேட்கும் ஒலி கேட்டு விளையாடுதல்.

8.ஏறுகோள்(ஆண்) மாடு பிடித்தல். இன்று ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் வலிமையான மாட்டைப் அடக்குபவனையே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’

என்கிறது கலித்தொகை வலிமையான காளையை அடக்கிய ஆடவனையே சங்க காலமகளிர் திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு காளையை அடக்க முடியாத ஆடவனை அடுத்த மறுபிறவியிலும் விரும்ப மாட்டேன் என்கிறாள் இந்தப் பெண்.

9.கண் புதைத்து விளையாடல்(பெண்) இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

10.கவண்(பெண்) கிளைத்த கம்புகளில் வாரைக்கட்டி அதில் கல்லை வைத்து எறிந்து விளையாடுதல்.

11.கழங்கு(பெண்) சொட்டாங்கி என்று கிராமங்களில் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.

12.குதிரையேற்றமும், யானையேற்றமும்(ஆண்)
குதிரை, யானை ஆகியவற்றை அடக்குவதாகவும், தம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் இவ்விளையாட்டு அமைந்தது.

13.குரவை(பெண்) இது ஒரு வகையான கூத்து. பெண்கள் ஆடுவது மரபு.

14.சாம விளையாட்டு(ஆண்) இரவில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு.

15.குறும்பு விளையாட்டு (இருபாலர்) நகைச்சுவையாக விளையாடுவது.

16.சிறுசோறு(பெண்) பெண்கள் சோறு சமைப்பது போல விளையாடுவது.

17.சிறுதேர்(ஆண்) முக்காற்சிறு தேர் உருட்டி விளையாடுவது.

18.சிறுபறை(ஆண்) பறை என்பது தோலால் ஆன இசைக்கருவி. இதனை இசைத்து மகிழ்வது இவ்விளையாட்டாகும்.

19.சிற்றில் சிதைத்தல்.(ஆண்) பெண்கள் கட்டிய சிறு வீட்டை ஆண்கள் இடித்து விளையாடுவது.

20சுண்ண விளையாட்டு(பெண்) நறுமணம் வீசும் பல நிறப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது.

21.சூது(இருபாலர்) ஏதாவது ஒரு பொருளை ஈடாக வைத்து விளையாடுவது.

22.செடி கொடி வளர்ப்பு(பெண்) சங்க கால மக்கள் இயற்கையாயோடு இயைபுற்று வாழ்ந்தார்கள். செடி கொடி வளர்ப்பதையே பெண்கள் ஒரு விளையாட்டாகச் செய்தனர்.

23.நீர் விளையாட்டு(இருபாலர்) நீரில் குதித்து விளையாடுதல், அங்கு வரும் நண்டுகளைப் பிடித்து விளையாடுதல்.

24.பந்து(இருபாலர்) பந்தினை வைத்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.

25.பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச்

செய்தலும்
(இருபாலர்)

மொழியின் தோற்றக்கூறுகளுள் போலச் செய்தலும் ஒன்றாகும். சங்ககாலத்தில் பெண்கள் பறவைகளைக் கண்டு அவற்றின் ஒலியைப் போலச் செய்து மகிழ்ந்தனர்.

26.பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்(பெண்) பறவை, விலங்குகளை வளர்ப்பதை சங்க கால மகளிர் ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

27.பறவை விலங்குகளுடன் விளையாடுதல்(இருபாலர்) பறவை, விலங்குகளோடு விளையாடுவதை இருபாலரும் விளையாட்டாகக் கொண்டனர்.

28.பாவை விளையாட்டு(பெண்) பொம்மை போல செய்து விளையாடுவது.

29.பிசி நொடி விளையாட்டு(பெண்)
விடுகதை கூறி விளையாடுவது.

30.மணற்குவியலில் மறைந்து விளையாடல்(பெண்)
பெரிய மணற்குவியல்களில் மறைந்து ஒருவரை ஒருவர் கண்டு விளையாடினர்.

31.மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்(பெண்)
பல விதமான மலர்களையும் கொய்து மாலையாக்கி மகிழ்ந்தனர்.

32.மல்(ஆண்) ஆடவர் இருவர் ஒருவரை ஒருவர் தம் வலிமையால் அடக்க முற்படுதல் இவ்விளையாட்டின் அடிப்படையாகும்.


33.வட்டு (ஆண்)
வட்டமான இரும்பு போன்ற பொருளை எறிந்து விளையாடுதல்.

34.வள்ளை(பெண்)
பெண்கள் கூடி பாடல் பாடி ஆடுவது இவ்விளையாட்டின் பண்பாகும்.

35.வில் விளையாட்டு(ஆண்)
நரம்பால் செய்த வில்லை குறிவைத்து எறிந்து விளையாடுவது. வில்லில் இருந்து எழுந்த ஒலியே யாழ் என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமானது. யாழுள் வில்யாழ் என்னும் ஒரு யாழும் உண்டு.

36.வேட்டை. (ஆண்)
விலங்குகளை வேட்டையாடித் தம் வீரத்தை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது.


இவ்விளையாட்டுகள் பல பிற்கால வளர்ச்சியாகப் பல சிற்றிலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளன.
• சிற்றில் சிதைத்தல்,சிறுதேர், கழங்கு,ஊசல் ஆகியன பிள்ளைத்தமிழில் பருவங்களாக இடம் பெற்றுள்ளன. உலாவர் உலா என்னும் சிற்றிலக்கியமாக வளர்ந்துள்ளது.

சங்கத்தமிழர்கள் விளையாட்டு சில நிகழ்கால வாழ்விலும் வழக்கில் உள்ளன.

• ஏறுகோள் இன்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்று வழங்கப்பட்டு வருகிறது.
• பிசி,நொடி விளையாட்டை இன்ற வினாடி வினாவாக வழங்கி வருகிறோம்.

பழந்தமிழர்கள் பறவை,விலங்கு வளர்ப்பு என விளையாடிய விளையாட்டுகள் வாயிலாகத் இயற்கையைப் போற்றி வளர்த்தனர்.சுற்றுச் சூழலைக் காத்தனர். நாமோ இதையெல்லாம் மறந்ததால் தான் இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

பழந்தமிழரின் விளையாட்டுச் சுவடுகள் இன்றும் பல வடிவங்களில் உள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் நூலைக் காணலாம்.


சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்
சு.சிவகாமசுந்தரி
நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
41.பி சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்
சென்னை

1995
விலை 40
பொருளடக்கம்
முன்னுரை.
சங்க இலக்கிய விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் இருபாலர் விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் ஆண்பாலர் விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் பெண்பாலர் விளையாட்டுக்கள்.



• பழந்தமிழர்கள் விளையாட்டுகள் வாயிலாக தம் உடல், மனநலத்தையும் காத்து, இயற்கையையும் போற்றி வாழ்ந்தமை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

43 கருத்துகள்:

  1. அப்பப்பா.. இத்தனை விளையாட்டுகளா? நல்ல அறிமுகம் பார்ரட்டுகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தொகுப்பு நண்பரே!

    ஒரு சின்ன ஆலோசனை. உங்களுடைய இணையத்தை எட்டிப் பார்க்கும் போது பெரும்பாலான சமயங்களில் "operation aborted" என வருகிறது. Followers, மற்றும் LiveJIT traffic feed ஐ எடுத்து விடுங்கள். Traffic monitor செய்ய www.statcounter.com போன்ற வேறு வகைகளில் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி கபிலன் விரைவில் மாற்றுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

    Top Tamil Blogs

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்கள்

    நன்றி.
    தமிழர்ஸ் டாட் காம்.

    பதிலளிநீக்கு
  5. //
    நண்டைப் பிடித்து விளைளயாடுதல்
    //
    நாங்க நண்டை பிடிச்சா அப்புறம் அது கொழம்புலதான் கொதிச்சுட்டு இருக்கும்..

    பதிலளிநீக்கு
  6. இத்தனையையுமா நாம் இழந்திருக்கின்றோம் ...

    பதிலளிநீக்கு
  7. ஆம் இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம்

    பதிலளிநீக்கு
  8. விளையாட்டுகள் தொகுப்பு நன்று.தமிழர் விளையாட்டுகள் பல மறைந்து வருவது கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. கருத்துரைக்கு நன்றி முனைவர்.கல்பனா.
    பழந்தமிழர் விளையாட்டுக்கள் பல பெயரளவில் கூட அறியப்படாமல் உள்ளது வருத்தமளிப்பதாகத் தான் உள்ளது மருத்துவரே.(தேவன்)

    பதிலளிநீக்கு
  10. அப்பப்பா....படிக்கும் போதே மூச்சு வாங்குகிறது...

    அன்றைய ஆட்களின் உடல் பலத்திற்க்கு உணவு மற்றும் இது போன்ற விளையாட்டுக்கள் கூட ஒரு மிக்கிய காரணம் எனக்கூறலாம் போலும்.....

    பதிலளிநீக்கு
  11. அருமையான தகவல்கள்...

    4.உலாவல் - என்பது ஒருபாலாக இருப்பின் விளையாட்டில் சேராதுதானே?

    தயவுசெய்து என் சந்தேகத்தைத் தீர்க்கவும்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி ஊர்சுற்றி

    /4.உலாவல் - என்பது ஒருபாலாக இருப்பின் விளையாட்டில் சேராதுதானே?/

    ஒருபாலாக இருப்பினும் தனி நபர் விளையாட்டில் சேர்க்கலாம் இல்லையா.........

    பதிலளிநீக்கு
  13. நான் என்ன நினேச்சேன்னா...
    ஒரு ஆணும் பெண்ணும் உலவச்செல்லும்போது - ஏதாவது குசும்பு செய்து கொண்டு செல்வதால் அது விளையாட்டு என்னும் வகைப்படுத்தலில் வந்துள்ளது. ஆனால் தனியாகச் செல்லும் போது சேட்டை செய்ய ஆளிருக்காது - எனவே அதை விளையாட்டில் சேர்க்க முடியாது. (எப்படி என் விளக்கம்?!!! ))) )

    பழந்தமிழர் தனியாய் உலவுவதிலும் ஏதேனும் விளையாட்டைக் கண்டுபிடித்து வைத்துள்ளார்களா? தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. தங்கள் ஆர்வம் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே......
    விளையாட்டு என்பதே மனம் மகிழ்வுக்காகவும், மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதற்காகவும் தான் உருவானது. அந்த அடிப்படையில்

    உலாவுதல் என்பது மன அழுத்தம் நீங்கவும், மனம் புத்துணர்வு பெறுவதற்காகவும் பயன்பட்டது..

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல தொகுப்பு முனைவர் ஐயா. அசதியாடல், அலவன் ஆட்டல் இரண்டும் எனக்குப் புதியவை.

    'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்ற கலித்தொகை வரிகள் முல்லை நிலத்தவரான ஆயர் குலத்தில் பிறந்த பெண்ணைத்தானே சொல்கிறது? இதனை 'சங்க கால மகளிர் அனைவருக்கும்' பொதுமையாக்க வேண்டுமா ஐயா? சில நேரங்களில் இப்படி பொதுமையாக்கப்படுபவை தான் உண்மை என்று மற்றவர் எண்ணி அதனைப் பரப்புகின்றனர். பாடலின் வரியினை மறந்து உரையில் இருப்பதை மட்டும் உண்மை என்று எடுத்துக் கொள்கின்றனர். உங்களைப் போன்ற அறிஞர்கள் இவ்வாறு பொதுமைப்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும்; சங்க கால பாடல் வரிகள் சொல்வதைத் தனியாகவும் அதன் மூலம் நாம் உய்த்துணர்வதைத் தனியாகவும் சொல்ல வேண்டும். அப்போது தான் தேவையற்ற உண்மைக்குப் புறம்பான பெருமிதங்கள் ஒழியும். (நீங்கள் தான் இப்பகுதியை எழுதினீர்கள் என்ற எண்ணத்தில் சொல்கிறேன். இந்தப் பகுதி நீங்கள் அடியில் குறித்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்).

    பதிலளிநீக்கு
  16. /சங்க கால பாடல் வரிகள் சொல்வதைத் தனியாகவும் அதன் மூலம் நாம் உய்த்துணர்வதைத் தனியாகவும் சொல்ல வேண்டும். அப்போது தான் தேவையற்ற உண்மைக்குப் புறம்பான பெருமிதங்கள் ஒழியும்./

    நல்ல கருத்து நண்பரே தாங்கள் சொல்வது உண்மைதான்.

    விளையாட்டுக்கள் பற்றிய தலைப்பு மட்டுமே நூலிலிருந்து எடுக்கப்பட்டது. அதன் கருத்துக்கள் நான் எழுதியது தான்.

    'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்ற கலித்தொகை வரிகள் முல்லை நிலத்தவரான ஆயர் குலத்தில் பிறந்த பெண்ணைத்தான் குறித்தது. அதில் எவ்வித ஐயமும் இல்லை.

    சங்க காலத்தில் நில அடிப்படையில் இருந்த ஏறு தழுவுதல் பிற்காலத்தில் பொதுவாகத்தான் மாறிப்போனது.


    இன்று கூட ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் ஏறுதழுவுதல் பொதுவாகத்தானே வழங்கப்படுகிறது.


    ஆயினும் தாங்கள் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது. கால வெள்ளத்தில் இது போன்ற மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தங்கள் சிந்தனை மகிழ்வளிப்பதாக உள்ளது.
    நன்றி நண்பரே.......

    பதிலளிநீக்கு
  17. இவையெல்லாம் விளையாட்டுப் போட்டிக்கு போக முடியாது தானே?
    கிட்டிப் பிள், கிளித் தட்டு என்று நிறையக் கேள்வி.

    பதிலளிநீக்கு
  18. நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. விளையாட்டு பற்றிய பதிவு சிறப்பு நானும் வளையாட்டு பற்றி ஒரு நூல் எழுதியுள்ளேன் கிராமத்து விளையாட்டுகள் 25 முடிந்தால் பருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிசங்கர்.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முனைவர் .இரத்தின புகழேந்தி .......அவர்களே.....
    தங்கள் வலைப்பதிவையும் பார்த்து மகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  22. அருகி வரும் விளையாட்டுக்களை நினைவூட்டியமையும், அது பற்றிய நூல் அறிமுகமும் பாராட்டுக்குரியது. ஊஞ்சல் ஆடுவது மன அழுத்தத்தை குறைக்குமாம்.

    பதிலளிநீக்கு
  23. இத்தனை விளையாட்டுகளா? நல்ல தொகுப்பு

    பதிலளிநீக்கு
  24. பழந்தமிழர்களால் விளையாடப்பட்டு தற்போது மறந்து போய்விட்ட விளையாட்டுகள் பற்றிய அருமையான கட்டுரை பதிவு.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. எத்தனை எத்தனை விளையாட்டுகள்... நமது தமிழ்நாட்டில் இத்தனை விளையாட்டுகள் இருந்தும் அது எதுவும் தெரியாமலேயே இருந்து விட்டோம் எனத் தோன்றுகிறது. மிக்க நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  26. அடேங்கப்பா! எத்தனை விளையாட்டுகள்!..எத்தனை இல்லாமலே போகிறது. கிராமப்புற வாழ்வில் சிலவற்றைக் காணலாம் . மிக நல்ல பதிவு. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. அருமையான பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  28. @kovaikkavi வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இலங்கா திலகம்.

    பதிலளிநீக்கு
  29. ஐயா , நாம சின்ன பிள்ளைகளாய் இருக்கும் பொது விளையாடின அநேகம் விளையாட்டுகள் இப்பொழுது மறைந்து விட்டன. சங்க காலத்தின் விளையாட்டுகளை கேள்விப்படும் போது ஆச்சரியமாய் உள்ளது .

    பதிலளிநீக்கு