வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 2 மே, 2009

சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.

தமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே........
இணையத்தில் இன்றைய நிலையில் மூல நூல்கள் நிறைவாகக் கிடைக்கின்றன. ஆய்வு நூல்கள் குறைவு . பிடிஎப் வடிவிலோ, எச்.டி.எம்.எல் வடிவிலோ இக்கட்டுரைகளை வெளியிட்டால் தமிழாய்வு மேலும் வளரும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.
(http://74.220.219.81/~noolaham/project/02/175/175.htm?uselang=ta
/
/" )

இது நூலகத்தின் இணைய முகவரியாகும். இங்கு எட்டு அரிய ஆய்வுக்கட்டுரைகள் html வடிவில் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற பதிவுகள் இன்னும் வளரவேண்டும்.

நூல் விபரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.
இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது.

சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.


பதிப்பு விபரம்


சங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.

4 கருத்துகள்:

  1. தமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே....///

    நல்ல பணி! நல்ல கருத்து!! செய்தால் பயனாக இருக்கும்!!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.///

    அரிய தகவல்!! தொடர்ந்து இதுபற்றி எழுதவும்!!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.........

    பதிலளிநீக்கு