பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

தமிழர் தோற்கருவிகள்



ஆர்.ஆளவந்தார்

தமிழிசை சங்க காலத்திலேயே சிறப்பாக வளர்ச்சி பெற்று விளங்கியது. தமிழிசையின் அடிப்படையாக இருந்த கருவியிசையை நரம்பு, தோல், துளை, கஞ்சம் என நான்காகப் பகுப்பர். குரலிசையையும் சேர்த்து ஐந்தாகக் கூறும் மரபு உண்டு.
தோற்கருவிகள் சங்க காலத்தில் மிகுதியான பயன்பாட்டில் இருந்தன. போர்,வேளாண்மை,கூத்து,அறிவிப்பு என பல நிலைகளில் தோற்கருவிகளைப் பயன்படுத்திவந்தனர். அசுணமா என்னும் உயிரியை யாழிசைத்து வரவைழைத்து பறையறைந்து கொல்வார்கள் என சங்க இலக்கியம் வழி அறியமுடிகிறது. இவ்வாறு பல நிலைகளில் பயன்பட்ட தோற்கருவிகளைப் பற்றிய விரிவான ஆய்வாக “தமிழர் தோற்கருவிகள்” என்னும் ஆய்வு நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

தோற்கருவிகள் ஓர் அறிமுகம்
தோற்கருவிகளுக்கு ஏற்ற தோல்
தோற்கருவிகளுக்கு ஏற்ற மரங்கள்
பஞ்ச மரபில் கூறப்படும் செய்திகள்
அட்டவணை
அடியார்க்கு நல்லார்
கருவிகளைப் பற்றிய விளக்கக் குறிப்புகள்
என அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
அடையாறு சென்னை
நூல் வெளியான ஆண்டு – 1981

2 கருத்துகள்:

  1. குணா அவர்களே...
    நீங்கள் அளிக்கும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவை தொடர்ந்தால் தினம் ஒரு தகவல் அடிப்படையில் கோர்வையாய் பல நல்ல அறியாத தகவல்கள் அறியலாம் நன்றி...மற்றும் நிங்கள் நான் இங்கு ஒரு ப்லொக் முகவரி தருகிறேன் அவரும் உங்களைப்போல ஒரு விரிவுரையாளர் நிங்கள் இருவரும் நட்பானால் இன்னும் நலம் மற்றும் மேலும் பல நல்ல கருத்துக்கள் பரிமாறவாய்ப்புண்டு இது நீங்கள் விரும்பினால் மட்டுமே... நன்றி..இங்ஙனம் தமிழரசி
    ponniyinselvan-mkp.blogspot.com காணவும்..

    பதிலளிநீக்கு
  2. மகிழ்சி தமிழ் நல்ல அறிமுகம்..
    சென்று பார்த்தேன் நண்பரானோம்..

    பதிலளிநீக்கு