மானம் என்றால் என்ன என்று பல மாக்களுக்குத் தெரியவில்லை.அத்தகைய மாக்களை நம் வாழ்க்கையில் பல சூழல்களில் காண்கிறோம். அம்மாக்களைக் காணும் போது இப்பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன.
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று(புறநானூறு -204)
இது சங்க கால மரபு
பிச்சை கேட்பது இழிவானது.அவ்வாறு கேட்பவர்க்கு இல்லை என்று கூறுவது அதைவிட இழிவானது. ஒருவரிடம் பொருளை கொள் எனக் கொடுத்தல் உயர்வானது.அவ்வாறு கொடுப்பவரிடம் கொள்ளேன் எனக் கூறுவது அதைவிட உயர்வானது.என்பது இவ்வடிகளின் பொருளாகும்.
பிச்சை எடுத்தலைவிட இழிவான செயல் ஒன்று உலகத்தில் உள்ளதா?
உள்ளது என்கிறார் ஔவையார்,
(மானமே உயிரினும் சிறந்தது)
14. பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்
என உரைக்கிறார்.
பிச்சை எடுத்து உடல் வளர்ப்பதே இழிவானது.அதைவிட இழிவானது ஒருவரைப் புகழ்ந்து அவர்களின் கீழ் நெருங்கி வாங்கி உண்டு வயிறு வளர்ப்பதாகும். சிச்சீ-சீ சீ இப்படி வயிறு வளர்ப்பதை விட உயிரை விடுதல் மிகவும் மேலானது என்கிறார்.
நன்றி. தமிழ் அறிஞர்களது படக்கோர்வையும் அருமை. வணக்கம்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி
பதிலளிநீக்குவீண்புகழ்ச்சியால் யாசித்து உண்ணும்
பதிலளிநீக்குபழக்கம் நரவல் உண்பதற்கு சமம்.
அற்புதமான விளக்கக் கட்டுரை முனைவரே.
Nandru.... ungal eluthukkalai vaasikka aarambithu irukiren..
பதிலளிநீக்குNeenga T.CODE thana.. i was there in sanakri for 21 years... !!!! ksr !!!!!!
பதிலளிநீக்குசொந்த ஊர் சிவகங்கை மாவட்டம்
பதிலளிநீக்குகல்லல் என்னும் கிராமம் குணா..
பணி நிமித்தம் இங்கு கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டுகளாக உள்ளேன்..
ஈரோட்டில் தான் வசிக்கிறேன்.
வருகைக்கு நன்றி.