ஒரு மனிதனின் உடலில் மூன்று எறும்புகள் ஊர்ந்து சென்றன. அவை அம்மனிதனின் மூக்கில் சந்தித்துப் பேசிக்கொண்டன. முதல் எறும்பு சொன்னது, நான் என் வாழ்க்கையில் சந்தித்த பாலைவனத்திலேயே மிகப் பெரிய பாலைவனம் இதுதான் எங்கும் ஒரே வறட்சி என்றது.இரண்டாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய மலை இதுதான் பெரிய பெரிய மேடு பள்ளங்கள் என்று கூறியது.மூன்றாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய காடு இதுதான் அடர்ந்த மரங்கள் எங்கெங்கும் இருந்தன என்று சொன்னது அப்போது அம்மனிதன் திரும்பிப் படுக்கும் போது தன் மூக்கை தேய்த்துக் கொண்டான்.அப்போது அந்த மூன்று எறும்புகளும் இறந்து போயின .........
இது எப்போதோ படித்த ஜென் கதை.
இந்த கதை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
நான் பெரியவன் என்ற எண்ணம் எனக்கு வரும்போதும், யாராவது தன்னைப் பெரியவன் என்று கூறுவதைப் பார்க்கும்போதும் இக்கதையைத்தான் எண்ணிக்கொள்கிறேன்.
இந்தக்கதையில் வரும் எறும்புகள் பேசியது எல்லாமே தவறானவை தான். என்றாலும் அவை சாகும் வரை தாம் பேசியது தவறு என்று தெரிந்து கொள்ளவில்லை.தனக்குத் தெரிந்தது தான் சரி என்று எண்ணிக்கொண்டன.அந்த எறும்புகள் போலத் தான் மிகப்பெரிய பூமிப்பந்தில் மனிதர்கள் என்பவர்கள் எறும்புகளை விட சிறிய உயிரினங்கள் என்பது ஏனோ நமக்குப் புரியாமல்ப் போகிறது.
\\அவை சாகும் வரை தாம் பேசியது தவறு என்று தெரிந்து கொள்ளவில்லை.தனக்குத் தெரிந்தது தான் சரி என்று எண்ணிக்கொண்டன.\\
பதிலளிநீக்குநிறைய பேர் இப்படித்தான், உணர்ந்தால் நம் சமுதாயம்
முன்னேற்றமடையும்.
வாழ்த்துக்கள்....
ம்ம்ம்ம்ம் நல்லாதான் இருக்கு
பதிலளிநீக்கு