கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பார்வையிட முடியுமா?
முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்......
“கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பயன்படுத்தும் புதிய கருவி ஒன்றை அய்தராபாத் அய்சிப் நிறுவனப் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். “அட்பாக்ஸ்” எனப் பெயரிட்டுள்ள இக்கருவியைத் தெலைக்காட்சிப் பெட்டியில் பொருத்திவிட்டு இணையத் தேடலில் ஈடுபடலாம். விசைப்பலகை(keyboard) விசைப் பந்து (track ball) ஆகியவற்றுடன் இந்த அட்பாக்ஸ் கருவி ரூபாய் 6990 க்கு விற்கப்படவுள்ளது. உலகிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கருவியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 2500க்கு அளித்திடவுள்ளதாக அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.“
(நன்றி-உண்மை- ஏப்ரல் 1-15-2009 பக்கம் 43)
நல்ல தகவல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
இந்த பிரிண்டவுட், டவுன்லோட், டோரண்டு இதெல்லாம் இதில் எப்படிங்க.
பதிலளிநீக்குவிலை மலிவாக உள்ளது. பாட்டு, படம் எல்லாம் ஓடுமா?
டோரண்டை வைச்சுதான் இங்கே பல பேர்களின் பிழைப்பு ஓடிக்கிட்டு இருக்குது.
தகவலுக்கு நன்றிங்க
இணையதள தேடலுக்கு என இதனை வடிவமைத்துள்ளனர். நம் தேவைகளுக்கு ஏற்ப அதன் வளர்ச்சிப் படிநிலைகைள் அமையும்....
பதிலளிநீக்குநல்ல விடயம்.
பதிலளிநீக்குஇங்கு 2 வருடம் முன்பாக தொலைக்காட்சிப்பெட்டியிலேயே இணையம் பார்க்கும் வசதியை inbuild ஆக விற்றார்கள். சாதாரண தொ.கா பெட்டியைவிட 3000ரூபாய் அதிகம்.
ஆனால் அது வெற்றிபெறவில்லை.
ஒரு வேளை அந்நேரம் அகலப்பட்டை இணைப்பு கிடைக்காததாலிருக்கலாம்.