உன்னைப் புகழும்போது செவிடனாக
இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!
என்றொரு பொன்மொழி
உண்டு..
புகழ் ஒரு போதை!
இன்னும் இன்னும் என்று நம்மை மதிமயக்கி நம் வளர்ச்சியைத் தடுப்பது அதனால்தான் நம்மைப்
புகழும்போது நாம் செவிடனாக இருக்கவேண்டும்!
நாம் இகழப்படும்போது
நம்மை நாம் தன்மதிப்பீடு செய்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ள துணைநிற்கும் அதனால்
தான் நாம் அப்போது ஊமையாக இருக்கவேண்டும்!
புகழ்ச்சி
என்றால் பெருவிருப்பம் கொள்ளும் மனிதமனம் இகழ்ச்சி என்றால் சினம்கொள்கிறது.
வாழும்போதும்
வாழ்க்கைக்குப் பிறகும் புகழ்பெற்றிருக்கவேண்டும் என்றே யாவரும் எண்ணுகிறோம் அதற்கு
வள்ளுவப்பெருந்தகை கூறும் கருத்துக்களையும், சங்கச் சான்றோர் சொல்லும் அறிவுரைகளையும்
காண்போம்.
புகழ்
என்னும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறும் கருத்துக்கள் சிந்திக்கத்தக்கன.
வறியவர்க்கு
ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும்.அப்புகழ்
அல்லாமல் உயிர்க்கு ஊதியம் ஏதுமில்லை என்பதை,
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
-231
உயர்ந்த
புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை
என்ற கருத்தை,
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்
-233
என உரைப்பார்.
ஒரு
துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்றவேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர்
அங்கு தோன்றுவதைவிட தோன்றாமலிருப்பது நல்லது என்ற கருத்தை,
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதில்லார்
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று -236
என்பார்.
தமக்குப்
புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மை நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்பவரை நொந்துகொள்ளக்
காரணம் என்ன? என்று கேட்கிறார். இதனை,
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? -237
தாம்
வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர். புகழ் உண்டாகாமல்
வாழகின்றவரே உயிர்வாழாதவர் என்ற கருத்தை,
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே
வாழா தவர் -240
என்ற திருக்குறள் சுட்டுகிறது.
புகழ் குறித்த சங்கஇலக்கியப் பொன்மொழிகள்
அருமையான படைப்பிற்கு பாராட்டுக்களும் என் இனிய சித்திரைப்
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர்
அனைவருக்கும் .வாழ்க வளமுடன் .
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா
நீக்குபுகழின் சிறப்பைத் தொகுத்துத் தந்தவிதம் அருமை
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா
நீக்குஅருமையான குறள்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் .என்றும் சிறந்த வாழ்வு உங்கள் வசம் இருக்கட்டும்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி வல்லிசிம்ஹன்
நீக்குஇனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசிறப்பான குறள்கள்...
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தெரிந்த குறள்களைக்கொண்டே எளிமையாக விளக்கிவிட்டீர்கள் ஐயா. உங்கள் வலைப்பக்கம் மிகவும் அருமை. இனி தொடருவேன்!!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்குஅருமையான குறள்களும் கருத்துக்களும் ஐயா...
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்கு