“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்” (திருக்குறள் 393)
புண்ணுடையர் கல்லாதவர்” (திருக்குறள் 393)
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”,
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
“உதடுகள் பொய்சொல்லும்.. கண்களுக்குப்
பொய்சொல்லத்தெரியாது“
என்றெல்லாம்
கண்கள் குறித்து சான்றோர்கள் சொல்லிச்சென்றுள்ளனர்.
“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணமல்
செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப்
போட்டுச்செல்வதைக் காணும்போதும்..
சாலையில்
அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர்
இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.
மனது
கேட்கிறது உனக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால்
என்ன? என்று..
கண்கள்
குறித்த அனுபவமொழிகளுள் நீதி வெண்பாவில் சொல்லப்பட்ட செய்திகள் புதுமையானதாக
இருந்தன. அதைப் எடுத்தியம்புவதே
இவ்விடுகையின் நோக்கம்..
“எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள்!
படித்த அறிவாளிக்கு இருப்பன
மூன்றுகண்கள்!
உதவிசெய்யும் கொடையாளிக்கு இருப்பன
ஏழுகண்கள்!
தவத்தால் அருள் அறிவைப் பெற்ற
சான்றோருக்கு இருக்கும் கண்கள் பல!“
இவைதான் அந்தப் பாடல் தரும் கருத்து.
எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள் தான்..
அவை சிலருக்குத் தெரிகின்றன!
சிலருக்குத் தெரிவதில்லை!
அறிவாளிகளுக்கு ஞானக்கண் என்ற
மூன்றாவது கண் இருப்பதை உணரமுடிகிறது!
உதவி செய்யும் வள்ளல்களுக்கு
ஏழுகண்கள் என்ற கருத்து அவர்கள் உயிர்களின்மீது
கொண்ட அன்புடைமையைக் காட்டுவனவாக உள்ளன!
தவத்தால் அருள் அறிவைப் பெற்றோருக்கு பலகண்கள்! உண்டென்கிறது
இந்தப் பாடல்.
அன்று முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் சென்று
தவம்செய்தார்களாம்.அதனால் வரம்கிடைததாம்.
இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும்,
அலுவலகங்களிலும், கடைகளிலும்..
இன்னும்.. இன்னும்...
எங்கெங்கோ தவம் இருக்கிறோம்..
பணம் என்னும் வரத்துக்காக.
அதனால் நமக்கு இருக்கும் கண்கள் எத்தனை என்பதும், எதற்கு என்பதும்
நமக்குத் தெரிவதில்லை.
இன்றைய சூழலில் நிறையவே கண்மருத்துவமனைகள் வந்துவிட்டன.
அவையெல்லாம் நமது கண்களின் உட்பிரிவுகளை ஆராய்ந்து
பார்வைத்திறனைச் சரிசெய்கின்றன. ஆனால்..
இந்த இலக்கியங்கள் சுட்டுவதுபோல..
நமக்கு எத்தனை கண்கள் இருக்கின்றன..?
அவை எதற்குப் பயன்படுகின்றன?
அகஇருளைப் போக்கும் ஆற்றல் கண்களின் எந்தப்பகுதியில் உள்ளது?
என்பதெல்லாம் இன்றைய கண்மருத்துவர்கள் அறியாத புதிராகவே உள்ளது.
அதனால் இப்போதெல்லாம்..
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
எனக்கு எத்தனை கண்கள்? என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது? என்று
//எண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது? என்று// !!!!!?.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே.
நீக்குஇப்போது உடல் முழுவதும் கண்கள் உள்ளன...
பதிலளிநீக்குஐம்புலன்களும் ஒன்றை மட்டும் நோக்குகின்றன ---> பணம்....
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...
tm3
baalan sako!
நீக்குnalla vilakkam!
அழகாகச் சொன்னீர்கள் தனபாலன்
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி சீனி.
nalla pakirvu ayya!
பதிலளிநீக்குநன்றி கவிஞரே.
நீக்கு// எண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்? என்று
பதிலளிநீக்குஎண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது? என்று //
உங்கள் தொண்டுள்ளம் வாழ்க!
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று
- பாடல்: கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)
சரியான ஒப்பீடு.
நீக்குநன்றி நண்பரே
கண்களை பற்றிய கண்ணான பதிவு! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குநல்லதொரு தகவல்.நாமும் கண் தானம் செய்யலாமே.
பதிலளிநீக்குநன்றி தொழிற்களம் குழு.
நீக்குநாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது..................?
பதிலளிநீக்குநன்றி தம்பி.
நீக்குஇயல்பான எளிமையான சிந்தனைகளில் படிக்கும் மனத்தினை சிந்திக்க வைக்க கூடிய வலிமை இவ்வரிகளுக்கு உள்ளது முனைவரே
பதிலளிநீக்குநன்றி அரசன்.
நீக்குகண்கள் குறித்த கருத்தான பதிவு
பதிலளிநீக்குபகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி அன்பரே
நீக்குகண்ணான பதிவு..சிலரையாவது கண் தானத்திற்கு ஊக்குவித்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை!
பதிலளிநீக்குஎண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்?
பதிலளிநீக்குமுகக்கண் இரண்டு
அகக்கண் ஒன்று
நக்கண் இருபது
நெற்றிக்கண்
அறிவுக்கண்
அங்கமெல்லாம் உணர்வுக்கண்
என கண்களாய் நீக்கமற நிறைந்திருக்கும்
சான்றோர் உண்டு அவனியில் ........
தொடர்ந்தும் உங்கள் பதிவுகள் என்னை ஏதோ ஒருவகையில் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன//
பதிலளிநீக்குவாழ்த்த எனக்கு வயதில்லை, இருந்தாலும்சமூகநலனில் அக்கறை கொண்ட உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்/