வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 7 ஏப்ரல், 2012

தாலாட்டுப் பாடத்தெரியுமா?





தாயின் கருவறையில் இருக்கும்போது
அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!

நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்..

நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.

முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..
அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி...
என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.

இதோ நானறிந்த தாலாட்டு..
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..


இப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும்,  பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.
இணையத்தில் உலவியபோது தாலாட்டு என்னும் வலைப்பதிவு கண்ணில்பட்டு வியப்பை ஏற்படுத்தியது. நீங்களும் சென்று பாருங்களேன்..

23 கருத்துகள்:

  1. ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. தாலாட்டு - பாவால் ஆட்டுதல்- குழச்தையின் பன்முக வளர்ச்சிக்கு உறுதுணையான முக்கியமான ஒன்று. இது அருகி வருவது தான் துன்பம். நல்ல இடுகை. மற்றத் தாலாட்டை மாலையில் பார்க்கிறேன் நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தோழர்..எப்படியிருக்கிறீர்கள்..தாலாட்டு அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் நலமறிய ஆவல் கவிஞரே..

      வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி.

      நீக்கு
  4. மேலே சுழற்புகைப்படத்தைக் கண்டேன்..படைப்பாளிகள் வலைப்பூவை அலங்கரிக்கிறார்கள்..சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கவிஞரே..
      எழுத்துக்களால் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள்.

      நீக்கு
  5. வெகு அழகான தாலாட்டு.
    பெரும்பாலோர் இன்றும்கூட பாடிவருவது.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதோர் வலைப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி முனைவரே... தாலாட்டுப் பாடல்கள் இல்லாமலே போய்விடுமோ என சில சமயங்களில் தோன்றும். அவற்றைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு தளத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.
    தாலாட்டு நன்றாக பாடுகிறவர்கள் பாடினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அன்புநிறை முனைவரே,
    நான் வித்தியாசமாக தந்தையின் தாலாட்டு கேட்டு வரைந்தவன்.
    பத்து வயது வரை என் தந்தை படுத்துக்கொண்டு அவர் மார்மேலே
    எனைப் போட்டுக்கொண்டு
    உழவுப் பாடல்களையும் ஏற்றப் பாடல்களையும்
    ஊட்டி ஊட்டி வளர்த்தார்..

    அவர் பாடிய ஒரு தாலாட்டில் எனக்கு நினைவில் இருந்த ஒன்று..

    " பொத்தி வச்ச
    பூங்குயிலே - ஐயா
    பூங்கொடியின் மன்னவனே
    ஆளுயர வளர்ந்திடய்யா - ஐயா
    ஆணைப்போர் விளக்கிடய்யா

    ஆவாரம் பூவெடுத்து - ஐயா
    ஆலவட்டம் போட்டுவைச்சேன்
    நீ போகும் பாதையிலே - ஐயா
    பூக்களாலே நிறைச்சு வச்சேன்!!

    கண்ணுறங்கு கண்ணுறங்கு -ஐயா
    காவலனே கண்ணுறங்கு"

    இப்போது நினைத்தாலும் கண் கலங்குகிறது..
    என் பிள்ளைகளுக்கு இது போன்ற நிறைய
    பாடல்கள் பாடியிருக்கிறேன்.

    தாலாட்டு என்ற அருமையான ஒரு செய்தியை
    இங்கு பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாலாட்டுக் கேட்டு மகிழ்ந்தேன் அன்பரே..
      அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. தாலாட்டு வலைத்தளத்தை முன்பே அறிந்திருக்கிறேன். மிக அரிய தாலாட்டுப்பாடல்களைத் தாங்கி நிற்கும் ஒரு அற்புதத் தளம். பலரும் அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி. தாலாட்டு என்பது தாய்க்கும், சேய்க்குமான பிணைப்பை இறுக்கும் ஒரு அருமையான செய்கையாகும். அதைப் பல குழந்தைகள் இன்று அனுபவிக்காமலேயே வளர்வது வருத்தத்துக்குரியது. தாலாட்டு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய குழந்தைகள் தாலாட்டு பாடல்களை கேட்காமல் வளர்வது வருத்தமளிக்கிறது.

    தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    பதிலளிநீக்கு